Published:Updated:

கேபிள் கலாட்டா

கேபிள் கலாட்டா

கேபிள் கலாட்டா

கேபிள் கலாட்டா

Published:Updated:

அடுத்து வருகிறது... `சீதையின் ராமன்’!

கேபிள் கலாட்டா

விஜய் டி.வி-யில் மறுஒளிபரப்பாகும் ‘மாகாபாரதம்’ தொடருக்கு இப்போதும் நல்ல வரவேற்பு. ‘சீரியலா... நோ வே!’ என்று அலட்டிய இளசுகள் முதல், ‘கர்ணன் பாவம்’ என்று கமென்ட் அடிக்கும் குழந்தைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேபிள் கலாட்டா

வரை... எல்லா தரப்பினரையும் ‘மகாபாரதம்’ பார்க்க வைத்த பெருமை விஜய் டி.வி-க்கே! இப்போது அவர்கள், மற்றொரு மாபெரும் இதிகாசமான ராமாயணத்துடன் ரெடி. ‘சீதையின் ராமன்’... திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. தொடரை ஜனவரி 4 முதல் புது வருடத்தின் அன்பளிப்பாக அளிக்கிறது விஜய் டி.வி. தற்சமயம் ஸ்டார் ப்ளஸ் சேனலில் ‘சியா கி ராம்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரை ‘ட்ரையாங்கிள் ஃபிலிம் கம்பெனி’ சார்பில் நிகில் சின்ஹா தயாரிக்க, ஆனந்த் நீலகண்டன், சுப்ரத் சின்ஹா, பாவ்னா வியாஸ் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ராமராக ஆஷிஷ் ஷர்மாவும், சீதையாக மதிராக்‌ஷி முந்திலும் மனதை கொள்ளைகொள்ள இருக்கிறார்கள்.

இந்தத் தொடர் இந்தி தவிர்த்து தமிழ், தெலுங்கு, பெங்காலி மொழி சேனல்களிலும் இடம்பிடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஹே ராம்!

‘‘எனக்கு அடியாள் இருக்காங்க பாஸ்!’’

கேபிள் கலாட்டா

‘‘மெகா டி.வி-யில் சிறப்பு நிகழ்ச்சிகள், ஸ்டார் சந்திப்புகள், புதிய தலைமுறையில் ‘கிச்சன் கேபினட்’னு என்னை அங்க இங்க பார்க்கலாம்!’’

- கண் சிமிட்டுகிறார் பூவிழி.

`‘நைஸ் நேம்!’’

‘‘யெஸ்... என்னோட பேரு எனக்கு செம ஸ்பெஷல். யுனிக் நேம்ல?! திருச்சிப் பொண்ணு நான். எம்.ஏ., ஆங்கில இலக்கியப் பட்டதாரி. ஹலோ எஃப்.எம் `ஆர்ஜே’ ரூட் மூலமா மீடியா என்ட்ரி. அப்படியே `விஜே’. அடுத்ததா, சீரியல்களில் நடிக்கணும் என்பது டார்கெட். பிஹெச்.டி பண்ணிட்டு இருக்கேன். முடிச்சுட்டு காலேஜ் லெக்சரர் ஆகி, அப்படியே சீரியல்களில் நடிச்சிட்டுனு... ஒரு லைஃப் பிளான் இருக்கு. அப்புறம்... ஓவியம் எனக்குப் பிடிச்ச ஆர்ட். எம்பெடட் டிராயிங், பொழுது போறது தெரியாம பண்ணுவேன். சென்னையில, அண்ணாதான் என் அடியாள். அந்த தைரியத்துலதான் நிறைய நைட் ஷோஸ் என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ்... செம்ம ஜாலி டியூட்ஸ். எப்பவும் சிரிச்சுட்டே இருக்கணும்... அதான் பாலிஸி!’’

சீரியல்ல நடிச்சா அழுவாச்சிதான் பாஸ்!

ஆறடி அழகுச் சிலை!

கேபிள் கலாட்டா

‘ஃப்ரீயா குடுத்தாங்க!’

‘ஹாங்... குடுப்பாங்க, குடுப்பாங்க..!’ என ஜி.ஆர்.டி விளம்பரத்தில் ஹோம்லி லுக்கில் கொள்ளையடிக்கும் அந்த அழகு மனைவி, இந்தியாவின் டாப் மாடல் நேஹாஹிங், ஷிராம்பூர்ல பிறந்தவங்க. சாஃப்ட்வேர் இன்ஜினீயர். 2010-ல்

ஃபெமினா மிஸ் இந்தியா வின்னர். அதே 2010-ல் மிஸ் சர்வதேசம் வின்னர். கேப்டன் மகன் ஷண்முகபாண்டியன் நடிச்ச ‘சகாப்தம்’ பட நாயகி. 1986-ல் பிறந்த நேஹாவோட உயரம், ஜஸ்ட் ஆறடி!

அம்மாடி!

டாப்பு... 2015

கேபிள் கலாட்டா

2015-ன் டாப் 10 டி.வி நிகழ்ச்சிகள் கணக்கெடுப்பில், ‘காமெடி நைட்ஸ் வித் கபில்’ மற்றும் ‘பிக் பாஸ்’ இரண்டும் முதலிடத்தைப் பெற்றிருக்கின்றன. சல்மான் கான் வந்த நேரம் ‘பிக் பாஸ்’ மீண்டும் இழந்த இடத்தைப் பிடித்துவிட்டதாகப் பேச்சு. சீரியல்களில் முதலிடம், கலர்ஸ் டி.வி. சேனல், ‘கும் கும் பாக்யா’. தமிழில் பாலிமர் சேனலில் ஒளிபரப்பாகும் ‘இரு மலர்கள்' டப்பிங் சீரியலின் ஒரிஜினல் வெர்ஷன்தான், ‘கும் கும் பாக்யா’.

மக்கள் வெறித்தனமா பார்த்ததாச்சே!

‘‘நான் ரொம்ப நல்லவன்!’’ 

கேபிள் கலாட்டா

‘‘ஜெயா மேக்ஸ் லைவ், பண்டிகைக் காலங்களில் ஜெயா டி.வி சிறப்பு நிகழ்ச்சிகள், ‘நளபாகம்’ நிகழ்ச்சி... இதெல்லாம் என் ஷோஸ் இல்ல, லைஃப்!’’

- பளிச் எனச் சிரிக்கிறார் `விஜே’ ஷரண்.

‘‘சென்னைப் பையன். அப்பா ரயில்வே ஊழியர். அம்மா ஹோம்மேக்கர். அண்ணா காலேஜ் புரொஃபசர். நான் விஸ்காம் பட்டதாரி. காலேஜ் கேம்பஸ் இன்டர்வியூ மூலமா ஹலோ எஃப்.எம் என்ட்ரி. அப்படியே கலைஞர் டி.வி-யில புரொகிராம் புரொட்யூஸர். அப்பறம் எல்லா சேனல்களிலும் முகத்தைக் காட்டியாச்சு. இப்போ ஜெயா டி.வி! நேரம்தவறாமையில் நான் ரொம்ப நல்லவன். என்னைப் பத்தி எல்லார்கிட்டயும் ஓபனா பேசிடுவேன். அது என் பெரிய மைனஸ், சின்ன ப்ளஸ். கொஞ்சம் நேரம் கிடைச்சா ஃப்ரெண்ட்ஸ் கூட ஊர் சுத்திங். சினிமா பார்க்க ரொம்பப் பிடிக்கும். சினிமாவில் நடிக்க ரொம்ப ரொம்ப ஆசை. என்னோட அடுத்த டார்கெட்... கோடம்பாக்கம். ஆல் த பெஸ்ட் சொல்லுங்க!’’

கோடம்பாக்கத்துக்கு ஒரு டிக்கெட்!

ரிமோட் ரீட்டா

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:ரூ.150

`பாட்டி வைத்தியம்’... பலே ஜோர்!

``தினமும் காலை 7 மணிக்கு விஜய் டி.வி-யில் `பாட்டி வைத்தியம்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதில் சளி, இருமல் போன்ற சாதாரண வியாதிகளுக்கு நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு பாரம்பர்ய பாட்டி வைத்தியத்தை ரேவதி சங்கரன் சுவையான உரையாடலோடும், சுகமான பழைய பாடல்களை இனிமையாக பாடியும் சொல்கிறார். பாட்டும், பாட்டி வைத்தியமும் பலே ஜோர்’’ என்று வாயார வாழ்த்துகிறார் மதுரையில் இருந்து வ.சந்திரா மாணிக்கம்.

அழகோ அழகு!

``அது ஒரு கொசு விரட்டி விளம்பரம். காலையில் கொசு விரட்டியை பையன் ‘ஆன்’ செய்ய அக்கா, ‘ஏன்’? என்று கேட்கிறாள். ‘டெங்கு கொசு காலையில்தானே வரும்! அக்காவைக் காப்பாற்றுவது என் கடமை அல்லவா?’ என்று கேட்கிறது பொடுசு. ‘தேங்க்யூ பப்லு’ என்று அக்கா சொல்ல, ‘என்னை பப்லுனு கூப்பிடாதே!’ என்று மிரட்டிச் செல்கிறது வாண்டு! ஒரு பெரிய நடிகரைப் போல, முழியை விரிப்பதும், கையை சுட்டிப் பேசுவதும், ஒற்றை விரல் காட்டி கோபப்படுவதும், அழகோ அழகு! எத்தனை முறை பார்த்தாலும், அலுக்காத விளம்பரம்’’ என்று வியந்து பேசுகிறார் சென்னை, நொளம்பூரில் இருந்து ர.கிருஷ்ணவேணி. 

`செம ஷார்ப்’ புரொகிராம்!

``தந்தி டி.வி-யில் வார நாட்களில் இரவு 8 மணி முதல் 9.30 வரை நாட்டு நடப்புகள், மக்கள் பிரச்னை, கலாசாரம் பற்றிய நிறை குறைகளை ஒவ்வொருவரின் சார்பாக அழுத்தமான, அவசியமான கேள்விகளாக எழுப்பி, தகுந்த பதில்களை அறிய உதவும் நிகழ்ச்சியாக நடந்து வருகிறது... ‘ஆயுத எழுத்து’! கத்திமுனையைவிட கூர் தீட்டப்பட்ட கேள்விகளின் சக்தி என்னவென்று நமக்கு நன்கு புரியவைத்துவிடுகிறது’’ என்கிறார் மதுரை, அரசரடியில் இருந்து ஜி.தாரணி.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism