அவள் 16
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ஃபேஷன் ஃப்யூஷன்!

ஃபேஷன் ஃப்யூஷன்!

த்தியமங்கலம், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியும், நியூஸிலாந்து  ஃபேஷன் டெக்னாலஜி  தொழில்நுட்ப கல்லூரியும் இணைந்து நடத்திய ஃபேஷன் ஷோ, கண்களை விரியவைத்த கலர்ஃபுல் ஃப்யூஷன் ஷோ!

ஃபேஷன் ஃப்யூஷன்!

நியூஸிலாந்து ஃபேஷன் டெக் கல்லூரியிலிருந்து ஆர்வமும் திறமையும் கொண்ட 20 மாணவர்கள், கடந்த ஒரு மாதமாக  பண்ணாரி அம்மன் கல்லூரியில் தங்கியிருந்து, இங்கே அவங்களுக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட சிலபஸை படிச்சாங்க. இந்த ஏற்பாட்டுக்கு நியூஸிலாந்து அரசு அங்கீகாரமும், நிதியுதவியும் அளித்தது, இங்கே நோட்டபிள் பாயின்ட்! நம் நாட்டு ஸ்டைல் ஃபைபர் செலக்‌ஷன், ஸ்பின்னிங் மில் விசிட், ஃபேப்ரிக் மேனுஃபேக்சர் அண்ட் வீவிங்னு கல்லூரிக்குள் மட்டும் படிக்காம, சத்தியமங்கலம் மற்றும் அதைச் சுற்றியிருக்கிற பல்வேறு உற்பத்தி நிறுவனங்களுக்கும் ஸ்பாட் விசிட் அடிச்சு, ஃபுல் எனர்ஜி மோடில் வலம் வந்தாங்க இந்த ஃபாரின் ஸ்டூடன்ட்ஸ். 

ஃபேஷன் ஃப்யூஷன்!

‘‘பல்வேறு கலாசாரங்கள் கொண்ட இந்தியாவில் எங்களுக்குக் கிடைச்சது புதுமை யான அனுபவங்கள். பக்கத்துல இருக்கிற தொட்டாம்பாளையத்துல பட்டு நெசவாளர்களைச் சந்திச்சு, நாங்க உருவாக்கின பிரத்யேக டிசைன்களை நெய்து வாங்கினோம். அவங்களோட ஃபினிஷிங் பார்த்து அசந்துட்டோம்! ஒரு ஃபேஷன் ஸ்டூடன்ட்டா சொல்றேன்... உலகத்துலேயே உங்க நாட்டுப் பட்டுப்புடவைகள்தான் சூப்பர்ப் அண்ட் கிளாமரஸ்!’’னு பாராட்டினாங்க நியூஸிலாந்து நாட்டு ஏஞ்சலா.

ஃபேஷன் ஃப்யூஷன்!

‘‘ஃபீல்டு விசிட் மட்டுமில்ல... தஞ்சை கோயில்கள், மைசூர், ஊட்டினு உங்க ஊரு டூரிஸ்ட் ஸ்பாட்ஸுக்கும் போய் `மெமரி சேவ்டு’ ஆக திரும்பியிருக்கோம். ஊட்டி பழங்குடி பெண்கள்கிட்ட பூவேலைப்பாடு, ஆழியாரில் நிபுணர்கள்கிட்ட ரெண்டு நாள் யோகா கிளாஸ், டெரக்கோட்டா, பேப்பர் க்வில்லிங், தீம் மியூரல், காபி ஓவியம், ஆரி எம்ப்ராய்டரினு... உங்க நாட்டுல நாங்க கத்துக்கிட்டதும், அள்ளிக்கிட்டதும் அன்லி மிட்டட்!’’னு கோரஸா ஃபாரின் பேபீஸ் சிரிக்க, ஏரியா தடதடக்குது.

`சரி, ஃபேஷன் ஷோ பத்தி சொல்லுங்கப்பா’னு நீங்க கேக்குறது காதுல விழுது. நியூஸிலாந்து மாணவர்கள், இங்க கத்துக்கிட்ட வித்தையைக் களத்தில் இறக்கும் முனைப்போட ஏற்பாடு செய்யப்பட்டதுதான் முன்னுரையில் சொன்ன அந்த ஃபேஷன் ஷோ.

ஃபேஷன் ஃப்யூஷன்!

‘‘வருஷா வருஷம் எங்க காலேஜ் ஃபேஷன் ஷோ ‘ஃபேஷ்டேஷ்’ஷை (FASHDASH), நேஷனல் லெவல் ஈவன்ட்டா நடத்துவோம். இந்த முறை நியூஸிலாந்து மாணவர்களும் கலந்துகிட்டு இன்டர்நேஷனல் லெவல் ஈவன்ட்டா தூள் கிளப்பிட்டாங்க. அவங்க வடிவமைச்ச மேற்கத்திய பட்டு ஆடைகள், நிகழ்ச்சியின் ஹைலைட்!’’னு வைரல் உற்சாகத்தை தடதட பேச்சால் ஷேர் பண்ணினாங்க, ஃபேஷன் டெக் மாணவி ஸ்ரீநிதி.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நியூஸிலாந்து ஜைல்ஸ் புரூக்கர் குழுமத்தின் சேர்மன் ஜைல்ஸ் புரூக்கர், நியூஸிலாந்து எம்.பி கன்வல்ஜிட் சிங் பக்‌ஷி மற்றும் தி சென்னை சில்க்ஸ் - ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின் எம்.டி... பி.கே.ஆறுமுகம் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

ஃபேஷன் ஃப்யூஷன்!

ஃபேஷன் ஷோல பங்குபெற வந்திருந்த திருப்பூர் நிஃப்ட் - டீ (NIFT-TEA) கல்லூரி மாணவி புவனேஸ்வரி, “சேலஞ்சிங்கான போட்டிகள், சிந்திக்க வெச்ச ஈவன்ட்ஸ்... எல்லாத்துக்கும் மேல நியூஸிலாந்து டியூட்ஸ்னு ஃபேஷன் ஷோ, ஸ்வீட் மெமரி!’’னு சந்தோஷமா சொல்லிட்டு, செல்ஃபி, குரூப்பினு பிஸி ஆனாங்க.

மாடல்ஸ், ரேம்ப் வாக்ஸ், மியூஸிக்... மின்னல்ஸ்! 

ச.ஆனந்தப்பிரியா, படங்கள்:ரமேஷ் கந்தசாமி