Published:Updated:

'கேஸு'வலா இருங்க மக்கா..!

'கேஸு'வலா இருங்க மக்கா..!

'கேஸு'வலா இருங்க மக்கா..!

'கேஸு'வலா இருங்க மக்கா..!

Published:Updated:

போனில் ஆரம்பித்து, கொரியன் செட் வரை உள்ளே இருப்பது அதே வாட்ஸ்அப்பும், ஃபேஸ்புக்கும், இதர ஆப்ஸ்களும்தான். யாரும் அடுத்தவர் செல்போன் ஸ்க்ரீனைப் பார்ப்பதில்லை; மாறாக அனைவரின் கண்களையும் கொய்வது... கலர் கலரான மொபைல் கேஸ்கள்தான். பயபுள்ளைகளும், கேர்ள்புள்ளைகளும் அடிக்கடி ‘சேஞ்சிங்க்ஸ் ஆஃப் இண்டியா’ செய்வதால்... மொபைல் கேஸ் கடை தொடங்கினாலே மினி அம்பானி ஆகிவிடலாம் போல!

'கேஸு'வலா இருங்க மக்கா..!
'கேஸு'வலா இருங்க மக்கா..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, ஸ்பென்ஸர் பிளாசா வில் கஸ்டமர்களிடம் விதவிதமான மொபைல் கேஸ்களை அறிமுகம் செய்துகொண்டிருந்தனர் விற்பனை யாளர்கள். நாம் வலது காலை எடுத்து வைத்த ‘சிட்டி மொபைல்ஸ்’ஸில் கூட்டம் நிரம்பி வழிய, பிஸியாக பிசினஸைக் கவனித்துக்கொண்டே, மொபைல் கேஸ் களை காட்டினர் சேலஸ்மேன்கள்.

பிங்கி, கேர்ளி மொபைல் கேஸ்!

'கேஸு'வலா இருங்க மக்கா..!

கேர்ள்ஸின் டிரெஸ்ஸுக்கு மேட்சிங்காக இருக்கும் விதமாக ப்ளூ, பிங்க், யெல்லோ என மொபைல் கேஸ்களில் வானவில்லையே பிடித்து வைத்திருக்கிறார்கள். தவறிக் கீழே போட்டாலும் செல்போன் உடையாமல் பாதுகாக்கும் ரப்பர் கேஸ்கள்தான் இப்போதைக்கு புதுவரவு. கவர்ந்திழுக்கும் டிசைன்களும், கார்ட்டூன் கேரக்டர்களும் அதில் கிடைக்கும் சாய்ஸ்கள். வாசலில் போடும் ரங்கோலி கோலத்தை 3டி எஃபெக்ட்டில் கலர் கலராகப் பிரின்ட் செய்த கேஸ்களை, ‘மார்கழி’ ஸ்பெஷலாக விரும்பி வாங்குகிறார்கள் பட்டாம்பூச்சிகள். பிரின்டட் கேஸ்களிலும் கலர் சாய்ஸ் நிறையக் கிடைக்கிறது. மினுமினுக்கும் நட்சத்திரங்கள், பளபளக்கும் ஸ்டோன்கள் என்று பெண்கள் விரும்பும் ஜிகுஜிகு கேஸ்களும் உண்டு.

ஜோக்கர் கேஸ்!

'கேஸு'வலா இருங்க மக்கா..!
'கேஸு'வலா இருங்க மக்கா..!

ஆண்மகன்களின் அடையாளமாக விளங்கும் ரேஸ் பைக்குகள், கார்கள் டிசைன் கொண்ட மொபைல் கேஸ்கள் எல்லாம் இப்போது அவுட் டேட்டட்! பல புதுவரவுகள் ட்ரெண்டில் நிற்க, அதில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது, கோலிவுட் ஹீரோக்களின் முகம் பதித்த கேஸ்கள்தான். ‘மாரி’ தனுஷ், ‘புலி’ விஜய், ‘வேதாளம்’ அஜித் என சீஸனுக்கு ஏற்றாற்போல் அப்டேட் ஆகும் இந்த கேஸ்கள், கைஸ் மத்தியில் படுஃபேமஸ். ‘எவ்ளோ நாள்தான் சூப்பர் ஹீரோ படங்களையே பாத்துக்கிட்டு இருப்பீங்க? கொஞ்ச நாள் சூப்பர் வில்லன் படத்தைப் பாருங்க!’ எனச் சிரிக்கிறார் ஜோக்கர். பத்துக்கும் மேற்பட்ட வெரைட்டிகளில் ஜோக்கரின் படங்கள் பதித்த மொபல் கேஸ்கள், அதிகபட்ச ட்ரெண்ட்! டிரான்ஸ்ஃபார்மர், ஹல்க், எலும்புக்கூடு, மண்டைஓடு என பாய்ஸின் கேஸ்கள் மிரட்டலாக இருந்தாலும், உள்ளுக்குள் அவர்கள் அட்டக்கத்திதான்.

நூறு ரூபாயில் ஆரம்பிக் கும் கேஸ்களின் விலை, இரண்டாயிரத்தையும் தாண்டிச் செல்கிறது. எனவே... கேஸ் வாங்கப் போகும்போது மறக்கா மல் கைநிறைய காசு எடுத்துச் செல்லுங்கள் செல்லம்ஸ்!

ஜெ.விக்னேஷ், படங்கள்: மா.பி.சித்தார்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism