Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

முட்டிபோட்டு வேண்டினால்... முட்டுகட்டைகள் விலகும்!-வில்லியனூர் புனித லூர்து அன்னை

ஃபிரான்ஸின் லூர்து நகருக்குப் பிறகு உலகிலேயே முதல் முறையாக லூர்து மாதாவின் பெயரில் திருத்தலம் அமைந்தது, மற்றும் ஆசிய கண்டத்திலேயே தமிழர்களின் மரபுப்படி கோயிலுக்கு எதிரே குளம் அமைந்திருப்பது என்ற சிறப்புகளைப் பெற்று கம்பீரமாக நிற்கிறது, புதுச்சேரி மாநிலம், வில்லியனூரில் உள்ள புனித லூர்து அன்னை திருத்தலம்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

ஆலயத்தில் கருணையோடு காட்சியளித்துக் கொண்டிருக்கும் அன்னையின் திருவுருவ சொரூப மானது, லூர்து நகரில் அன்னையின் அற்புதக் காட்சி களைப் பெற்ற பெர்னதெத்தின் மேற்பார்வையில் தயா ரிக்கப்பட்டு இங்கே அரியணை ஏற்றப்பட்டது. ஆசிய கண்டத்திலேயே போப்பாண்டவர் பதின்மூன்றாம் சிங்கராயர் பெயரில் முடிசூட்டப்பட்ட ஒரு சில ஆலயங்களில் இ்ந்த ஆலயமும் ஒன்று. ஆயிரக்கணக் கான மக்களை ஆர்ப்பாட்டமே இல்லாமல் அன்றா டம் தன்னை நோக்கி ஈர்த்துக்கொண்டிருக்கும் இந்த அன்னையின் மகிமைக்குச் சான்று, மதப்பாகுபாடு களின்றி முஸ்லிம்களும் இந்துக்களும் அதிகளவில் இத்திருத்தலத்துக்கு வந்து பிரார்த்திப்பதே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1867-ம் ஆண்டு வில்லியனூரில் கிறிஸ்தவர்களுக்கென எந்த ஒரு ஆலயமும் இல்லாமல் இருந்தது. இதனால் புதுச்சேரியில் அப் போதிருந்த மறை போதக சபையினர் வில்லியனூரில் ஆலயம் ஒன்றை அமைப்பதற்காக ஓர் இடத்தை வாங்கினர். அந்த இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டப்போவதை அறிந்த சிலர் எதிர்ப்பு தெரிவிக்க, ஆலயம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியின் பிரபல மருத்துவ நிபுணராக விளங்கிய லெப்பின் என்பவரது குழந்தை கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டது. குழந்தை இனிமேல் உயிர் பிழைக்காது என்று அனைவரும் நினைத்துவிட்ட நேரத்தில் குழந்தையின் தாய், ‘கடவுள் என் மேல் சித்தம் வைப்பாரானால் என் குழந்தை மார்த்தாள் உயிர் பிழைப்பாள்’ என அன்னையை வேண்டினார். அதன்படியே அந்தக் குழந்தை பூரணமாக குணமடைந்தாள். தன் குழந்தைக்கு மறுவாழ்வு கொடுத்த தேவ அன்னைக்கு சிறு செபக் கூடம் கட்டுவதற்காக தனது ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை நன்றியாக அளித்தார் அந்தத் தாய். அதனை மகிழ்வுடன் ஏற்றுக்

கொண்ட மறை போதக சபையினர் வில்லியனூரில் தேவ அன்னைக்கு ஆலயம் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்ததுடன் அதற்கான செயல்களிலும் உடனே இறங்கினர்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

இதற்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து வில்லிய னூருக்கு அருகில் இருந்த கணுவாப்பேட்டை என்ற கிராமத்தில் ஓர் இடத்தை பணம் கொடுத்து வாங்கினர். அதன் பிறகு பெரிதாக தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோதிலும் போதுமான பணம் இல்லாததால் ஆலயம் கட்டுவற்கான பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலை யில் புதுச்சேரியில் ஏழை மக்க ளுக்கு அதிகளவில் உதவிகள் செய்து வந்த பெண் ஒருவர், வில்லியனூரில் அமைய உள்ள ஆலயத்துக்கு லூர்து அன்னையின் திருவுருவ சொரூபம் வாங்கி வைக்க முன்வந்தார்.

