Published:Updated:

'புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவன!'

-கிடுக்குப்பிடி வெளிநாட்டுச் சட்டங்கள்

‘உயிர்காக்க ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம்’னு கோர்ட் சொன்னா... நம்ம மக்களோட முக்கலும் முனகலும் சொல்லி மாளலை. இந்த நியாயமான சட்டத்துக்கே இப்படி ரியாக்ட் பண்றவங்க, வெளிநாட்டில் உள்ள கிடுக்கிப்பிடி சட்டங்கள் எல்லாம் தெரிஞ்சா, நம்ம நாட்டுச் சட்டங்களை விழுந்து விழுந்து கும்பிடுவாங்க. நாம இங்க அன்றாடம் அசால்ட்டா செய்ற விஷயங்கள்கூட அங்க தண்டனைக்குரிய குற்றம்! மக்களே... படிச்சுப் பாருங்க இதையெல்லாம்...

முத்தம்... ஒரு வருட சிறைத் தண்டனை!

'புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவன!'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அரபு நாடுகள்ல பொது இடங்களில் ஜோடிகள் அன்பை வெளிப்படுத்துறது, கட்டிப்பிடிக்கிறது, சின்னதா கன்னத்தில் முத்தம் கொடுக்கிறதை எல்லாம் பார்த்தா, 10 நாட்கள் ஜெயில்ல தூக்கிப் போட்டுடுவாங்க. வாயோடு வாய் வைத்தால், ஒரு வருட சிறைத் தண்டனை கன்ஃபர்ம்!

இது சூப்பர் மேட்டரு!

'புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவன!'

டென்மார்க் ஹோட்டல்கள்ல சாப்பிட்டு வயிறு நிறையலைன்னா, அந்த சாப்பாட்டுக்குப் பணம் செலுத்தத் தேவையில்லை என்பது சட்டம். இந்த நாட்டுல பகல்லயும் லைட் போட்டுதான் வண்டி ஓட்டணும். இல்லைன்னா, கட்டணும் ஃபைன்!

நோ டிரைவிங்... கேர்ள்ஸ்!

'புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவன!'

சவுதி அரேபியாவில், பெண்கள் வாகனம் ஓட்ட உரிமை இல்லை!

வண்டியைத் துடைச்சு சுத்தமா வெச்சுக்கலைன்னா, கட்றா ஃபைன்!

'புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவன!'

ரஷ்யா, மாஸ்கோ நகர்ல பொதுமக்கள் தங்களோட சொந்த வாகனமான கார், வேன் போன்றவற்றை சுத்தமா மெயின்டெய்ன் செய்யலைன்னா அபராதம் விதிக்கப்படும்!

சில்லறை கொடுக்க `தடா'!

'புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவன!'

கனடாவில் 10 டாலருக்கு அதிகமா பொருள் வாங்கிட்டு, சில்லறையா பணம் செலுத்தத் தடை!

குண்டானால் அபராதம்!

'புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவன!'

ஜப்பான் நாட்ல மக்கள் தங்களோட எடையை அரசு பரிந்துரைக்கிற எடை, உயரம் சார்ட்டின்படி பராமரிக்கணும். ஓவரா வெயிட் போட்டா அபராதம் கட்ட வேண்டும்!

பல்பு மாத்தினா, சட்டம் பாயும்!

'புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவன!'

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகர்ல எலெக்ட்ரிகல் வேலைகளை பொதுமக்கள் செய்யக்கூடாது. சின்ன பல்பு மாத்தணும்னாகூட சான்று பெற்ற எலெக்ட்ரீஷியனைதான் அழைக்கணும்!

இப்போ சொல்லுங்க... ‘இன்டாலரன்ஸ்’ பத்தி பேசுறவங்களுக்கு எல்லாம் இதுல எந்த நாட்டுக்கு டிக்கெட் எடுக்கலாம்?!

 பெ.மதலை ஆரோன்