Published:Updated:

"பசுமாட்டு வருமானத்தில் பந்தாவா கல்யாணத்தை நடத்தினோம்!"

கால்நடை

"பசுமாட்டு வருமானத்தில் பந்தாவா கல்யாணத்தை நடத்தினோம்!"

கால்நடை

Published:Updated:

காளைகளையும் பசுக்களையும் பிள்ளைகளாக வளர்க்கும் குடும்பங்கள், கிராமங்களின் அழகு. அப்படிச் சில குடும்பங்கள்தான் இவர்கள்!

‘‘அருவாளால வெட்ட வந்தவரை முட்டித்தள்ளிச்சு!’’

"பசுமாட்டு வருமானத்தில் பந்தாவா கல்யாணத்தை நடத்தினோம்!"

ஆறரை அடி உயரம், ஆளை மிரட்டும் கொம்புகள், முறைத்துப் பார்க்கும் கண்கள் என பார்க்கவே பயப்படும் அளவுக்கு இருக்கும் காளைகளை, அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல, 11 காளைகளை தன் அன்பால் கட்டிப்போட்டிருக்கிறார், காளைகளுக்குப் பெயர்போன, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ள காத்தசாமிபாளையத்தைச் சேர்ந்த சௌந்தரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"பசுமாட்டு வருமானத்தில் பந்தாவா கல்யாணத்தை நடத்தினோம்!"

‘‘மயிலைக்காளை, செவலைக்காளை, காராம்பசுக்காரினு எங்ககிட்ட பதினோரு காளைக நிக்குதுக. ஏழுமலையான், சிங்கார வேலன், ரஜினி, நடராஜா, வலையனூருனு ஒவ்வொரு காளைக்கும் ஒவ்வொரு பேர் வெச்சிருக்கோம். ரஜினி, சும்மா சுறுசுறுப்பா இருக்கும். சிங்காரவேலனை நான் மட்டுந்தான் பிடிக்க முடியும். எங்க ஊட்டுக்காரரைக்கூட விரட்ட ஆரம்பிச்சிரும். இதனாலயே சொந்தஞ்சோலினு அடுத்த ஊருக்குக்கூட போகமுடியல. ஆரம்பத்துல மயிலைனு ஒரு காளை வளர்த்தோம். எங்களை யாராச்சும் அதட்டிப் பேசுனாலே முட்ட வந்துரும். ஒரு பிரச்னையில என் வீட்டுக்காரரை ஒருத்தர் அருவாளால வெட்ட வர, மயிலை ஓடிவந்து அவரை முட்டித்தள்ளிருச்சு!’’ என்று சௌந்தரம் பரவசமாகச் சொல்ல, அவர் கணவர் ராமசாமி,

‘‘காளைக வாங்குறது பெரிய விசயம்ங்க. மொதல்ல சுழியைப் பாப்பேன். அது சரியா இருந்தா அப்புறம் கன்னுக்குட்டி தெளிவா இருக்கான்னு பாப்பேன். இதெல்லாம் சரியா இருந்தாத்தான் வாங்குவேன். ஆரம்பத்துல வெல கொறவாத்தான் இருந்துச்சு. இப்பதான் ரேட் ஏறிருச்சி. ஒரு கன்னு அம்பது, அறுபதுனு (ஆயிரங்கள்) கூடிப்போச்சு. இதுல காராம்பசுக்காரி ரக காளை கெடைக்கிறதுதான் பெரிய விசயம். அதுல துளிகூட மறு கலர் இருக்காது. காதுமடல் தொடங்கி நாக்கு வரைக்கும் கறுப்பா இருக்கும். எங்ககிட்ட அந்தக் காளை ஒண்ணு இருக்கு!’’ என்கிறார் கம்பீரமாக.                 

‘‘பசு தந்த வாழ்க்கை!’’

தஞ்சாவூர் அருகே உள்ள ஆழியவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த புனிதா, வெள்ளையம்மாள், லெட்சுமி என இரண்டு பசுக்களைப் பிள்ளைகள்போல வளர்த்துவருகிறார்.

