அவள் 16
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

"இன்னொரு பேரிடர்... இல்லாமல் காப்போம்!"

"இன்னொரு பேரிடர்... இல்லாமல் காப்போம்!"

மீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.எஃப்.ஐ (EFI- Environmentalist

"இன்னொரு பேரிடர்... இல்லாமல் காப்போம்!"

Foundation of India) என்ற சுற்றுச்சூழல் அமைப்பினர், தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்கள். அதன் ஓர் அங்கமாக, சென்னை, நுங்கம்பாக்கம் ஜெர்மன் இன்ஸ்டிட்யூட்டில் அவர்கள் நடத்திய கலைநிகழ்ச்சி, பரவலாக கவனம் ஈர்த்தது. ‘‘இளைஞர்களே எங்கள் அமைப்பின் பலம்!’’ என்றவாறே பேச்சை ஆரம்பித்தார், இந்த அமைப்பின் நிறுவனத் தலைவர், அருண் கிருஷ்ணமூர்த்தி.

"இன்னொரு பேரிடர்... இல்லாமல் காப்போம்!"

‘‘எங்கள் இ.எஃப்.ஐ. அமைப்பில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நாங்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, டெல்லி மாநிலங்களில் ஏராளமான நீர்நிலைகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

"இன்னொரு பேரிடர்... இல்லாமல் காப்போம்!"

சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது, அதிக பாதிப்புக்கு உள்ளான முடிச்சூர், பெருங்களத்தூர் உட்பட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் 17 பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்தில் 6 பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பேரிடரில் இருந்து மீண்டு வருவதற்கான மூன்று கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

முதல் கட்ட நடவடிக்கை, வெள்ள நீரில் சிக்கிய மக்களைக் காப்பாற்றுவது. இரண்டாம் கட்ட நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது. மூன்றாம் கட்ட நடவடிக்கை, தற்போதைய பேரிடரில் இருந்து மீண்டு வருவது மற்றும் வருங்காலத்தில் இதுபோன்ற பேரிடர் ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டிவை குறித்த விழிப்பு உணர்வு ஊட்டியது.

இந்த நடவடிக்கைகளுக்கான பொருளாதார ஆதரவுக்காக நடத்தியதுதான், இந்த கலைநிகழ்ச்சி. அதில்

"இன்னொரு பேரிடர்... இல்லாமல் காப்போம்!"

எங்கள் இ.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த, 12 - 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளின் இசை, நடனம், தெருக்கூத்து, புகைப்படக் கண்காட்சி போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றன. அதில் கிடைத்த 92,000 ரூபாய் பணம், முடிச்சூர், பெருங்களத்தூர் மற்றும் கடலூர் மாவட்டம் சிறுபாலையூர் பகுதி மக்களுக்குத் தூய்மையான குடிநீர் கிடைக்க வாட்டர் ஃபில்டர் மற்றும் ப்யூரிஃபையர்களை அமைத்துக் கொடுத்திருக்கிறது!’’ என்றபோது, அருண் கிருஷ்ணமூர்த்தி குரலில் நிறைவு.

இ.எஸ்.ஐ. அமைப்பில் ஆறு ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கும் மாலினி ஹரி, மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி இரண்டாமாண்டு விலங்கியல் மாணவி.

‘‘நான் ஸ்கூல்ல படிக்கும்போது, அருண் கிருஷ்ணமூர்த்தி சார் எங்க பள்ளிக்கு வந்து, நம் சுற்றுச்சூழல்,

"இன்னொரு பேரிடர்... இல்லாமல் காப்போம்!"

அது எதிர்நோக்க இருக்கும் அபாயம்பத்தியெல்லாம் விரிவா பேசினார். நம் பூமியைத் தீமைகளில் இருந்து காக்கும் பொறுப்பில் என்னையும் இணைச்சுக்க, நான் இ.எஸ்.ஐ. அமைப்பில் சேர்ந்தேன். விடுமுறை நாட்களில் எங்க அமைப்பு மூலமா நீர்நிலைகளைச் சுத்தம் செய்வோம். என்னைப் பார்த்து என் ஃப்ரெண்ட்ஸ் பலரும் இந்த அமைப்பில் தங்களையும் இணைச்சுக்கிட்டாங்க. நடந்து முடிந்த கலைநிகழ்ச்சியில் என் பங்களிப்பா வயலின் வாசிச்சதோட, உறவினர்கள், நண்பர்கள்னு நிறைய டிக்கெட்கள் விற்றேன்!’’ என்றார் இளமையின் துடிப்புடன்.

எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கும் கவுதமி அசோக், ‘‘நானும் ஸ்கூல் படிக்கும்போது அருண் கிருஷ்ணமூர்த்தி சார் ஸ்பீச் கேட்டு இன்ஸ்பயர் ஆகிதான் இந்த அமைப்பில் சேர்ந்தேன். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக, பல நல்ல விஷயங்களை இந்த அமைப்பு மூலமா செய்துட்டு வர்றேன். கலைநிகழ்ச்சியில் என்னோட சோலோ பரதநாட்டியத்துக்கு கிடைச்ச கிளாப்ஸைவிட, அதனால் சேர்ந்த நிதியுதவியால்தான் சந்தோஷம் எனக்கு! நாங்க வெள்ள நிவாரணப் பணி களில் ஈடுபட்டிருக்கும்போது கவனிச்ச பல மாணவர்களும், ‘நாங்களும் உங்க அமைப்பில் இணையுறோம்’னு ஆர்வமா முன் வந்தாங்க. அதுதான் பெரிய வெற்றி!’’ என்கிறார், `தம்ப்ஸப்’ காட்டி.

கு.ஆனந்தராஜ்