Published:Updated:

"அருணாவோட கணவரா ஆனந்த் பெருமைப்பட்டார்!"

மனிதநேயம்

சென்னை வெள்ளத்தின்போது, ராஜா அண்ணா மலைபுரத்தில் இருக்கும் தன் வீட்டில், நான்கு நாட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும், உறைவிடமும் தந்து ஆதரித்தார், சர்வதேச செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்தின் மனைவி அருணா.

‘‘எங்க ஏரியாவில் நிறைய வீடுகளுக்குள்ள தண்ணி போயிருச்சு. அவங்க எல்லாரும் கஷ்டப்படுறதை ‘யாராச்சும்  காப்பாத’ வருவாங்கனு பால்கனியில நின்னு பார்க்கிற மனசு எனக்கில்லை. எங்கிட்ட யாரும் உதவி கேட்கலைன்னாலும், நானே அவங்க வீட்டுக்குப் போய் எல்லோரையும் அழைச்சுட்டு வந்தேன்.

"அருணாவோட கணவரா ஆனந்த் பெருமைப்பட்டார்!"

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விடாத மழை, வாட்டும் குளிர், மின்சாரமில்லாத இரவு கொண்டு வரும் இருட்டுனு எல்லாத்தையும், நானும், எங்க வீட்டுல இருந்த 16 பேரும் கிட்டத்தட்ட நாலு நாள் அனுபவிச்சோம். தவிரவும், இன்னும் சிலர் அப்பப்போ அடைக்கலம் தேடி வந்து, மழை கொஞ்சம் நின்னதும் வெளியேறியபடினு இருந்தாங்க.

வெளியுலகத்துல இருந்து முடக்கப்பட்டாலும், எல்லோரும் பசியாறும் அளவுக்கு வீட்டில் உணவு தயார் பண்ண முடிஞ்சது. எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து பகிர்ந்து சாப்பிட்டோம். வீட்டில் இருந்த

"அருணாவோட கணவரா ஆனந்த் பெருமைப்பட்டார்!"

போர்வைகளை அவங்களுக்குக் கொடுத்தேன். என் நாலு வயசுக் குழந்தை, என்ன புரிஞ்சதோ தெரியலை, அவனோட டிரெஸ்ஸை அவன் வயதில் இருந்த ஒரு குழந்தைக்குக் கொண்டு போய் கொடுத்ததைப் பார்த்தப்போ... ஒரு தாயா நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அள வில்லை. என் பையனும் அந்தக் குழந்தைகளும் மழைக் கவலைகளை எல்லாம் புறந்தள்ளி, அழகா சேர்ந்து விளையாடி னாங்க.

ஒரு வழியா மழை முடிஞ்சு, வெள்ளம் வடிஞ்சப்போ அவங்க எல்லாம் கிளம்ப... வீட்டுக்கு வந்த விருந்தாளி கிளம்பும் நேரத்தில் பதறும் குழந்தை போல ஆயிருச்சு எனக்கு. ‘இன்னும் ரெண்டு நாள் தங்கிட்டுப் போங்க’னு சொன்னேன். எல்லோரும் நிறைவா சிரிச்சாங்க. ‘இனியும் என்ன உதவி வேணும்னாலும் சொல்லுங்க’னு வழியனுப்பி வெச்சேன்.

என் கணவர், அப்போ ஒரு டோர்னமென்ட்டுக்காக வெளிநாடு போயிருந்தார். பவர், நெட்வொர்க் இல்லாததால அவரால என்னைத் தொடர்புகொள்ள முடியல. மழை முடிஞ்சதும்தான் அவர்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். ‘சூப்பர்ப் ஜாப்! அவங்களுக்கு இன்னும் என்னவெல்லாம் உதவ முடியுமோ அதைச் செய் அருணா!’னு சொன்னவர் குரலில் கொஞ்சம் பெருமிதம். ஆனந்த்தோட எத்தனையோ வெற்றிகளில் அவர் மனைவியா எவ்வளவோ பெருமைப்பட்டிருக்கேன். ஆனா, `அருணா வோட கணவர் ஆனந்த்’னு அவர் பெருமைப்பட்ட அந்தத் தருணம், பொக்கிஷம் எனக்கு!

தொடர்ந்த நாட்களில், தினமும் நிவாரணப் பணிக்கு பங்களிச்சேன். அதை போனில் ஆனந்த் தொடர்ந்து விசாரித்தபடியே இருந்தார். இந்த மழையில் மலர்ந்த மனிதநேயப் பூக்களில் ஒண்ணு, எங்க வீட்டுத் தொட்டியிலும் பூத்ததுனு நினைக்கும் போது அவ்ளோ நிறைவா இருக்கு!’’

- கண்கள் விரிகின்றன அருணாவுக்கு!

 சு.சூர்யா கோமதி