‘‘சின்ன வயசுல எங்கப்பா வீட்டுல பசுக்களோடயே வளர்ந்ததால, அதுக மேல எனக்குக் கொள்ளப்பிரியம். அப்பா ஒரு டீக்கடை வெச்சு, எங்க வீட்டு பசும்பாலையே கடைக்குப் பயன்படுத்தி, அந்த வருமானத்துலதான் எனக்கு 15 பவுன் நகை போட்டு கல்யாணம் செஞ்சு வெச்சாங்க. புகுந்த வீட்டுக்குப் போனாலும் என் நெனப்பெல்லாம் பசுங்க மேலதான் இருக்கும். அப்புறம் எங்கம்மாவுக்கு உடம்பு முடியாமப் போக, என் பொறந்த வீட்டுக்கு ஆண் வாரிசு இல்லாததால நானும் என் வீட்டுக்காரரும் இங்கேயே வந்துட்டோம். மறுபடியும் எங்க பசுக்களைப் பார்த்துக்க ஆரம்பிச்சேன். பசுமாடு தந்த வருமானத்துல என் தங்கச்சிக்கு 12 பவுன் நகை, சீரு, பைக்னு வாங்கிக்கொடுத்து கல்யாணத்தை முடிச்சேன். ‘பசுமாட்டை வெச்சே பந்தாவா கல்யாணத்தை நடத்திட்டா’னு பாராட்டினாங்க ஊருல. இன்னிக்கு என் ரெண்டு பிள்ளைங்களையும் பால் வருமானத்துலதான் படிக்க வைக்கிறேன்.

"பசுமாட்டு வருமானத்தில் பந்தாவா கல்யாணத்தை நடத்தினோம்!"

எங்க கிராமத்துல வருஷா வருஷம் நடக்குற பொங்கல் விழாவுல, சிறப்பா அலங்காரம் செய்த மாட்டுக்கு பரிசு கொடுப்பாங்க. அஞ்சு வருஷமா அதுல என் லெட்சுமிக்குதான் முதல் பரிசு. சில நூறு ரூபா பரிசுக்கு, ஆயிரம் ரூபாய் செலவழிச்சு பூ வாங்கி அலங்காரம் பண்ணுவேன். ஆனா, மேடையில் என் லெட்சுமிக்கு அங்கீகாரம் கொடுக்கும்போது, என் புள்ளைங்க மெடல் வாங்குறதுபோல சந்தோஷமா இருக்கும். கால்நடைத் துறை சார்பா சிறப்பாக பராமரிக்கப் படும் பசுக்களுக்குக் கொடுக்குற பரிசும், என் பிள்ளைக்குதான்!’’ என்கிறார் பூரிப்புடன்.

‘‘இது பொறந்த வீட்டுச் சீதனம்!’’

‘‘வருஷத்துல ஒருநாள்தான் வரும் மாட்டுப்பொங்கல். ஆனா, எங்களுக்கு வாரம்தோறும் மாட்டுப்பொங்கல்தான்!’’ என்கிறார், நாட்டுப் பசுக்களை பாசத்தோடு வளர்த்துவரும் ஈரோடு மாவட்டம் சித்தோடு பொட்டையம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி பரிமளம்.

"பசுமாட்டு வருமானத்தில் பந்தாவா கல்யாணத்தை நடத்தினோம்!"

‘‘அட ஆமாங்க! பொதுவா மாட்டுப்பொங்கல் அன்னிக்குத்தான் அதுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பூச்சூடி, சாம்பிராணி புகைபோட்டு, சூடம் கொளுத்தி, பூஜை செய்து, சந்தனம் பூசி, பொட்டுவெச்சு, படையல் வைப்பாங்க. இது ஊர் வழக்கு. ஆனா நாங்க ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாடுகளைக் குளிப்பாட்டி பூஜை செய்வோம். கல்யாணம் முடிஞ்சு புருஷன் வீட்டுக்கு போகும் புதுப்பொண்ணுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பாங்க. பொறந்த வீட்டுப் பட்டுப்புடவை, பொங்கல் பானை, பச்சரிசி, அச்சு வெல்லம், கருப்பட்டி, மஞ்சள் கிழங்கு, பாக்கு வெத்தலை, பன்னீர் செம்பு, காணிக்கைனு கொடுக்குற வங்க, வசதிக்கு தக்கன பசுமாடு ஒண்ணையும் தாய்மாமன் சீரா புகுந்த வீட்டுத் தொழுவத்துல கட்டிட்டு வருவாங்க. கொடுத்த ஒரு பசுமாடு, கன்று ஈனி வாழையடி வாழையா பெருகி, பல மாடுகள் இருக்குற பட்டியா பெருகிடணும்னு, ‘பட்டிப் பெருக வேணும், பால் பானை பொங்க வேணும், சுத்தி இருக்கும் சனங்களோடு சுகமாக வாழவேணும்’னு பசுவைக் கொடுத்து வாழ்த்துவாங்க. அப்படி 15 வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொங்கலுக்கு என் பொறந்த வீட்டு சீர்வரிசையா கிடைச்ச பசுவோட பத்தாவது தலைமுறை, எங்ககிட்ட நிக்குது. இப்ப எங்க தொழுவத்துல 25 நாட்டுப்பசு மாடுக இருக்கு. காளைக் கன்றுகளை வித்ததுபோக பொறந்த வீட்டு சீதனமா வந்த பசுமாட்டின் வாரிசா 10 மாடுகள் அதுல அடங்குங்க!’’ என்றார் பெருமைபொங்க தன் கணவர் பாலசுப்ரமணியத்தை பார்த்தபடி.

‘‘ராமுவுக்கு சிலை வெச்சேன்!’’

தமிழகத்தில் மணப்பாறை மாடுகள் என்றால் பிரபலம். எட்டு நாட்களுக்கு ஒருமுறை இங்கு நடக்கும் மாட்டுச்சந்தை களைகட்டும். என்னதான் மணப்பாறை காளைகள் என சொன்னாலும் உண்மையில் அவை மணப்பாறை அடுத்துள்ள செவலூரில்தான் அதிகமாக இருக்கின்றன. வீட்டுக்கு வீடு காளைகள் நின்ற காலம்போய் இப்போது ஜல்லிக்கட்டுத் தடைக்கு பிறகு பலர் காளைகளை விற்றுவிட்டதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையிலும் தான் வளர்த்த காளை நினைவாக சிலை வைத்து வழிபடுகிறார் சின்னாகவுண்டர் என்கிற பெரியதம்பி.

"பசுமாட்டு வருமானத்தில் பந்தாவா கல்யாணத்தை நடத்தினோம்!"

ராஜபாளையம் நாய், வாத்து, குதிரைகள், ஜல்லிக்காளைகள், 30-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் என அனைத்துக்கும் தீவனம் போட்டுக்கொண்டிருந்த பெரியதம்பி - ராஜாம்மாள் தம்பதியைச் சந்தித்தோம். ‘‘30 வருசத்துக்கு முன்னாடி ஒரு காளை வாங்கினேன். அவன்தான் ராமு. களத்தில் இறங்கி திமிருனா ஒரு பய தொடமுடியாது. சீறிக்கிட்டு போவான். பாசக்காரப் பையன். திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனினு தமிழகம் முழுக்க நடந்த ஜல்லிக்கட்டுகளில் பரிசு வாங்கிக் குவிச்சான். 15 வருசம் எங்ககூட இருந்தவன், வயசாகிப் போனதால இறந்துட்டான். ஊர் கூடி காரியம் பண்ணினதோட, வீட்டுக்குப் பின்னாடி அவனுக்குச் சின்னதாக சிலை வெச்சோம். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராமுவுக்கு விளக்கேத்தி, ஒவ்வொரு பொங்கலுக்கும் படையல் போடுவோம். ராமுவை கும்பிட்டுட்டுதான் எந்தக் ஜல்லிக்கட்டுக்கும் கிளம்புவோம். எங்களுக்கும், எங்க கால்நடைகளுக்கும் அவன்தான் காவல்தெய்வம்.

இந்த 30 வருசத்துல கட்டில், ஃப்ரிட்ஜ், சைக்கிள், வெள்ளிப்பதக்கம், தங்கப்பதக்கம்னு எங்க காளைக எத்தனையோ பரிசு வாங்கிக் கொடுத்திருக்குக.  மணப்பாறை மாட்டுச் சந்தையை கடந்த 20 வருசமாக ஏலத்தில் எடுத்து நடத்தி வர்றோம். தமிழ்நாடு முழுக்க ஜல்லிக்கட்டுக் களத்துல சின்னாகவுண்டர்னு கேட்டா தெரியும்!’’ என்கிறார் சீறும் காளைகளை தன் பார்வையால் அடக்கியபடி. 

கோவிந்த் பழனிச்சாமி, சி.ஆனந்தகுமார், வீ.மாணிக்கவாசகம், கே.குணசீலன். படங்கள்: தே.தீட்ஷித், ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism