Published:Updated:

காலம் கடந்து போகும்... காயம் பழகிப் போகும்!

காலம் கடந்து போகும்... காயம் பழகிப் போகும்!

யாராகிவரும் ‘தங்கமகன்’ திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, ஹிட் அடித்துள்ளன. குறிப்பாக, இளசுகளின் செல்போன் ரிங் ட்யூன், காலர் ட்யூனாக ஒலித்துக்கொண்டிருக்கும் ‘என்ன சொல்ல’, ‘ஜோடி நிலவு’ ஆகிய இரண்டு பாடல்களைக் குத்தகைக்கு எடுத்தவர், ஸ்வேதா மோகன்! அவருடன் ஒரு சங்கீத சந்திப்பு...

காலம் கடந்து போகும்... காயம் பழகிப் போகும்!

‘‘சில மாசத்துக்கு முன்னாடி தனுஷ் சாரும், அனிருத்தும் ‘தங்கமகன் படத்துல ஒரு பாட்டுக்கு உங்க வாய்ஸ் செட் ஆகுமானு பார்க்கணும்; ஒரு சின்ன டிராக் பாட வாங்க’னு கூப்பிட்டாங்க. நான் போனதுக்குப் பிறகுதான் ‘என்ன சொல்ல’ பாடலை எழுதவே ஆரம்பிச்சாரு, தனுஷ் சார். நான் டிராக் பாடப் பாட, அவர் டக்கு டக்குனு பாட்டை என் நோட்ல எழுதினதைப் பார்த்து ஆச்சர்யமாகிட்டேன். பாடி முடிச்சதும் ஒருமுறை டிராக்கை கேட்டோம். ‘வாய்ஸ் சூப்பர்; ரெக்கார்டிங் பண்ணிடலாம்!’னு சொன்னாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

லேட் நைட்கூட இல்ல... கிட்டத்தட்ட அதிகாலைக்கு கொஞ்சம் பக்கத்துல மொபைல் நேரம் காட்டினப்பதான் டிராக் முடிஞ்சது. பிறகு, ‘ஜோடி நிலவு’ பாட்டோட முழு டியூனை எனக்குப் போட்டுக் காட்டினாங்க... சூப்பர்ப்! கொஞ்ச நாள் கழிச்சி, ரஹ்மான் சாரோட ஏ.எம். ஸ்டூடியோவுல ரெக்கார்டிங். அங்க போன பிறகுதான் தெரிஞ்சது... ‘ஜோடி நிலவு’ பாட்டும் நான்தான் பாடப்போறேன்னு! அதையும் தனுஷ் சாரே எழுதி, பாடியும் வெச்சிருந்தாரு. பிறகு ஃபீமேல் போர்ஷனை நான் பாடினேன். ரெக்கார்டிங் தியேட்டர்ல முதல்ல ‘என்ன சொல்ல’, அப்புறம் ‘ஜோடி நிலவு’ ரெண்டையும் அவ்ளோ ரசிச்சுப் பாடி முடிச்சேன். ஆடியோ ரிலீஸுக்கு கொஞ்ச நாள் முன்னாடி, தனுஷ் சார் என் நோட்ல எழுதின ‘என்ன சொல்ல’ பாட்டை ட்விட்டர்ல ட்வீட் பண்ணி விட்டேன். லிரிக்ஸ் பாப்புலர் ஆகிடுச்சி.

ரெக்கார்டிங் தியேட்டர்ல பாடினதுக்கும், எல்லா இசை வேலைகளும் முடிஞ்சு ஆடியோ ரிலீஸுக்கு அப்புறம் நான் பாடின பாட்டைக் கேட்கிறதுக்கும் இடையில் அந்தப் பாட்டு அவ்ளோ அழகா முழுமை பெற்றிருந்துச்சு. ரெண்டு பாட்டுலயும் ‘ஜோடி நிலவு’தான் என் ஃபேவரைட். அந்த டியூன் என்னன்னமோ பண்ணும். அந்தப்  பாட்டுல வர்ற `காலம் கடந்து போகும்...காயம் பழகிப் போகும்'ங்கிற  வரி எனக்கு ரொம்பவே பிடிக்கும்.  ‘தங்கமகன்’ல பாடின இந்த ரெண்டு பாட்டையும், தெலுங்கு வெர்ஷன்லயும் நானே பாடினேன். ஆரம்பத்தில் தனுஷ் சார் கூப்பிட்டப்போ, ‘வாய்ஸ் கொஞ்சம் சரியில்ல’னு சொன்னேன். ‘பரவால்ல வாங்க பாத்துக்கலாம்!’னு சொன்னார். தமிழ்ல வெர்ஷன்ல இல்லாத சில சங்கதிகளையும் சேர்த்து, தெலுங்கு வெர்ஷன் இன்னும் வித்தியாசமா இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம்னு நான் நிறைய மொழிகளில் பாடிட்டு இருக்கேன். இந்தியில சங்கர் - எஷான் - லாய் கூட்டணி இசையில் பாடணும் என்பதுதான் நீண்ட நாள் பெண்டிங்ல இருக்கிற நிறைவேறாத ஆசை. வெயிட் பண்ணுவோம்.

என்னோட ‘பெனெட்' (Bennet) மியூசிக் பேண்ட் மூலமா, நிறைய கச்சேரிகள் பண்ணிட்டு இருக்கேன். என் பேண்ட்ல நான் மட்டும்தான் பாடுவேன். தேவைக்கேற்ப ஒரு மேல் சிங்கரை பாட வைப்போம். மெலடி, குத்துனு வெரைட்டியா இருக்கும். இப்போ நானே பாடி, நடிச்சு ஒரு ஆல்பம் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரமே ரிலீஸ். ஏதாவது கச்சேரின்னா, அடுத்த ரெண்டு நாளைக்கு மௌன விரதம் இருந்து தொண்டைக்கு ரெஸ்ட் கொடுக்கிறது, எப்பவும் குளிர்ச்சியான உணவுகளுக்கு நோ சொல்றது... இது என் குரலுக்காக நான் பண்ற மரியாதை.

இவ்வளவு பேசிட்டு, என் அம்மாவை பத்தி பேசலைன்னா எப்படி?! ஒரு சீனியர் சிங்கரா அம்மா சுஜாதா, எனக்கு நிறைய அட்வைஸ், டிப்ஸ் கொடுப்பாங்க. நான் பாடின ஒவ்வொரு பாட்டுக்கும் பாசிட்டிவ், நெகட்டிவ் ஃபீட் பேக் முதல்ல வர்றது அவங்ககிட்ட இருந்துதான். லவ் யூ மம்மி!’’

`பூ பூக்கும் ஓசை... அதை கேட்கத்தான் ஆசை'என்ற பாடலை `மின்சாரக் கனவு' படத்தில் பாடிய சுஜாதாதான் அந்த மம்மி!

கு.ஆனந்தராஜ், படம்: எம்.உசேன்

ஸ்மார்ட்போனில் பார்க்கலாம்!

காலம் கடந்து போகும்... காயம் பழகிப் போகும்!

இதன் வீடியோவைப் பார்க்க உங்கள் ஸ்மார்ட்போனில் QR code reader என்னும் இலவச ஆப்ஸை முதலில் டவுன்லோடு செய்யுங்கள். பிறகு உங்கள் செல்போன் மூலம் QR code-ஐ ஸ்கேன் செய்து பார்க்கலாம். அல்லது www.facebook.com/avalvikatan என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும் பார்க்கலாம்.