Published:Updated:

கேபிள் கலாட்டா

"பொங்கலுக்கு பட்டுப்புடவை!"

கேபிள் கலாட்டா

"பொங்கலுக்கு பட்டுப்புடவை!"

Published:Updated:

ன் மியூசிக்கின் ‘வாழ்த்துகள்’ நிகழ்ச்சியில் சிரித்த முகம் காட்டுபவர், நிவேதிதா.

கேபிள் கலாட்டா

‘‘சென்னைப் பொண்ணு. அப்பாவுக்கு பிசினஸ், அம்மா ஹோம் மேக்கர். ஒரு அன்பான அக்கா. எப்பவும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேபிள் கலாட்டா

ஜாலியா இருக்கிறதுதான் என் கேரக்டர். எல்லார்கூடவும் சகஜமா பேசுவேன். ஆனா, யாரையும் ஈஸியா நம்பிடமாட்டேன். நான் ஒரு அத்லெட், ஸ்விம்மர். தவிர, இன்டர்நேஷனல் லெவல்ல ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்றிருக்கேன். அதனாலதான் எவ்ளோ சாப்பிட்டாலும், இந்த ஸீரோ சைஸ் டிஸ்டர்ப் ஆகாம இருக்கும். பி.காம் முடிச்சுட்டு, இப்போ சன் டி.வி-யில் ஆங்கர். எந்த விசேஷம்னாலும் எடுக்கிற புது டிரெஸ், பட்டுப்புடவைதான். பொங்கலுக்கும் எடுத்தாச்சு!’’

பட்டுப்போல மின்ன வாழ்த்துகள்!

‘‘நான் அப்பாவாகிட்டேன்!’’

கேபிள் கலாட்டா

சன் டி.வி ‘நாதஸ்வரம்’ சீரியல், விஜய் டி.வி ‘ஜோடி நம்பர் 1’ நடன நிகழ்ச்சி என்று அலப்பறை கொடுத்த சாய்சக்தி, இப்போது அப்பாவாக புரமோஷன் வாங்கியிருக்கார். ‘‘என்னையும், என் மனைவி அனிஸ் பாத்திமாவையும் சின்னத்திரை ஏரியாவில் பலருக்கும் தெரியும். ஆனா, எங்களுக்கு ஒரு குட்டிப்பையன் பிறந்திருக்கிறதை, இண்டஸ்ட்ரியில யார்கிட்டயுமே சொல்லலை. ‘அவள்’கிட்டதான் ஷேர் பண்றோம். ஆசிஃப் பிறந்து நாலு மாசம் ஆகுது. பையன் பிறந்த நேரம், ராஜ் டி.வி-யில ‘சபிதா என்கிற சபாபதி’ சீரியல்ல எனக்கு ஹீரோ ரோல் கிடைச்சிருக்கு. சன் டி.வி-லயும் ஒரு சீரியல்ல கமிட் ஆகியிருக்கிறேன். என் குழந்தையையும் மீடியாவுக்குக் கொண்டு வரணும். அதான் ஆசை!’’

ஆசிஃப் ரெடியா?!

நண்பர்கள் இணைந்து வழங்கும்..!

கேபிள் கலாட்டா

பண்பலை தொகுப்பாளர், புதிய தலைமுறை, புதுயுகம் சேனல்களின் பிரபல ஆங்கர், பாலாஜி. இப்போது டி.டி. பொதிகையில் தன் நண்பர் தீபக் உடன் இணைந்து ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

‘‘பொதுவா பொதிகை நிகழ்ச்சிகள் ரொம்ப நிதானமா இருக்கும். ஆனா, நானும் என்னோட கோ-ஆங்கரா தீபக்கும் இணைந்து தொகுத்து வழங்கும் ‘பேசும் நட்சத்திரம்’ நிகழ்ச்சி, கலகலப்பான செலிப்ரிட்டி ஷோ. டைரக்டர் ராஜா, ராதா மோகன், நடிகை பார்வதினு பலர் கலந்துக்கிட்ட இந்த நிகழ்ச்சியில் இன்னும் பல பல செலிப்ரிட்டீஸ் வரவிருக்காங்க. தீபாவளி, புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியா ஒளிபரப்பான ஷோ, இனி பொங்கலில் இருந்து வாரம்தோறும் ரெகுலர் ஷோ ஆக ஒளிபரப்பாகுது’’ என்ற பாலாஜி... தீபக்கை அறிமுகப்படுத்தினார்.

கேபிள் கலாட்டா

‘‘சென்னைப் பையன். சட்டம் படிச்சுட்டு, மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். ஒருமுறை பாலாஜியோட ஷோவை லைவ்வா பார்க்கிற வாய்ப்புக் கிடைச்சது. ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். திடீர்னு ஒருநாள், ‘பொதிகையில ஒரு ஷோ, ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணலாம்’னு சொன்னார். ‘அய்யய்யோ... காம்பியரிங்னா எனக்கு என்னன்னே தெரியாது பாஸ்’னு சொன்னாலும் விடல. ‘ஷோவுக்கு வர்ற செலிப்ரிட்டியைப் பத்தி மட்டும் தெரிஞ்சுட்டு வாங்க, லைவ்லியாப் பண்ணலாம், கலக்கிடலாம்’னு சொன்னாரு. இதோ... கலக்கிட்டு இருக்கோம். ஒரு சீக்ரெட்... எனக்கு தமிழ் எழுத, படிக்கத் தெரியாது. ஒரு சர்ப்ரைஸ்... ஒரு தமிழ் படத்துல ஹீரோவா கமிட் ஆகியிருக்கேன்!’’ என்கிறார் தீபக்.

கலக்குங்க பிரதர்ஸ்!

ரிமோட் ரீட்டா , படங்கள்:ரா.வருண் பிரசாத்

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:ரூ.150

சுட்டிகள் நிகழ்ச்சி... சூப்பர்!

``விஜய் டி.வி-யில் சமீபத்தில் ஒளிபரப்பான `நீயா? நானா?’ நிகழ்ச்சியை குழந்தைகளை வைத்து நடத்தினார்கள். அதில், குழந்தைகளின் மனநிலையை அறிய உதவிய விதம் மிகவும் அருமை! நிகழ்ச்சியின் நடுவே வந்த டாக்டர் குழந்தைகளுக்குப் பயனுள்ள தகவல்களைச் சொன்னார். இதேபோல் பல் டாக்டரையும் அழைத்து குழந்தைகளுக்கு பல் பராமரிப்பு பற்றிய தகவல்களையும் கொடுத்திருக்கலாம்’’ என்று ஆலோசனை சொல்கிறார் எடப்பாடியில் இருந்து மீனா சுந்தர்.

மாமியார் - மருமகள்  எதிரிகள் அல்ல!

``ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் `ஆஹா மாமியார்... ஓஹோ மருமகள்’ கேம் ஷோ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மாமியார், மருமகள் என்றாலே என்றைக்குமே ஆகாது என்று பல சீரியல்களும், சமூகத்தினரும் சொல்லிக்கொண்டிருப்பதால்தான் தனிக்குடித்தனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையை மாற்றும் நோக்கத் துடன் அன்பான, அந்நியோன்யமான மாமியார் - மருமகளும் இங்கே இருக்கிறார்கள் என்பதை அழகாக உணர்த்தியது இந்த நிகழ்ச்சி!’’ என உச்சிமுகர்ந்து பாராட்டுகிறார் சென்னை, கொளத்தூரில் இருந்து பிரேமா கார்த்திகேயன்.

யோகா... ஆஹா!

``கேப்டன் டி.வி-யில் திங்கள் முதல் வெள்ளி வரை ‘புத்துணர்ச்சி தரும் யோகாசனம்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பா கிறது. அதில், உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள மிகவும் அவசியமான யோகா பயிற்சிகளை செய்து காண்பிக்கிறார்கள். சிறியவர்கள், பெரியவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் யோகா பயிற்சிகளை முறையாக கற்றுக் கொடுக்கிறார்கள். அனைவரும் பார்த்து பயன்பெற வேண்டிய நிகழ்ச்சி இது’’ என்று பாராட்டுகிறார் சேலத்தில் இருந்து பி.சுமதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism