உதவிக்கரம் நீட்டுவோம்!

“ஒவ்வொரு நாளும் நமது வாழ்வில் பலர் நமக்கு உதவுகிறார்கள், நாமும் பலருக்கு உதவுகிறோம். இந்த பரஸ்பர உதவிகள், வாழ்க்கையை அர்த்தமாக்குகின்றன. மேலும், ஒருவருக்கு உதவும்போது அவரின் தேவை மட்டுமின்றி, மனநிலையையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு கஷ்டத்தில் நமக்கு யாரேனும் உதவும்போது கிடைக்கும் ஆறுதலை, இன்னொருவருக்கு அதுபோன்ற இன்னொரு தருணத்தில் நாம் தரும்போது, உலகம் அழகாகும். பிறருக்கு உதவும் நிலையில் நாம் இருப்பதே, ஒரு வரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீப வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ‘சென்னை மைக்ரோ’ என்ற ஒரு குழு அமைத்து நானும் நடிகர் சித்தார்த்தும் உதவச் சென்றோம். அங்கெல்லாம் எனக்குக் கிடைக்கப்பெற்ற அனுபவங்களும், நெகிழ்ச்சியும் நிறைய நிறைய! தனித்திருக்கும், தவித்திருக்கும் ஒருவருக்கு ‘நாங்க இருக்கோம் உனக்கு!’ என்ற வார்த்தைகள், அவருக்கு வாழ்க்கை மீது பிடிப்பும், வானளவு நம்பிக்கையும் தரவல்லவை. எனில், அப்படிப்பட்டவர்களுக்கு அவற்றை நாம் அன்பின் குரல்கொண்டு தரலாம்தானே?!’’ - நடிகர், `ஆர்ஜே’, `விஜே’ என்று நம்மை கலகலக்க வைக்கும் பாலாஜி, மனம் கவர்ந்து பேசினார். உதவி என்ற பெரும்செயலைப் பற்றிய தனது எண்ணங்களை, அனுபவங்களை பின்வரும் தலைப்புகளில் ஏழு நாட்களுக்குப் பகிர்கிறார்...
• உதவி, ஓர் ஆரோக்கியமான போதை!
• உதவிசெய்ய ஏன் முன்வர வேண்டும்?
• உதவிக்கு பலன் எதிர்பார்க்கலாமா?
• உதவ சந்தர்ப்பம் கிடைத்தால், தவறவிட வேண்டாம்!
• பழகிவிட்டால், உதவுவது நமது இயல்பாகிவிடும்!
• தினம் தினம் யாருக்கு என்னென்ன உதவிகள் செய்யலாம்?
• நான் வாழ்வில் பெரிதும் நம்பும் ஃபிலாசஃபி!
‘கலங்காதிரு மனமே’ குரல் வழியில் ஜனவரி 19 முதல் 25 வரை 044 - 66802912* எண்ணில் அழையுங்கள்... காத்திருக்கிறார் பாலாஜி! * சாதாரண கட்டணம்
ச.சந்திரமௌலி படம்:சொ.பாலசுப்ரமணியன்