Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

இல்லற பிரச்னை போக்கும் இனிய தலம்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

இல்லற பிரச்னை போக்கும் இனிய தலம்!

Published:Updated:

ண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்க, கணவன்-மனைவி பிரச்னைகள் தீர, பல்லி சாபம் நீங்க என இவற்றுக்கெல்லாம் திருத்தலமாக விளங்கிவருகிறது, சூரிய பகவான் சிவனாரை வழிபட்ட ஞாயிறு! ஆம்... ஊர் பேரே ஞாயிறுதான்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் இருக்கிறது ஞாயிறு கிராமம். ஊரில் உள்ள புஷ்பரதேஸ்வரர் கோயிலில், புஷ்பரதேஸ்வரர் சமேத சொர்ணாம்பிகை அம்பாளை, சூரிய பகவான் வழிபட்டு அருள் பெற்றதாகச் சொல்கிறது தலபுராணம். சூரிய பகவான் வழிபாடு நடத்திய பஞ்ச பாஸ்கர தலங்களுள் தொண்டை மண்டலத்தில் இருக்கும் ஒரே தலம், இதுதான் என்பது இவ்வூரின் சிறப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

கோயிலின் தலவரலாறு சொன்னார் குருக்கள் கிருஷ்ணசாமி... ‘‘பிரம்மனின் சாபத்தால் தன் மனைவி

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

சாயாதேவியைப் பிரிந்தார் சூரிய பகவான். சாபம் நீங்கி மீண்டும் மனைவியுடன் சேர்வதற்காக திருவண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வந்தார். அத்தருணத்தில் ஆகாயத்தில் தோன்றிய சகஸ்ராட்ச ஜோதியானது வானில் மிதந்து, ஞாயிறு என்னும் இத்தலத்தில் உள்ள சுயம்பு சிவமூர்த்தத்தில் ஒன்றியதைக் கண்டார்.

பின்னர் சூரிய பகவான் இத்தலம் வந்து, தீர்த்தத்தில் நீராடி... இங்கு வீற்றிருந்த சிவனாரை செந்தாமரை மலர்கொண்டு பூஜித்தார். சூரியனின் மெய்யன்பில் நெக்குருகிய சிவபெருமான், தன் உமையாளுடன் செந்தாமரை மலரில் தோன்றி, கல்யாணக்கோலத்தில் அருள்பாலித்தார். உடனே சாபம் நீங்கி விமோசனம் பெற்று தன் துணைவியுடன் சூரியனார் இணைந்தார் என்பது தலவரலாறு.

புஷ்பத்தில் காட்சி கொடுத்ததால் இங்கிருக்கும் மூலவருக்கு ‘புஷ்ப ரதேஸ்வரர்’ எனும் திருநாமம் வாய்க்கப்பெற்றது. இங்கிருக் கும் அம்பாளின் திருநாமம், சொர்ணாம் பிகை. இங்கு சூரியனார், மூலவரான புஷ்ப ரதேஸ்வரரை வணங்கிய கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானுக்கு சிறப்பு ஆராதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன’’ என்றார் குருக்கள்.

கண் நோய் நிவர்த்தி தலம் 

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

குளுக்கோமா, காட்ராக்ட், பார்வையில் குறைபாடு ஆகிய வற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள் ளும் முன்,  ஞாயிற்றுக்கிழமையில் இக்கோயிலுக்கு வந்து சூரியனாருக் கும் சிவனுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, கோதுமை உணவுப்பண்டம், காவிநிற ஆடை, செந்தாமரைப்பூ, பஞ்சபாத்திர உலோகப் பொருள் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒரு பொருள் கொண்டு சிவனை வழிபட்டு, இவ்வூரில் முக்தி அடைந்த, சாகுந்தலம் காவியம் போற்றுகிற கண்வ மகரிஷியையும் தரிசனம் செய்ய, எந்தக் கண் நோயும் விரைவில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பல்லி சாபம் நீங்கும் தலம்

