அவள் 16
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ஃபுட் புராசஸிங்... பிரைட் ஃப்யூச்சர்!

ஃபுட் புராசஸிங்... பிரைட் ஃப்யூச்சர்!

ன்ஜினீயரிங் பிரிவுகளுக்குள் `சிவில்தான் கெத்து... மெக்கானிக் கல்தான் மாஸு’ என்றெல்லாம் ஏகத்துக்கு பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், சத்தமே இல்லாமல் ஒரு படிப்பு வேகமாகப் பிரபலமாகி வருகிறது. உணவுப் பொருட்களில் அளவுக்கு அதிகமான காரீயம் இருப்பதைக் கண்டுபிடிப்பது தொடங்கி, உணவில் காணப்படும் ஒருவித பாக்டீரியா மூலம் பரவும் நோய்களைக் கண்டுபிடிப்பது வரை... இந்தத் துறை சார்ந்த விஷயங்களும், வேலைகளும் ஏராளம். அது... ஃபுட் புராசஸிங் டெக்னாலஜி (Food Processing Technology)! உணவுத் தொழில் நுட்பத்தில் பிஹெச்.டி மேற் கொண்டு வரும் வைஷ்ணவி ஸ்ரீனிவாசன் மேலும் அதிக தகவல்களை வழங்குகிறார்...

ஃபுட் புராசஸிங்... பிரைட் ஃப்யூச்சர்!

விண்ணப்பம்

உணவுத் தொழில்நுட்பம் சார்ந்த இளநிலை படிப்புகளில் சேர, பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியிலை முதன்மைப் பாடங்களாகப் படித்திருக்க வேண்டும். பி.டெக் மற்றும் பி.இ பட்டங்களோடு படிக்கக்கூடிய ஃபுட் புராசஸிங் டெக்னாலஜி படிப்பு, கடந்த சில வருடங்களாகத்தான் தமிழகக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய துறைகளில் இதுவும் ஒன்று. இந்தியாவின் பால்வளத்துறையின் வளர்ச்சி, உணவு உற்பத்தி மற்றும் அதனைப் பதப்படுத்துதலில் வளர்ந்து வரும் தேவைகளை உணர்ந்த மத்திய அரசு, இந்தியாவின் பல கல்லூரிகளில் இந்தப் படிப்பை அறிமுகப்படுத்தி, தகுதி வாய்ந்த மாணவர்களை ஈர்க்கும் முயற்சியில் இருக்கிறது.

எங்கு படிக்கலாம்?

தமிழ்நாட்டில், சென்னை-அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு, கோயம்புத்தூர்-வேளாண் பல்கலைக் கழகம், சென்னை-தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்- `ஐஐசிபிடி’ (IICPT), சென்னை-எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், ஈரோடு- கொங்கு பொறியியல் கல்லூரி

ஃபுட் புராசஸிங்... பிரைட் ஃப்யூச்சர்!

உள்ளிட்ட கல்லூரிகளில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. மத்திய அரசின் நிறுவமனமான `ஐஐசிபிடி’-யில் பயில ஐ.ஐ.டி-யில் சேருவதற்காக எழுதப்படும் நுழைவு தேர்வும் (JEE) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இரண்டாம் கட்ட தேர்வுக்கு (JEE-Mains) தேர்ச்சி பெறும் மாணவர்கள் நேரடியாக `ஐஐசிபிடி’-யில் விண்ணப்பித்து சேர்ந்துகொள்ளலாம்.

இளநிலை படிப்பில் 60% மேல் மதிப்பெண் வைத்திருப்பவர்கள், இதே துறையில் முதுநிலை படிப்பையும் தொடரலாம். நல்ல மதிப்பெண்கள் வைத் திருந்தால், ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில்கூட முதுநிலை பட்டப்படிப்பை இதே துறையில் தொடரலாம்.

வேலைவாய்ப்பு

இந்தத் துறையில் பிஹெச்.டி வரை படிப்பவர்கள், மற்ற துறைகளை ஒப்பிடும்போது குறைவுதான். ஆனால், ஆராய்ச்சிக் கான வாய்ப்புகள் இந்தத் துறையில் ஏராளம். படிப்பை முடித்த பிறகு, உணவு பாதுகாப்பு, பதப்படுத்துதல், ஆராய்ச்சி, குவாலிட்டி கன்ட்ரோல் என உணவு சார்ந்த எந்தத் துறையிலும் பணி பெறலாம்.

பால்வளத்துறை, மீன்வளத்துறை போன்ற அரசுத் துறைகள், பிஸ்கட், ஹெல்த்டிரிங், சாக்லேட் நிறுவனங்கள் என உணவு சம்பந்தப்பட்ட எல்லா நிறுவனங்களிலும் இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்புகள் உண்டு. மேலும் ஆராய்ச்சி மாணவராகவும் கல்வியைத் தொடரலாம்.

இந்தப் படிப்பை முடிப்பவர்களுக்கு இந்திய அளவில் மட்டும் இல்லாமல் சர்வேதேச அளவில் வேலை மற்றும் ஆராய்ச்சிக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. ஹெல்த் பவுடர் தயாரிக்கும் கம்பெனிகள், ஒயின் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் என உணவுத் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு சேர் போட்டு வைத்திருக்கின்றன.

கோ.இராகவிஜயா