Published:Updated:

தாவணி - வேட்டி... செம காம்பினேஷன்ல!

தாவணி - வேட்டி... செம காம்பினேஷன்ல!

தாவணி - வேட்டி... செம காம்பினேஷன்ல!

தாவணி - வேட்டி... செம காம்பினேஷன்ல!

Published:Updated:

தாவணி அணிந்த தங்கத் தாரகைகளையும் வேட்டி கட்டிய ஹேண்ட்சம் பசங்களையும் எப்பவாச்சும் பார்த்து வியப்பில் புருவம் உயர்த்தியிருக்கிறீர்கள்தானே..! இந்த பாரம்பர்ய ஆடைகளை அணிந்துகொள்ள உங்களுக்கும் ஆசையாக இருக்கிறதா?! அப்ப வாங்க... கீழே கொடுக்கப்பட்ட ஐடியாக்களைப் படித்து பிறவிப் பயனை அடையுங்கள்!

இது தாவணிக்கு!

தாவணி - வேட்டி... செம காம்பினேஷன்ல!

• பட்டு, அபூர்வா, சிந்தெடிக், காட்டன், சில்க் காட்டன்... இந்த ரகங்களில் ஒரே மாதிரியாக தாவணியை கட்டுவதெல்லாம் இப்ப மாறியே போச்சு! அதனால ஃப்ளோரல் பிரின்டட், நெட்டட் டைப், குந்தன் ஃபேன்ஸி என கடைகளில் கிடைக்கும் நியூ மெட்டீரியல்களைக் கொண்டு மெர்மைடு, தேவராணி என வாயில் நுழையாத ஸ்டைல்களில் எல்லாம் தாவணியை அணிந்துகொள்ள புதுப்புது வெரைட்டிகள் கடைகளில் வந்தாச்சே!

(இதையெல்லாம் எப்படி கட்டுறதுனு டவுட் வந்தா... படங்களைப் பார்த்து தெரிஞ்சுக்கலாம்!)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• கடைக்குப் போன பிறகு கன்னாபின்னாவென மேட்சிங் தேடாமல், லைட் கலர் தாவணிக்கு நெட்டட் டைப் பிளவுஸ் தேடினால், நீங்க ரொம்ப சமத்து!

• பார்டர் பெரியதாகவும் அதிக டிசைன் வொர்க்கும் இருந்தால், ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் ச்சும்மா நச்சுன்னு இருக்கும்.

• உங்களோட சாய்ஸ் சில்க் காட்டன் தாவணியா இருந்துச்சுனா... பிரின்டட் டைப் பிளவுஸ்கள் ஃபெர்ஃபெக்ட் காம்பினேஷனா இருக்கும்.

• நீங்க முழுக்கை ரவிக்கைகள் விரும்பிகள்னா... கைகள் மட்டும் வேறு நிறத்திலும் உடல் பகுதி வேறு நிறத்திலும் இருந்தால்... செம லுக் போங்க!

• பட்டு வகை என்றால் தைத்துப் போடலாம். வேறு எந்த மெட்டீரியலாக இருந்தாலும் ரெடிமேட் பக்கம் ஒதுங்கினால் நீங்கதான் உங்க ஏரியாவின் இளவரசி!

இது வேட்டிக்கு!

தாவணி - வேட்டி... செம காம்பினேஷன்ல!

• கோல்டன் பார்டர் வைத்த வேட்டிக்கு வெள்ளை வெளேர் வெண்மை, சந்தன கலர் காட்டன் சட்டைகளைவிட பட்டுச்சட்டையை அணிந்தால் பிஸ்தா லுக் கொடுக்கும்!

• கேஷுவல் ஷர்ட்டுகளுக்கு காட்டன் வேஷ்டிகள் அணிந்தால் ’ச்சோ சிம்பிள் மேன்’ என கிரெடிட் வாங்குவீர்கள்.

• பட்டு, காட்டன் மட்டுமில்லாம ’நடுரோட்ல அவிழ்ந்துருச்சுனா என்ன பண்றது’னு பயப்படுறவங்களுக்காகவே வெல்க்ரோ டைப் வேட்டிகள் இப்ப மார்கெட்ல வந்தாச்சே!

• ‘கட்டிக்கோ ஒட்டிக்கோ’னு சொல் லக்கூடிய வெல்க்ரோ வேட்டிகளில் பாக்கெட் வசதி இருப்பதால், செல்போனை சமத்தாக பாக்கெட்டுகளில் வைத்துக்கொள்ளலாம்.

குறிப்பு: பாக்கெட் இருக்கிறதே என்பதற்காக போக்கிரி விஜய் போல பாக்கெட்டில் ஸ்டைலாக கையை விட்டுக் கொண்டு நடந்தால் உங்களை மேலும் கீழுமாக பார்ப்பார்கள்... ஜாக்கிரதை!)

இது முக்கியமான பாயின்ட்:

பிரேமம் படத்தில் வரும் நிவின் பாலியைப் போல் பந்தா காட்ட விரும்பினால் மாடலின் படங்களைப் பார்த்துத் தெளிக!

யுவஸ்ரீ   எம்.உசேன்

மாடல்: அவிஸ் முஸ்வி, ராம்குமார்

பியூட்டிஷியன்: ஸ்ரீ தேவி ரமேஷ்

ஆடை உதவி: போத்தீஸ், சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism