Published:Updated:

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

மீபத்தில் சென்னை, கடலூரைச் சுழற்றிய மழையின் ஊடே கதகத கருணைத் தீயாகத் சேர்ந்தது ஒரு ஜோதி. இணையத்தில் வெட்டியாகப் பொழுதைக் கழிக்கும் இளைய தலைமுறை என்று இதுவரை சாடப்பட்ட நெட்டிசன்கள், தகவல் தொடர்பில் மனிதச் சங்கிலி அமைத்தார்கள். சோஷியல் மீடியாவை துரித சேவைப் பணிகளுக்குப் பயன்படுத்தி, களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் கிடைக்கச் செய்த அவர்களின் வேகமும், அக்கறையும் சல்யூட் அடிக்க வைத்தன. இன்னொரு பக்கம், வெள்ள நீரில் இறங்கி வேலை பார்த்த செலிப்ரிட்டிகள் பலர்,‘ரியல் ஹீரோ - ஹீரோயின்’ கிளாப்ஸ் வாங்கினார்கள். அவர்களில் சிலரைப் பற்றிய தொகுப்பு இது...

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!
ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நிருபன்

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

சென்னையில் தனியார் கல்லூரி பேராசிரியர். ஆதரவற்றவர்கள் தங்கியுள்ள விடுதி களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக ‘ஃபீட் த நீட்’ அமைப்பின் மூலம் உதவிகள் செய்துவருகிறார். வெள்ள சமயத்தில் சென்னையின் முக்கியப் பகுதிகளுக்கு உதவிகள் குவிய, ஊடக வெளிச்சம் வராமல் இருந்த வடசென்னையை டிக் செய்தார் நிருபன். ஆவடியில் இருக்கும் இவர், ஐ.டி-யில் பணிபுரியும் நண்பர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து மணலி, திருவொற்றியூர் பகுதி மக்களை மீட்டார்.

பிரியா ஆனந்த்

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

டிசம்பர் இரண்டாம் தேதி, ‘எல்லோரும் பத்திரமாக இருங்கள்...’ என ட்வீட்டினார் நடிகை பிரியா ஆனந்த். அடுத்தடுத்த நாட்களில் வெள்ளம் மக்களை அடித்துத் துவைக்க, நேரடி யாகக் களத்தில் இறங்கினார். சென்னையின் பல ஏரியாக்களுக்கு தன் குழுவோடு சென்று நிவாரண உதவிகளைச் செய்தார்.

நந்தினிஸ்ரீ

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

பாதிப்பு, நிவாரண உதவி தொடர்பாக வாட்ஸ்அப்பில் வந்த தகவல்களில் பல பொய்யானவை. எனவே, அவற்றை ஜஸ்ட் ஃபார்வேர்டு செய்யாமல், உறுதிப்படுத்தி, நண்பர்களுக்குப் பகிர்ந்து, பலருக் கும் உதவிகள் கிடைக்கச் செய்தார் நந்தினிஸ்ரீ . ‘துயரமான சூழலில் மேலும் குழப்பங்களை ஏற்படுத்தாதீர்கள் ப்ளீஸ்...’ என்று ஃபேக் மெஸேஜ்கள் குறித்த தன் வருத்தத்தையும் பதிவுசெய்தார்.

சித்தார்த்

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

முதல் நாள் மழையில் தண் ணீரில் மூழ்கிய வீடுகளில் நடிகர் சித்தார்த்தின் வீடும் அடக்கம். மாடி வீட்டுக்கோ, சென்னையை விட்டோ செல்ல நினைக்கவில்லை சித்தார்த். ‘ஒரு நடிகனான எனக்கே இந்நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை?’ என்று ட்வீட்டி தன் வருத்தம் சொன்னவர், தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு வார காலம் நிவாரணப் பணிகளுக்காக சென்னை, கடலூர் வெள்ளத்தில் நனைந்து மக்களுக்கு நல்லன செய்தார்.

பிரதீப் ஜான்

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய வானிலை பற்றிக் கணித்து தன் வலைப்பக்கத்தில் எழுதி வருபவர், தமிழ்நாட்டின் `வெதர்மேன்’ பிரதீப்

ஜான். டிசம்பர் மாதத் தொடக் கத்திலேயே, ‘வரலாறு காணாத மழையை காணவிருக்கிறோம்’ என்று தன் முகநூல் பக்கத்தில் எச்சரித்தார் பிரதீப் ஜான். இவரின் மழைக்குறிப்புகள், மழை வதந்திகளில் இருந்து மக்கள் தெளிவு பெற உதவியது.

`ஆர்ஜே’ பாலாஜி

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

தான் வேலை பார்க்கும் எஃப்.எம் நிறுவனம் மூலம் பல தன்னார் வலர்களை ஒருங்கி ணைத்தார். மழை யில் நனைந்து, உலர்ந்து, நனைந்து, காய்ந்து என சித்தார்த்தோடு இணைந்து பாலாஜி ஆற்றிய பணிகள், ஸ்டார் நியூஸ் வேல்யூ பெற்று, தேசிய ஊடகங்களைக் கவனிக்க வைத்தன.

chennai.org

மழை பாதிப்பு நாட்களில் தினமும் யார் யாருக்கு என்னென்ன உதவிகள் தேவைப் பட்டன என்பதைக் கண்டறிந்த ஒரு வாலன்டியர் குழு, http://chennairains.org/ தளத்தில் அந்த விவரங்களைப் பதிவேற்றி, உதவ நினைத்த உள்ளங்களின் கவனத்துக்கு கொண்டு சேர்த்தது. மேலும், பாலமாகப் பணியாற்றியவர்களின் தொடர்பு எண்களையும் பதிவேற்றியது. 

ஷாஜகான்

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

தமிழக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவ, இந்தியா முழுவ திலும் இருந்து தன்னார்வலர்கள் சென்னைக்கு விரைந்தனர். இன்னொரு புறம், மழை அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் இருந்து பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு வெளியேறினார்கள். ஏற்கெனவே வெள்ளத்தால் நெரிசலான சாலைகள், சுங்கச்சாவடி வசூல் காரணமாக மேலும் நெரிசல் ஆவதை பலர் இணையத்தில் கண்டித்தனர். டெல்லியில் வசிக்கும் ஷாஜஹான், தமிழ்நாட்டில் இந்த பாதிப்பு நாட்களில் சுங்கவரி வசூலை தடை செய்ய வேண்டும் என்று, பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல சாலைகளில் சுங்க வரி வசூலை தற்காலிகமாக நிறுத்தியது மத்திய அரசு.

புஹாரி

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

ஓமன் நாட்டில் வசிக்கிறார் புஹாரி.  வாட்ஸஅப் மூலமாக பல தன்னார் வலர்களை குழுக்களாக ஒன்று திரட்டினார். உதவிகள் உரியவர் களுக்குப் போய்ச் சேர்ந்ததா என்பதை ஆன்லை னிலேயே கண் காணித்து பங்களித்தார்.

தனுஷ்

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

தனுஷ், மருத்துவரான தன் தங்கையின் உதவியோடு பல மருத்துவர்களை ஒருங்கிணைத்தார். சென்னையின் பல ஏரியாக்களில் அவர்கள் மூலமாக மக்களுக்கு இலவச உடல்நலப் பரிசோதனைகள் கிடைக்கச் செய்தார்.

செல்வ பிரபு

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

சென்னையில் தனியார் மருத்துவ மனையில் மருத்து வராக பணி புரிகிறார். ஒரு வாரம் பணிக்கு விடுப்பு எடுத்து, சென்னையில் பல இடங்களிலும் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தினார். ‘காற்று மிகவும் மாசுபட்டு இருப்பதால், சுவாசப் பிரச்னைகளுக்கு உடனடியாக சிகிச்சை எடுங்கள்’ என்கிறார் செல்வ பிரபு.

வெற்றி

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

மாநிலத்தில் பல பகுதிகளில் இருந் தும் கடலூருக்கு வந்த உதவிகளை ஒருங்கிணைத்ததில் முக்கியப் பங்காற் றியவர், வெற்றி. கடலூர்க்காரர். அங்கு பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை ஒழுங்கு படுத்தியவர்.

அமர்

‘ஐ’ம் வேரியபிள்’ என்கிற பெயரில் ட்விட்டரில் இயங்குபவர் அமர். ‘கடலூரில் அவ்வளவாகப் பிரச்னை இல்லை’ என்று பலரும் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில், உண்மை நிலை பற்றி பல புகைப்படங்களை அப்லோட் செய்து உலகறியச் செய்தார். தன் குழு மூலம் கடலூரில் மேற்கொள்ளப்படும் உதவிகள் குறித்தும், தன்னார்வலர்கள் கடலூரில் எப்படி சேவைப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்த வழிகாட்டலையும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் அமர்.

ரானா

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

தெலுங்கு நடிகர் ரானா டகுபதி, ‘எங்கள் மெட்ரா ஸுக்காக’ (#Mana MadrasKosam) என்று ட்விட்டரில் டேக்கை உருவாக்கி, பலர் சென்னைக்கு உதவ வழி செய்தார். இந்தி நடிகர்கள் பலரும் ரானாவுக்குப் பொருட்கள் அனுப்ப, பல லாரி உதவிப் பொருட்களை சென்னை கொண்டு வந்து சேர்த்தனர் ரானாவும் மற்றும் பல அண்டை மாநில நடிகர்களும்!

அபிநயா

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

தனக்குப் பின்தான் தானமும்  தர்மமும் என்ற கூற்றை பொய்ப் பித்து இருக்கிறார், முடிச்சூரை சேர்ந்த அபிநயா. பெய்த மழையில், அவர் குடியிருந்த வீடு முழுவதுமாய் மூழ்கிவிட்ட சூழ்நிலையிலும், தன் குழந்தையை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, தன்னைப் போலவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்தார் அபிநயா. ‘பெண்கள் தங்களுக்கான சில உதவிகளை கேட்டுப் பெறுவதில் தயக்கம் இருக்கலாம். ஒரு பெண் வாலன்டியரும் களத்தில் இருந்தால், அவர்களுக்கு வேண்டியது சென்றடையும் என்பதுடன், பிற பெண்களும் சேவைப் பணியில் இணைய முன் மாதிரியாகவும் இருக்கும்’ என்றார் அபி.

ரியல் ட்ரெண்ட் செட்டர்ஸ்!

வெல்டன் வாலன்டியர்ஸ்!

கார்த்தி, படங்கள்: மா.பி.சித்தார்த்