1877-ம் ஆண்டு ஆலயத்தின் கட்டுமான வேலைகள் முடிவடைவதற்கு முன்பாகவே ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து பெரிய பெட்டியில் லூர்து அன்னையின் சொரூபம் கப்பல் மூலமாக புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டது. கப்பலில் இருந்து அன்னையின் சொரூபம் இருந்த பெட்டியை இறக்கியபோது அது மூன்று முறை வெவ்வேறு நிலைகளில் கீழே விழுந்த போதிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பின்னர் அந்த சொரூபம் புதுவைப்

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

பேராலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, 1887-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி அரியணை ஏற்றப்பட்டது. தொடர்ந்து அன்னைக்கு முடிசூட்டுவதற்கான உத்தரவை 1886-ம் ஆண்டு போப்பாண்டவர் பதின்மூன்றாம் சிங்கராயர் வழங்கியதையடுத்து திருமுடி சூட்டப்பட்டதுடன் திருத்தலமாகவும் உயர்த்தப்பட்டது. அன்றிலிருந்து இத்திருத்தலத் தின் கெபியில் காட்சியளிக்கும் அன்னை, தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு மதப்பாகு பாடுகளற்று எண்ணிலடங்காத புதுமைகளை செய்துகொண்டே இருக்கிறார். ஃபிரான்ஸ் நாட்டில் அன்னை மரியாள் காட்சி கொடுத்த மசபியேல் குகையில் இருந்து ஒரு சிறிய கல் துண்டு எடுத்து வரப்பட்டு ஆலய பீடத்தின் இடதுபுறம் உள்ள சுவரில் பதிக்கப்பட்டிருக்கிறது.

“அனைத்து சனிக்கிழமை களுமே இங்கு சிறப்புதான் என்றாலும் மாதத்தின் முதல் சனிக்கிழமை இந்தத் திருத்தலத்தின் விழா நாள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அன்று மாலையில் நடைபெறும் திருப்பலியிலும், அதைத் தொடர்ந்து நடக்கும் ஜெபக்கூட்டத்திலும் அனைத்து மதத்தினரும் குடும்பத்துடன் கலந்துகொள்வார்கள். அதே போல் அன்றைய தினம் ஆலயத்தி லேயே தங்கிச் சென்றால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது இங்கு வரும் மக்களின் நம்பிக்கை. அன்றைய தினம் வழங்கப்படும் அன்னதானத்தை பிரசாதமாக மதப்பாகுபாடுகள் இன்றி மக்கள் வாங்கிச் செல்வதை கண்கூடாகக் காணலாம்.

திருமணமாகாதவர்கள், திருமணமாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் என யாராக இருந்தாலும் நவநாள் விரதம் வைத்து ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று ஆலயத்தின் முன்பு அமைந்திருக்கும் குளத்தை முட்டி போட்டுக் கொண்டு அன்னையை வேண்டி சுற்றி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது மாதங்கள் வழிபட்டு வந்தால் அதற்குள் ளாகவே அவர்களின் தேவையை அன்னை நிறைவேற்றிவிடுவார். வேலைவாய்ப்பு, குடும்பப் பிரச்னைகள், கடன் தொல்லைகள் என அனைத்துப் பிரச்னைகளையும் அன்னை கருணை உள்ளத்தோடு நிறைவேற்றுவார். மருத்துவர் களால் கைவிடப்பட்ட நோயாளிகளையும்...  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களையும்கூட அன்னை குணப்படுத்தியிருக்கிறார். எதிர்பார்பே இல்லாமல் வருபவர்களைக்கூட அன்னை வெறும் கையோடு திருப்பி அனுப்புவதில்லை. இந்த திருத்தலத்தில் இருக்கும் மாதாவை மதங்களைக்  கடந்து தனது தாயைப் போல அனைத்து மக்களும் நேசிக்கிறார்கள்!” என்கிறார் பங்குத் தந்தையான அருட்தந்தை எஸ்.ரிச்சர்ட்.

தரிசிப்போம்...

ஜெ.முருகன்