Published:Updated:

டூனி கிஃப்ட்ஸ்... சூப்பர் டூப்பர் ஹிட்!

டூனி கிஃப்ட்ஸ்... சூப்பர் டூப்பர் ஹிட்!

புரொஃபைல்!

சென்னை, ஐகாட் டிசைன் அண்ட் மீடியா காலேஜில் அட்வர்டைஸிங் அண்ட் டிசைனிங்கில் முதுகலை மாணவி, இந்த பிரியா மார்டியா. பார்ட் டைமா, ‘டூனி கஸ்டமைஸ்டு கிஃப்ட்ஸ்’ செய்றேன். அதாவது, வாடிக்கையாளர்களுக்கு அவங்க பெயர், போட்டோ, பெர்சனல் வாக்கியங்கள்னு பிரத்யேகமா செய்ற பரிசுப்பொருட்கள். உதாரணமா, கிஃப்ட்டுக்கு உரியவங்களோட போட்டோக்களை வெச்சு போட்டோ கியூப், பாட்டிலுக்குள் போட்டோக்கள் அரேஞ்சு பண்ணி லைட்டை ஸ்விட்ச் ஆன் செய்றது, போட்டோ சாக்லேட்டில் ‘மேனுஃபேக்சர்டு பை’ இடத்தில் பரிசளிக்கிறவங்களோட பெயர், ‘இன்கிரிடியன்ட்ஸ்’ இடத்தில் ‘அன்பு, சந்தோஷம், காதல்’னு கியூட் வேர்டிங்ஸ், கிரியேட்டிவ் திருமண அழைப்பிதழ்கள்... இப்படி பெரிய லிஸ்ட் இருக்கு!

டூனி கிஃப்ட்ஸ்... சூப்பர் டூப்பர் ஹிட்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆரம்பம்!

என் பெஸ்ட் ஃப்ரெண்ட் பர்த்டேக்கு கார்ட்டூன் கிஃப்ட் தேடி அலைஞ்சப்போ கிடைக்கலை. நானே ஒரு ஹேண்ட்மேட் கார்ட்டூன் கிஃப்ட் செய்து கொடுக்க, அவ ரொம்ப சந்தோஷப்பட்டா. தொடர்ந்து கார்ட்டூன் கிஃப்ட்ஸ் செய்தேன். அப்போ எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் விஸ்காம் படிச்சிட்டு இருந்த எனக்கு, கோர்ஸில் கத்துக்கிட்ட விஷயங்கள் எல்லாம் கைகொடுக்க, என்னோட ‘டூனி கிஃப்ட்ஸ்’-ஐ தொழிலாவே ஆரம்பிச்சுட்டேன். கஸ்டமைஸ்டு கிஃப்ட்ஸை, என் ஸ்பெஷாலிட்டி ஆக்கிக்கிட்டேன். அப்போ பேரன்ட்ஸ் பொருட்கள் வாங்க கொஞ்சம் பணம் கொடுத்தாங்க. இப்போ என் என் செலவுகளை நானே பார்த்துக்குறேன்!

டைம் மனேஜ்மென்ட்!

காலேஜ் இல்லாத சமயத்தில் கிராஃப்ட்தான் வேலை. டைம் மேனேஜ்மென்ட் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா, முடியாததில்லை. என்ன ஒண்ணு... கிளாஸ் ஹவர்ஸ்ல கஸ்டமர்ஸ் போன் செஞ்சா அட்டெண்ட் பண்ண முடியாது. மத்தபடி ஐ கேன் மேனேஜ்!

மார்க்கெட்டிங்!

ஒரு கஸ்டமருக்கு செய்து கொடுத்த கிஃப்ட்டை இன்னொருத்தருக்கு ரிப்பீட் செய்றதில்லை. அதேபோல, ‘இந்த மாதிரி வேணும்’னு கேட்கிற கஸ்டமர்களோட ரெக்வெஸ்ட்டுக்கும் `நோ' சொல்றதில்லை. இதெல்லாம் ‘டூனி கிஃப்ட்ஸ்’ஐ பலரும் டிக் செய்ற அளவுக்கு என்னைக் கைதூக்கிவிட்டது. இப்போ 50 ரூபாயில் இருந்து 4,000 ரூபாய் வரையிலான கிஃப்ட்கள் என்னிடம் கிடைக்கும். இந்தியா முழுக்க ஷிப்பிங் செய்றேன்.

மெசேஜ்!

புதுசா தொழில் தொடங்கறவங்க, உங்க பிசினஸில் ஒரு தனித்துவத்தை உருவாக்கிக்கோங்க. ஹார்டு வொர்க்கைவிட, ஸ்மார்ட் வொர்க் நல்ல ரிசல்ட் தரும்!’’

இன் ஃபியூச்சர்!

பெப்பர் டேப், ஜீனி, க்ரோஃபர்ஸ் போன்ற ஆன்லைன் நிறுவனங்களுடன் டை-அப் செய்யுறதுக்கான வேலைகளை சின்சியராப் பார்க் கணும்!

ஐ.மா.கிருத்திகா படம்:மா.பி.சித்தார்த்