Published:Updated:

"ரிகர்சல்ல, ரிகர்சலே செய்யாம சிரிப்போம்!"

"ரிகர்சல்ல, ரிகர்சலே செய்யாம சிரிப்போம்!"

"ரிகர்சல்ல, ரிகர்சலே செய்யாம சிரிப்போம்!"

"ரிகர்சல்ல, ரிகர்சலே செய்யாம சிரிப்போம்!"

Published:Updated:

விஜய் டி.வி ‘அது இது எது’ நிகழ்ச்சியில், ‘சிரிச்சா போச்சு’ ரவுண்டில் வந்து நம்மை வாய், வயிறெல்லாம் வலிக்க வலிக்க சிரிக்கவைக்கும் அந்தக் கான்செப்ட் காமெடியன்களை பொங்கல் சிறப்பிதழுக்காக  சந்தித்தோம்!

"ரிகர்சல்ல, ரிகர்சலே செய்யாம சிரிப்போம்!"

ஜெயச்சந்திரன், பழனி ‘பட்டாளம்’, ‘சிங்கப்பூர்’ தீபன், ராமர், ஜார்ஜ் விஜய்... இவர்கள்தான்அந்தக் கூட்டணி. ராமர், ஜார்ஜ் இருவரும் மதுரைக்காரர்கள், மற்ற மூவரும் சென்னைக் காரர்கள்.

‘‘எங்க எல்லாருக்குமே பிடிச்ச நடிகர், ரோல் மாடல்... வடிவேலு!’’ என்ற பொது அறிமுகத்தோடு, ஒவ்வொருவரும் பெர்சனல் அறிமுகம் பேசினார்கள்.

‘‘எங்களை நாங்களே கலாய்ச்சுக்குவோம்!’’

‘‘சின்ன வயசில் எனக்குள்ள நகைச்சுவையை விதைச்ச என் மாமா, ஏழாம் வகுப்புப் படிக்கும்போது என்னை மேடை ஏற்றின டீச்சர்... இவங்க ரெண்டு பேருக்கும் நன்றி!’’ என்று ஆரம்பித்தார் ஜெயச்சந்திரன்...

‘‘ஒருமுறை அமுதவாணன், ‘விநாயக் மஹாதேவ்’ என்ற கேரக்டர் பெயரை ‘விநாயக் மஹால்’னு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"ரிகர்சல்ல, ரிகர்சலே செய்யாம சிரிப்போம்!"

சொல்லிட்டாரு. ஷூட் போயிட்டிருந்தாலும் நான் அடக்க முடியாமச் சிரிக்க, அது அப்படியே ஒளிபரப்பாக, அதுவும் ஹிட் ஆயிருச்சு. அப்புறம்தான், ஷோவுல நாங்க பண்ற தவறுகளை நாங்களே கேலி செய்து கலாய்ச்சுக்க ஆரம்பிச்சோம். அது மக்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. ‘சார்... சான்ஸ் கிடைக்க என்ன பண்ணணும்?’னு சிலர் எங்கிட்ட கேட்பாங்க. ‘அதில் எனக்குத் திறமை இருக்கு, நிச்சயம் ஜெயிக்க முடியும்!’ என்ற நம்பிக்கை வந்துருச்சுன்னா, நீங்க ரெடி பாஸ்! இன்னிக்கு ஒரு ஸ்மார்ட்போன் இருந்தா போதும், உலகத்தைச் சென்றடைய! யூ-டியூப்ல நீங்களே சேனல் ஆரம்பிச்சு உங்க திறமையை வெளிப்படுத்தலாம்!’’

‘‘அந்த ‘காமெடி கோபிநாத்’ நான்தான்!’’

‘‘அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி 30 மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்ஸ் சேர்ந்து 12 மணி நேரம் தொடர்ந்து காமெடி பேசி, உலக சாதனை செய்தோம். அந்த குரூப்புக்குப் பேரு ‘பழனியின் பலகுரல் பட்டாளம்’. அந்தப் ‘பட்டாளம்’தான் என் பேர்ல சேர்ந்து நான் பழனி ‘பட்டாளம்’ ஆயிட்டேன்!’’ - கலகலவெனச் சிரிக்கிறார் பழனி.

‘‘என்னை ஆரம்ப காலத்தில மெருகேத்தின நண்பர்கள் விமலன், குமார்... இந்த இரண்டு பேரும் எனக்காக ரொம்பவே பாடுபட்டிருக்காங்க. ஒருநாள் விஜய் டி.வி-யின் ஒரு தீபாவளி நிகழ்ச்சிக்காக கோபிநாத்போல இமிட்டேட் செய்யச்சொல்லி, டீம்ல ஒருத்தருக்கு சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார் எங்க டைரக்டர் தாம்சன். அப்போ பக்கத்துல இருந்த நான், ‘அப்படியில்லை’, ‘நடந்தது, நடக்கவிருப்பது, நடக்கப்போவது’னு இப்படி சில வார்த்தைகளையெல்லாம் போட்டு பாடி லேங்குவேஜோட பேசணும்னு சொல்லிக்கொடுத்தேன். உடனே தாம்சன், ‘நீங்கதான் கோபிநாத்!’னு சொல்லிட்டார். நான் கோபிநாத்தை இமிட்டேட் செய்த அந்த நிகழ்ச்சி, சூப்பர் டூப்பர் ஹிட். தனுஷ் சார் ஒருமுறை எங்க எல்லாரோட பெயரையும் குறிப்பிட்டு, ‘என்னை தினமும் சிரிக்க வைக்கிறவங்க இவங்கதான்!’னு ட்வீட் செய்திருந்தார். சூப்பர்ல!’’

‘‘சிங்கப்பூருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை!’’

‘‘விஜய் டி.வி-க்கு வந்தப்போ எல்லோரும் ஒரு நிக் நேம் வெச்சிருந்தாங்க. என் ஃப்ரெண்ட்ஸ்தான் என் பேருக்கு முன்னாடி சும்மாகாச்சுக்கும் சிங்கப்பூரை சேர்த்துவிட்டாங்க!’’ தொண்டையைச் செருமிக்கொள்கிறார் ‘சிங்கப்பூர்’ தீபன்...

‘‘இரவு, பகல்னு எங்களோட ரிகர்சல் நடக்கும். நைட் மூணு மணிக்கெல்லாம் கத்திக் கத்தி டயலாக் பேசிட்டு இருப்போம். அப்படி ஒருநாள் நான் ‘காதல்’ பட தண்டபாணி வாய்ஸை பேசிப் பேசிப் பிராக்டீஸ் எடுத்து டக்கரா கொண்டுவந்துட்டேன். ஆனா, நிகழ்ச்சி அப்போ, வெறும் காத்துதான் வந்துச்சு. ஓவரா ஸ்ட்ரெயின் பண்ணினதால தொண்டையில் பிரச்னையாகி, அந்த சம்பவத்தோட என் ஒரிஜினல் வாய்ஸும் போய் ‘கரகர’ தொண்டை ஆயிருச்சு. ஆனா, இப்போ இதுவே என் அடையாளம் ஆயிருச்சு.’’

‘‘என்னம்மா இப்டிப் பண்றீங்களேம்மா?!’’

‘‘அது என்னன்னே தெரியலைங்க... எனக்கு எப்பவுமே பிரச்னையான கான்செப்ட்தான் அமையும். அப்படித்தான் ‘என்னம்மா இப்டிப் பண்றீங்களேம்மா’ செய்து மாட்டினேன். ஆனா, அதுலதான் பயங்கர ஃபேமஸ் ஆனேன்!’’ என்று சிரிக்கிறார், ராமர்.

``பொதுவா எனக்கு எந்த லேடி கெட்-அப் கொடுத்தாலும், அதுக்குத் தகுந்த ஒரு வாய்ஸ் கொண்டுவந்துடுவேன். ஆனா என் மனைவி, குழந்தைகளுக்கு நான் லேடீஸ் கெட்-அப் போடுறது பிடிக்கவே பிடிக்காது. ஒருமுறை ஒரு நிகழ்ச்சி முடிச்சுவந்தப்போ, ‘எங்கப்பா ஒரு ஹார்ட் பேஷன்ட். உங்க நிகழ்ச்சியைப் பார்த்து அப்படிச் சிரிப்பாரு. தேங்க்ஸ் சார்!’னு ஒருத்தர் வாழ்த்தினது, மறக்க முடியாதது. நான் நல்லா பாடுவேன்... லேடீஸ் வாய்ஸிலும்!’’

‘‘ரிகர்சலே பண்ணாம சிரிப்போம்!’’

"ரிகர்சல்ல, ரிகர்சலே செய்யாம சிரிப்போம்!"

‘‘லயோலா கல்லூரியில் நான் படிச்சப்போ, சவுண்ட் எஃபக்ட்ஸ்ல மிமிக்ரி செய்யும்என் திறமையை ஊக்குவிச்சு, என்ன படியேத்திவிட்டவர், என் நண்பர் ஜெயச்சந்திரன்!’’ என்று ஆரம்பித்தார் ஜார்ஜ் விஜய்...

‘‘தாம்சன் சார் எங்ககிட்ட கொடுக்கிற கான்செப்ட்டுக்கு எல்லாம், ரிகர்சலே பண்ண முடியாம விழுந்து விழுந்து சிரிப்போம். அவ்வளவு காமெடியா இருக்கும். எங்களுக்குக் கொடுக்கப்படற கேரக்டரை, கொஞ்சமும் தயங்காம எடுத்துப் பண்ணுவோம். அதுதான் எங்க டீமோட ப்ளஸ். நான் சில எபிசோடுகளில் சிலை, குரங்கு, எருமையா எல்லாம் நடிச்சிருக்கேன்(!). காமெடியன்னு பெயர் வாங்கியாச்சு. சினிமாவில் ஒரு வில்லன் ரோல் பண்ணணும். அதுதான் ஆசை. விஜய் டி.வி பிரதீப் மில்ராய் பீட்டர் சார், எங்க டைரக்டர் தாம்சன் சார்... நாங்க எல்லாருமே இவங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கோம். என்னோட மிகப்பெரிய பலம், என் மனைவி. நான் எவ்வளவு பணம் கொண்டு வந்து கொடுக்கிறேனோ அதுக்குள்ளேயே அழகா வீட்டைப் பார்த்துப்பாங்க. முயற்சி திருவினையாக்கும். இதுதான் என் மந்திரம்!’’

வே.கிருஷ்ணவேணி  படங்கள்: தி.ஹரிஹரன்

யன்தாராகிட்ட எப்படி புரொபோஸ் செய்வீங்க?

நீங்க முதலமைச்சர் ஆனா முதல்ல செய்யும் காரியம் என்ன?

காதல் நினைவுகளைக் கொஞ்சம் சொல்லுங்க!

- இப்படிப் பல கேள்விகளுக்கு சீரியஸாவும் சிரிப்பாவும் பதில் சொன்ன இந்த கோஷ்டியின் கலகல பேட்டியை, அருகில் இருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்தோ, கீழே இருக்கும் வீடியோ லிங்க்கை க்ளிக் செய்தோ பார்க்கலாம்.

http://bit.ly/aval8888

"ரிகர்சல்ல, ரிகர்சலே செய்யாம சிரிப்போம்!"
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism