அவள் 16
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

மீபத்தில் சென்னையில் ஒரு ஷாப்பிங் மால் சென்றிருந்தேன். அங்கே குழந்தைகள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் ஷாப்பிங் செய்வதில் ஆர்வம் காட்டிக்கொண்டிருக்க, தங்கள் ஸ்கூல் பற்றியும்... வீட்டில் வளரும் பூனைக்குட்டி, நாய்க்குட்டி பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள் குழந்தைகள்.

`எங்க டாமிக்கு தினமும் ஆப்பிள்தான் கொடுப்பேன்’ என்று ஒரு குழந்தை சொல்ல, இன்னொரு

நமக்குள்ளே!

குழந்தையோ... `எங்க புஜ்ஜி, சாக்லேட் சாப்பிடும்’ என மழலையாய்ப் பேசியது. சற்றே வளர்ந்த ஒரு குழந்தை, `ஐயையோ... இந்த அனிமல்ஸ் இதையெல்லாம் சாப்பிடாது’ என்று சொன்னதும்... கோபம் பொத்துக்கொண்டு வந்த சின்னக் குழந்தை, தான் பேசுவது சரியா... தவறா என்றுகூட தெரியாமல், கெட்டவார்த்தை ஒன்றை சர்வசாதாரணமாகப் பிரயோகித்தது.

ஆனால், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், `இப்படியெல்லாம் பேசக்கூடாதுனு எங்கம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க. இனிமே அப்படியெல்லாம் பேசக்கூடாது' என்று பெரிய குழந்தை சொன்னதும்... `ஸாரி' சொல்லி தலையாட்டிக்கொண்டது அந்த சின்னக் குழந்தை.

`இனி, இப்படி பேட் வேர்ட்ஸ் பேசக்கூடாது... `ஓகே'வா?’ என்று மற்ற குழந்தைகளும் கோரஸாக சொல்லிக்கொண்டே மறுபடியும் விளையாட்டில் கவனம் செலுத்தினர்.

நாம், குழந்தைகளுக்கு எதைச் சொல்லித் தருகிறோமோ... அல்லது நம்மைப் பார்த்து எதையெல்லாம் குழந்தைகள் கற்றுக்கொள்கிறதோ... அவைதான் வாழ்க்கை முழுக்க அவர்களோடு பயணிக்கும்!

`என்னதான் தவறு செய்திருந்தாலும், நம் குழந்தையை எப்படி விட்டுக் கொடுப்பது?' என்கிற மனநிலை இங்கே பெரும்பாலானவர்களிடம் இருப்பது கண்கூடு. கெட்டவார்த்தைதானே என்று கண்டுகொள்ளாமல் வளரவிட்டால்... அதுவே விஷவித்தாக பதிந்து, பிற்காலத்தில் பிரச்னைக்குரியவர்களாக அவர்களை வளர்த்தெடுக்கக் காரணமாகிவிடும். நல்ல விஷயங்களைச் சொல்லித் தருவதுடன், குழந்தைகள் சமயங்களில் தடம்மாறும்போது அவர்களின் போக்கைக் கண்டறிந்து நல்வழிப்படுத்தும் பெரும் பொறுப்பும் பெற்றவர்களுக்குத்தானே அதிகம் இருக்கிறது.

இதை புத்தாண்டுக்கான உறுதிமொழியாக மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுக்கவும் ஏற்று நடப்பதுதானே சரியாக இருக்கும் தோழிகளே!

உரிமையுடன்,

நமக்குள்ளே!

ஆசிரியர்