Published:Updated:

க்வில்லிங் கிளாஸ்..!

குயிக் லாபம் தரும் தொடர்!

க்வில்லிங் பெண்டன்ட்... பியூட்டிஃபுல்!

க்வில்லிங் கிளாஸ்..!

``என் சின்ன வயசுலேயே எங்கப்பா, அம்மாவை இழந்துட்டேன். படிப்பு பத்தாம் வகுப்பு. எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்றதுனு தவிச்சப்போதான், கிராஃப்ட் வேலைகள் கத்துக்கிட்டு, அதையே தொழிலாவும் செய்ய ஆரம்பிச்சேன். அதில் என்னை அப்டேட் பண்ணினதில் அவள் விகடன் கிராஃப்ட் பக்கங்களுக்கு பெரிய பங்குண்டு. இன்னிக்கு கிராஃப்ட் வகுப்புகள் எடுக்கிறதோட, ஓசூர், பெங்களூரு வரை ஆர்டர் எடுத்து கிராஃப்ட் அயிட்டங்கள் செஞ்சு கொடுக்கிறேன். மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கிற இந்த தெம்பு, கைவேலை கொடுத்தது!’’ நிறைந்த நம்பிக்கையுடன் பேசும் சென்னை, ‘நட்சத்திரா கிரியேஷன்ஸ்’ கிராஃப்ட் ஷாப்பின் உரிமையாளர் சிந்து, க்வில்லிங் பெண்டன்ட் செயின் செய்து காட்டுகிறார்..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தேவையானவை:

5 mm க்வில்லிங் பேப்பர் - 40 (சிவப்பு), க்வில்லிங் ஊசி, கியர் வயர் - தேவையான அளவு, கோல்டன் பால்

க்வில்லிங் கிளாஸ்..!

செயின் (5 mm) - 1 மீட்டர், பேக் செயின் - 2, வளையம் - 2, கியர் லாக் - 4, கலர் ஸ்டோன்  - 7, ஃபெவிக்கால், வார்னிஷ், பிரஷ், கட்டர், பிளேயர்.

செய்முறை

படம் 1: நான்கு அளவுகளில் பெண்டன்ட்கள் தேவை. நடுவில் உள்ள மெயின் பெண்டன்ட் செய்ய 10 க்வில்லிங் பேப்பர்களும், அடுத்தடுத்துள்ள சைடு பெண்டன்ட்கள் செய்ய முறையே 14, 10, 6 என்ற எண்ணிக்கையிலும் க்வில்லிங் பேப்பர்களை எடுத்துக் கொள்ளவும்.

படம் 2: மெயின் பெண்டன்ட் செய்வதற்கான 10 குவில்லிங் பேப்பர்களை, ஒன்றோடு ஒன்று ஒட்டி நீளத்தை அதிகரித்து ஒரு பெரிய டைட் காயில் செய்துகொள்ளவும். அடுத்து 14 க்வில்லிங் பேப்பர்களை எடுத்து ஏழு ஏழாகப் பிரித்து (இரண்டு சைடுகளுக்கும்), இரண்டு காயில்கள் செய்து கொள்ளவும். இதேபோல 10 க்வில்லிங் பேப்பர்களை ஐந்து ஐந்தாகப் பிரித்து இரண்டு காயில்களும், ஆறு க்வில்லிங் பேப்பர்களை மூன்று மூன்றாகப் பிரித்து இரண்டு காயில்களும் செய்து கொள்ளவும்.

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 3: பெண்டன்ட்களை செயினுடன் இணைக்கும் ஜாயின்டர்ஸ் செய்ய ஏழு க்வில்லிங் பேப்பர் எடுத்து, ஒவ்வொன்றையும் தனித்தனியாகச் சுருட்டி, ஃபெவிக்கால் ஒட்டி, ஏழு ஜாயின்டர்கள் செய்து காயவிடவும். 

படம் 4: காயில், ஜாயின்டர் அனைத்தும் காய்ந்த பிறகு, காயிலின் ஒரு மேற்புறத்

தில் ஃபெவிகால் தடவி படத்தில் உள்ளதுபோல் ஜாயின்டரை ஒட்டிக் காயவிடவும்.

படம் 5: காய்ந்த பெண்டன்டில் ஃபெவிக்கால் தடவி, விரும்பம் போல ஸ்டோன் மற்றும் கோல்டன் பால்களை ஒட்டி அலங்கரிக்கவும்.

படம் 6: பெண்டன்ட்கள் ரெடி.

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 7: கியர் ஒயரை தேவைப்படும் நீளத்துக்கு எடுத்து, மெயின் பெண்டன்ட்டை முதலில் கோக்கவும்.

படம் 8: மெயின் பெண்டன்ட்டின் இடது புறம் ஒரு கிரிஸ்டல் பால், நான்கு கோல்டன் பால், சிறிய பெண்டன்ட் என படத்தில் காட்டியுள்ளபடி ஒன்றன் பின் ஒன்றாக (முறையே ஏழு, ஐந்து, மூன்று க்வில்லிங் பேப்பர்களில் செய்த சைடு பெண்டன்ட்கள்) கோத்து, பின் விரும்பும் நீளத்துக்கு கோல்டன் பால்களை கியர் வயரில் கோத்துக்கொள்ளவும்.

படம் 9: இதே போன்று மெயின் பெண்டன்ட்டின் மற்றொரு புறத்திலும் கோக்கவும்.

படம் 10: பெண்டன்ட்கள் மற்றும் பால்கள் உருவிவிடாதபடி இருபுறமும் கியர் லாக்கை கோத்து கட்டரால் அழுத்தி கியர் ஒயரை வளைத்துவிடவும்.

படம் 11: கியர் ஒயர் வளைத்து விட்ட இடத்தில் இருபுறமும் வளையத்தைச் சேர்க்கவும்.

படம் 12: வளையத்தில் பேக் செயினை கோத்து இறுக்கவும்.

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 13: பியூட்டிஃபுல் க்வில்லிங் பெண்டன்ட் செயின் ரெடி. நீண்ட நாள் உபயோகத்துக்கு இதில் வார்னிஷ் அடித்தும் பயன்படுத்தலாம்.

``அரை மணி நேரத்தில் செய்யக்கூடிய இந்த பெண்டன்ட்டுக்கு என்ன விலை வைக்கலாம்?! 500 ரூபாய் வரை! எனில், வருமானமும் பியூட்டிஃபுல் தானே?!’’

- புருவங்கள் உயர்த்திக் கேட்கிறார் புன்னகையுடன், சிந்து!

- க்வில்லிங் கிளாஸ் தொடரும்...

சு.சூர்யா கோமதி  ஜெ.வேங்கடராஜ்

அடிப்படை உருவங்கள் செய்துகொள்வோம்...

பெண்டன்டுக்கான காயில் பேஸ்

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 1: க்வில்லிங் ஊசி துளை

யில் க்வில்லிங் பேப்பரை நுழைத்து, சற்றுத் தளர்வாக காயில் போல சுற்றவும்.

படம் 2: சுற்றிய பேப்பர் உருவி விடாதவாறு காயிலின் மையத்தில் பிடித்துக்கொண்டு, ஊசியில் இருந்து மெதுவாகக் கழற்றவும்.

படம் 3: காயிலின் இறுதி முனையில் ஃபெவிக்கால் தடவி காயிலுடன் ஒட்டிக் காயவிடவும்.

பெண்டன்ட்களை செயினுடன் இணைக்கும் ஜாயின்ட்டர்

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 1: க்வில்லிங் ஊசி துளையில் குவில்லிங் பேப்பரை நுழைத்து, படத்தில் உள்ளது போல சற்று இடைவெளி விட்டு பக்கவாட்டில் சுற்றவும்.

படம் 2: அதை ஊசியில் இருந்து கழற்றி ஃபெவிக்கால் தடவிக் காயவிடவும்.

இப்போது பெண்டன்ட்கள் செய்யலாம்.