Published:Updated:

ஸ்க்ரீன் ஷாட்!

ஸ்க்ரீன் ஷாட்!

ஸ்க்ரீன் ஷாட்!

சுட்ட பழம்:-

கோயில்ல நடந்த கல்யாணத்துல 101 ரூவா மொய் வச்சுட்டு வந்து  பாத்தா, 300 ரூவா செருப்ப காணோம்.... அடேய் என் கணக்குல 401ன்னு எழுதிக்கங்கடா... :'(

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்க்ரீன் ஷாட்!

நிவேதா:-

ஏரியின் வாழ்வுதனை ஃப்ளாட் கவ்வும், மறுபடியும் ஏரியே வெல்லும்.

மோகினி:-

சாப்டும்போது திட்டுன்னா, தட்ட விட்டு எழுந்து போறது எல்லாம் அந்த காலம். தட்டோட எழுந்து போறதுதான் இந்த காலம்.. மாஆஆ இன்னொரு முட்டை எடுத்தா.

நித்து @nithu_ji

சின்ன சின்ன எறும்புகள் வரிசையாய் நகர்ந்து செல்லுதலை கண்ட மனிதன் `க்யூ' வரிசையை உண்டாக்கி இருக்க வேண்டும்...

மீனம்மா @meenammakayal

ஸ்க்ரீன் ஷாட்!

கலர்பொடிகளை எடுத்துக்கொண்டு கோலம் போடப்போவதாக சொல்லிச் சென்றாள் மகள், ரங்கோலியாக திரும்பி வருகிறாள்.

நித்திலன் @nithil_an

நமக்கு, நம் மேலயே எந்த அளவுக்கு நம்பிக்கை இல்லாம இருக்கோம்கிறதுக்கு அலாரம்தான் உதாரணம்.

ஜார்விஸ் @Rajasirr

ட்விட்டருக்கு வெளியே அழகான உலகம் இருக்கிறது... அந்த உலகத்தை சுற்றி பார்க்கும் அளவுக்கு பணவசதி இல்லாததால் ஆஃபரில் நெட்பேக் போட்டு இங்கனயே...

பனித்துளி @mymindvoice

என் கருத்தில்

சரி - தவறு குழப்பமில்லை...

அதை வெளிப்படுத்துவது...

சரியா தவறா என்பதில்தான்

என் எல்லா குழப்பமும்...

ஸ்க்ரீன் ஷாட்!

பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்துவிட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்தபோது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்துக்கு சென்றுவிட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன.

ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்துவிட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

ஸ்க்ரீன் ஷாட்!

அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்காவிட்டால் அந்தத் தண்ணீர் வீணாகிவிடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்தரவாதமும் உள்ளது. அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்துவிடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.

ஒருவேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்பு இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக நாமே காரணமாகிவிடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.

அவன் அதற்கு மேல்  யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றிவிட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்துவிட்டு அந்த ஜக்கில் நீரையும் நிரப்பிவிட்டுச் செல்கையில் அவன் மனமும் நிறைந்திருந்தது.

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.

இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.

`யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம்

இன்பமயமாகிவிடும் அல்லவா?

தொகுப்பு:  பொன்.விமலா, கார்த்தி, எஸ்.கே.பிரேம்குமார், ஐ.மா.கிருத்திகா, லோ.சியாம்சுந்தர்