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

பல்லி ஒருவரின் உடல் பாகத்தில் விழும் இடத்தைப்பொறுத்து, நம் முன்னோர்கள் பலன்களை கணித்துள்ளனர். அப்படி  பல்லி விழுந்து கெடுபலன்களைப் பெற்றவர்கள், இத்திருக்கோயிலின் மேற்கூரையின் மீது இருக்கும் தங்கப்பல்லி மற்றும் வெள்ளிப்பல்லி உருவங்களை தரிசித்து, இங்கு வீற்றிருக்கும் மூலவருக்கு அர்ச்சனை செய்து வழிபட, பல்லி விழுந்ததால் ஏற்பட்ட கெடுபலன் மற்றும் பல்லியைக் கொன்றதால் ஏற்பட்ட சாபம் நீங்கும் என்பது நம்பிக்கை.

விசேஷங்கள்

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் பண்டிகையின்போது, இங்கு தம்பதியாக வந்து சர்க்கரைப் பொங்கல் வைத்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வழிபட, குடும்ப உறவு பலப்படும்.

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் வருடப் பிறப்பான சித்திரை மாதம் முதல் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை காலை 6.10 மணியிலிருந்து 6.30 மணிக்குள் இங்கு சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் மூலவரான புஷ்பரதேஸ்வரின் மேல் விழுகின்றன. இதன் மூலம் சூரியன் வருடத்தின் முதல் மாதத்தில் சிவனை தொழுதுவிட்டு, தன் நற்பணிகளை ஜீவராசிகளுக்கு செய்ய ஆயத்தமாகிறார் என்பது ஐதீகம். அப்போது இங்கு தரிசனம் செய்வது, சிறப்புத் தரும்.

சென்னை, மாதவரத்தைச் சேர்ந்த மல்லி விஜய்- யசோதா தம்பதி, கோயிலில் தரிசனம் முடித்து அமர்ந்திருக்க, அவர்களிடம் பேச்சுக் கொடுத்த போது, ‘‘இங்கு வந்து வேண்டிக்கிட்டா... கணவன் - மனைவி உறவு பலப்படும்னு சொன்னாங்க. அதான் குழந்தையோட வந்திருக்கோம். இந்தப் புதுவருஷம் எங்களுக்கு நல்லா இருக்கணும், ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பத்தை முன்னேற்றணும்னு வேண்டிக்கிட்டோம்!’’ என்றனர் உற்சாகமாக.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

பூஜையை முடித்துவிட்டு வந்த குருக்கள் கிருஷ்ணசாமி, ‘‘இவ்வூரில்தான் சுந்தரருடைய மனைவி சங்கிலி நாச்சியார் பிறந்தார். இங்கு தமிழ் மாதமான ஆவணிதான் சூரியனுடைய ஆட்சி மாதம் என்பதால், 1,008 வலம்புரி சங்குகளால் அப்போது அவருக்கு சங்கார்ச்சனை நடைபெறும். அதேபோல, ரதசப்தமியின்போது காலையில் எழுந்து 7 எருக்கு இலை, பச்சரிசி வைத்து அருகிலுள்ள சூரிய புஷ்கரணியில் குளித்துவிட்டு, கிழக்கு திசை நோக்கி சாமி தரிசனம் செய்வதால், உடல் நலம் வெப்பத்திலிருந்து சீராகும். கார்த்திகை கடைஞாயிறு அன்று கோ பூஜை, மகன்யாசம், ஏகாதச ருத்ரம், சூரிய நமஸ்காரம், லலிதா சகஸ்கரநாமம், ருத்ர ஹோமம் எல்லாம் சிறப்பாக நடக்கும். இங்கு இருக்கும் நாகர் சந்நிதியில் திருமணமாகாதவர்கள் மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால், விரைவில் கல்யாணவரம் கிடைக்கும்’’ என்றார் மெய்பக்தியுடன்.

நலமெல்லாம் கிட்டும், ஞாயிறு சென்றுவர!

ம.மாரிமுத்து படங்கள்: பா.அருண்

எப்படிச் செல்வது?

சென்னை செங்குன்றத்தில் இருந்து ஞாயிறு கிராமத்துக்குச் செல்ல 58ஏ, 58ஜி, 57சி, 114சி ரூட் பேருந்துகள் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism