Published:Updated:

வாசகிகள் கைமணம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

வாசகிகள் கைமணம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

Published:Updated:

சுவை ப்ளஸ் சக்தி... டூ-இன்-ஒன் ரெசிப்பிகள்!

புரோட்டீன் லட்டு

வாசகிகள் கைமணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவையானவை: முளைவிட்ட கேழ்வரகின் மாவு - கால் கிலோ, வறுத்த எள், வறுத்த வேர்க்கடலை - தலா 100 கிராம், சோயா மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

வாசகிகள் கைமணம்

நெய் - 4 டீஸ்பூன், வெல்லம் - கால் கிலோ.

செய்முறை: கேழ்வரகு மாவை பொன்னிறமாக கடாயில் வறுத்து எடுத்து, சிறிதளவு நீர் தெளித்து ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேர்க்கடலையைத் தோல் நீக்கி, எள்ளுடன் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு நெய் விட்டு சோயா மாவை பொன்னிறமாக வறுத்து, வேகவைத்த கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். இதனுடன் பொட்டுக்கடலை மாவு, பொடித்த எள் - வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். வெல்லத்துடன் நீர் சேர்த்துக் கரைத்து, வடிகட்டி கடாயில் சேர்த்து இளம்பாகு வைத்துக்கொள்ளவும். பாகில் மாவை சேர்த்துக் கலந்து, மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி இறக்கி வைத்து, உருண்டைகளாகச் செய்தால்... புரோட்டீன் லட்டு ரெடி.

- எஸ்.நளினி சௌந்தராஜன், சென்னை-100

பச்சை மொச்சைக்காய் ரசம்

வாசகிகள் கைமணம்

தேவையானவை: உரித்த பச்சை மொச்சைக்காய் - 100 கிராம், துவரம்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன், தக்காளி - ஒன்று, காய்ந்த மிளகாய் - 3, மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன் (வறுப்பதற்கு), கொப்பரைத் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயம், மஞ்சள்தூள் - சிறிதளவு, புளி - நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மொச்சைக்காயை வேகவைக்கவும். 3 டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெயைக் காயவிட்டு... மல்லி, காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு, மிளகு, வெந்தயம், பெருங்காயம், கொப்பரைத் துருவல் ஆகியவற்றை சேர்த்து வறுத்து அரைத்துக்கொள்ளவும். புளியை 3 டம்ளர் தண்ணீரில் கரைத்து எடுத்து உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய தக்காளி சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, அரைத்து வைத்த விழுது, வேகவைத்த மொச்சைக்காய், துவரம்பருப்பு மூன்றையும் சேர்த்து பொங்கி வரும் சமயம் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

- மு.பிச்சையம்மாள், தேனி

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

படங்கள்:எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism