அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

'க்ளிக்' பண்ணினேன்... வாழ்க்கையில் 'க்ளிக்' ஆகிட்டேன்!

'க்ளிக்' பண்ணினேன்... வாழ்க்கையில் 'க்ளிக்' ஆகிட்டேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
'க்ளிக்' பண்ணினேன்... வாழ்க்கையில் 'க்ளிக்' ஆகிட்டேன்!

'க்ளிக்' பண்ணினேன்... வாழ்க்கையில் 'க்ளிக்' ஆகிட்டேன்!

அறிமுகம்

சென்னை, கோயம்பேடு, புனிதர் தாமஸ் கல்லூரியில் பி.எஸ்ஸி., விஷுவல் கம்யூனிகேஷன் இறுதியாண்டு படிக்கும் என்னோட பேரு நரேந்திரன். நான் ஒரு புரொஃபஷனல் போட்டோகிராஃபராகவும் இருக்கேன். குழந்தைகளின் பிறந்தநாள் பார்ட்டி முதல் திருமணங்கள் வரை போட்டோ, வீடியோ அழகா கவர்செய்து கொடுப்பேன்.

'க்ளிக்' பண்ணினேன்... வாழ்க்கையில் 'க்ளிக்' ஆகிட்டேன்!

பயிற்சி

சின்ன வயசுல இருந்தே கேமரா கையுமா சுத்திட்டு இருப்பேன். காலேஜ் வந்த பிறகு என்னோட சீனியர்ஸ்கூட சேர்ந்து என்னை பட்டைத் தீட்டிக்கிட்டேன்.

கேமரா

60 டி கேமரா வெச்சிருக்கேன் பாஸ்! சித்தப்பாதான் என்னை நம்பி இன்வெஸ்ட் பண்ணாருங்க.

கட்டணம்

ஒரு மணி நேர கவரேஜுக்கு நம்ம ஃபீஸ் 1,500 ரூபாய். கஸ்டமர்களையும் பக்கத்துல வெச்சுட்டே, அவங்களுக்குப் பிடிச்சமாதிரி போட்டோ, வீடியோக்களை எடிட் செய்து கொடுக்கிறது நம்ம ஸ்பெஷல்.

'க்ளிக்' பண்ணினேன்... வாழ்க்கையில் 'க்ளிக்' ஆகிட்டேன்!



டைம் மேனேஜ்மென்ட்

தினமும் காலேஜ் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்த அஞ்சாவது நிமிஷம், கவரேஜுக்கு கிளம்பிடுவேன். விடுமுறை நாட்களில் வாடகைக்கு ஸ்டுடியோ எடுத்து மாடலிங் பண்றவங்களுக்கு போர்ட்ஃபோலியோ ஷூட் செய்வேன். படிப்பும், வேலையும் ஒண்ணுதான் என்பதால, பிராக்டிகலாவே எல்லாத்தையும் படிச்சிடுறேனே..!

கஸ்டமர்ஸ்

இருக்கே ஃபேஸ்புக்! நரேந்திரன்@Tinku-Marioo Photography மற்றும் NAREN WEDDING’S PHOTOGRAPHY... ப்ளீஸ் நோட் இட்!

வருமானம்

மாசம் 10,000 ரூபாய் சம்பாதிக்கிறேன் பாஸ்!

மெசேஜ்

மை டியர் ஸ்டூடன்ட்ஸ்... படிக்கும்போதே ஏதாச்சும் ஒரு வேலையை அல்லது பிசினஸை ஸ்டார்ட் அப் செய்துடுங்க. அது ரொம்பவே ஸ்பெஷல். என்னையே எடுத்துக்கோங்க... இதுவே நான் கோர்ஸை முடிச்சதுக்கு அப்புறம் கேமராவை எடுத்திருந்தா, பத்தோட பதினொன்றா ஆகியிருப்பேன். ஆனா, அதுவே ஸ்டூடன்ட்@போட்டோகிராஃபர் என்ற அம்சம்தான், என்னை `அவள் 16’ல் பேச வெச்சிருக்கு. ஸ்டூடன்ட்ஸான நாம ஒரு நல்ல விஷயம் செய்யும்போது, அதுக்கான பாராட்டும் அங்கீகாரமும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாவே கிடைக்கும். பயன்படுத்திக்கோங்க. ரொம்ப லாங் மெசேஜ் சொல்லிட்டேனோ?!

கட்டுரை மற்றும் படங்கள்:பா.அபிரக்‌ஷன்