அவள் 16
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

'ஓஹோ' ன்னு வாழவைக்கும் ஒரிகாமி!

'ஓஹோ' ன்னு வாழவைக்கும் ஒரிகாமி!

இன்ட்ரோ!

சென்னை, எம்.ஓ.பி வைஷ்ணவா காலேஜ்ல மார்க்கெட்டிங் படிச்சுட்டு, `ஐகேட்’ல அட்வர்டைஸிங் முடிச்சுட்டு  பிளேஸ்மென்ட்ல போகாத வேலையில்லா பட்டதாரியா இருந்தேன். மேல எம்.பி.ஏ படிக்க ஆசை. அதுக்கு வேலை அனுபவம் இருந்தா நல்லா இருக்குமேனு தோணிச்சு. அதுக்காக சாதாரண 9 டு 5 ஜாப் பிடிக்கலை. புதுசா, பெருசா ஏதாவது செய்யணும்னு யோசிச்சப்போ பிறந்ததுதான், ‘சிம்ப்ளி ஸ்கொயர்’ ஐடியா! ஓ... என் பெயரைச் சொல்லலையே... ஐயாம் ஸ்ருதா கீர்த்தி!

'ஓஹோ' ன்னு வாழவைக்கும் ஒரிகாமி!

முதல் புராடக்ட்!

என்னோட முதல் புராடக்ட், ராக்கி! கேர்ள்ஸ் கேட்கக் கேட்க விதவிதமா வகைவகையா ராக்கிகள் செஞ்சேன். சென்ட்டி மென்டலா முதல் ராக்கியை அம்மாகிட்டதான் வித்தேன்!

பிசினஸ்!

‘சிம்ப்ளி ஸ்கொயர்' (www.facebook.com/SimplySquare) - இதுதான் என்னோட ஸ்டார்ட் அப். ஒரிகாமி எனப்படும், முழுக்க முழுக்க காகிதம் கொண்டே தயாரிக்கப்படுற பயன்பாட்டுப் பொருட்கள்தான் என் பிசினஸ். `ஒன்றுமே இல்லாததில் இருந்து ஏதோ ஒன்று’ என்பதுதான் ஒரிகாமியோட கான்செப்ட். சதுர வடிவிலான ஒரு காகிதத்தில் சின்னச் சின்ன நகைகள், அலங்காரப் பொருட்கள், புத்தர், பிள்ளையார்னு எல்லாமே செய்யலாம்; செஞ்சு... விற்கலாம்!

'ஓஹோ' ன்னு வாழவைக்கும் ஒரிகாமி!

மார்க்கெட்டிங்!

அம்மாவும், அப்பாவும் தூண்களா இருந்து சப்போர்ட் பண்ண... ஒரிகாமியை பிசினஸா ஆரம்பிச்சாச்சு. ஃப்ரெண்ட்ஸ் அண்ட் சோஷியல் மீடியா இருக்கிறதால, மார்க்கெட்டிங் கவலை போயே போச்! ஆரம்பிச்ச மூணே மாசத்துல மாசம் குறைஞ்சது பத்தாயிரம் லாபம் கொடுத்தது ஒரிகாமின்னா, ஆச்சர்யமா இருக்குல்ல?! இதுக்கு அதிக முதலீடு தேவையில்லை. தரமான பேப்பர், க்ளூ மற்றும் இதர உதிரிப் பொருட்கள் போதும். எப்பவுமே தரத்துல நோ கம்ப்ரமைஸ். அப்போதான் கஸ்டமர்கள்கிட்ட இருந்து அடுத்தடுத்த ஆர்டர்ஸ் கிடைக்கும்.

'ஓஹோ' ன்னு வாழவைக்கும் ஒரிகாமி!

படிகள்!

இப்போதைக்கு சோஷியல் மீடியாவை நம்பிதான் பிசினஸ் போயிட்டிருக்கு. கூடிய சீக்கிரம் இணையதளமும் மொபைல் அப்ளிகேஷனும் உருவாகிடும். அதை வெச்சு நேஷனல், இன்டர்நேஷனல் அளவுல பிசினஸை விரிவுபடுத்தணும். கஸ்டமர்களுக்கு குறைந்த செலவில் டெலிவரி பண்றதில் சில கஷ்டங்கள் இருக்கு. ஆனா, ஃப்யூச்சர்ல எல்லாத்தையும் சரிபண்ணி டலாம்.

யுரேகா! 

'ஓஹோ' ன்னு வாழவைக்கும் ஒரிகாமி!

இந்த ஐடியா கிளிக் ஆனது, என் காலேஜ் டேஸ்லதான். ஒரு விநாயகர் சதுர்த்திக்கு, பிள்ளையார் செய்ற போட்டி. என்ன பண்ணலாம்னு கூகுள் பண்ணினப்போதான் ஒரிகாமி பிள்ளையாரைப் பார்த்தேன். மூணாவது பரிசுதான் கிடைச்சது, ஆனா, எக்கச்சக்க பாராட்டுகள். அங்க கியர் போட்டதுதான் இங்க வந்து என்னை நிறுத்தியிருக்கு. கடைசி நேர டெகரேஷனுக்கு ஒரிகாமி ரொம்ப கைகுடுக்கும். சின்னதா ஒரு பேப்பரை ஸ்கொயர் ஷேப்ல கட் பண்ணி விதவிதமா மடிச்சு கலர் பண்ணினா, அலங்காரப் பொருள் ரெடி!

ஹைலைட்!

'ஓஹோ' ன்னு வாழவைக்கும் ஒரிகாமி!

கிஃப்ட் பாக்ஸ், செல்போன் ஸ்டாண்ட்னு இப்போ கார்ப்பரேட் ஆர்டர்கள் வரை கையில் கிடைச்சாச்சு. இருந்தாலும் வர்ற கஸ்டமர்ஸ் எல்லோரும் அந்த ஒரிகாமி பிள்ளையாரை ஒரு கண்ணு வைக்காம போறதில்லை!

ஸ்மார்ட்போனில் பார்க்கலாம்!

'ஓஹோ' ன்னு வாழவைக்கும் ஒரிகாமி!

இதன் வீடியோவைப் பார்க்க உங்கள் ஸ்மார்ட்போனில் QR code reader என்னும் இலவச ஆப்ஸை முதலில் டவுன்லோடு செய்யுங்கள். பிறகு உங்கள் செல்போன் மூலம் QR code-ஐ ஸ்கேன் செய்து பார்க்கலாம். அல்லது www.facebook.com/avalvikatan என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும் பார்க்கலாம்.

தா.நந்திதா படங்கள்:பா.அருண்