க்வில்லிங் கிரீட்டிங் கார்டு... அள்ளுது ஹார்ட்டு!

‘‘எங்க அம்மா ஒரு கிராஃப்ட் டீச்சர். சின்ன வயசில் இருந்தே சில்க் த்ரெட் ஜுவல்லரி, டெரகோட்டா, ஆரி வொர்க்னு நானும் கிராஃப்ட்டும் கையுமாவே வளர்ந்தேன். பி.இ படிக்கும் போது, நானே செய்த ஹேண்ட்மேட் ஜுவல்லரிகளை விதம்விதமா காலேஜுக்குப் போட்டுட்டுப்போய் அசத்துவேன். திருமணம் முடிந்தது, ஹோம்மேக்கர் ஆகிட்டேன். கிஃப்ட் அயிட்டங்கள், கார்டுகள், ஃபேன்ஸி ஜுவல்ஸ்னு நேரம் கிடைக்கும்போது நான் செய்யும் கிராஃப்ட் அயிட்டங்களை எல்லாம், ‘என் ஆபீஸ்ல கேட்டுப் பார்க்கிறேனே’னு ஒருநாள் என் கணவர் அவர் அலுவலகத் துக்கு எடுத்துட்டுப் போனார். எல்லாமே சோல்டு அவுட்! போனஸா கிடைச்ச பாராட்டு களையும் அவர் எங்கிட்ட வந்து சேர்த்தப்பதான், இதை பிசினஸா செய்யும் ஐடியாவும், நம்பிக்கையும் வந்தது. இன்னிக்கு நான் ஒரு வெற்றிகரமான பிசினஸ் பெண். கிராஃப்ட் பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் பிசினஸ்னு இப்போ மாசம் 20,000 சம்பாதிக்கிறேன்’’

க்வில்லிங் கிளாஸ்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- சென்னை, பெருங்களத்தூரில் உள்ள ‘கிட்டி கிராஃப்ட்ஸ்’ஸின் உரிமையாளர் கார்த்தீஸ்வரி உற்சாகமாகச் சொன்னார். இங்கு நமக்காக அவர் க்வில்லிங் கிரீட்டிங் கார்டு செய்துகாட்டுகிறார்...

க்வில்லிங் கிரீட்டிங் கார்டு செய்யத் தேவையானவை:

க்வில்லிங் கிளாஸ்..!

3 mm க்வில்லிங் பேப்பர் -30, 10 mm க்வில்லிங் பேப்பர் - 20, ஹோம்மேட் பேப்பர் - 2 (மூன்று வகை பேப்பர்களும் விரும்பிய கலர்களில்), க்வில்லிங் ஊசி, கத்தரிக்கோல், ஸ்கேல், பென்சில், ஃபெவிக்கால்.

செய்முறை:

படம் 1: சிவப்பு க்வில்லிங் பேப்பர் 9 எடுத்து, அவற்றைத் தனித்தனியே சுற்றிக் காயில்செய்து, 9 `ஹார்ட்டின்’ வடிவங்கள் செய்யவும்.

படம் 2: இந்த வடிவங்களை, கீழ் அடுக்கில் 5 `ஹாட்டின்’கள், மேல் அடுக்கில் 4 `ஹாட்டின்’கள் என படத்தில் காட்டியுள்ளபடி பூபோல ஒட்டவும் (இந்தப் பூவை விருப்பம்போல அலங்கரித்துக்கொள்ளலாம்). இதேபோல இன்னொரு பூவும் செய்து காயவிடவும்.

படம் 3: இப்போது `டெடி பேர்’ உருவத்துக்கான காயில்கள் செய்யலாம். வெள்ளை நிற 10 mm க்வில்லிங் பேப்பர் 7 எடுத்து ஒரு டிசைனர் காயில், 5 பேப்பர் எடுத்து இன்னொரு டிசைன் காயில் என 2 டிசைனர் காயில்கள் செய்யவும். இதேபோல 3 வெள்ளை மற்றும் 2 சிவப்பு நிற 10 mm க்வில்லிங் பேப்பர் எடுத்து, இன்னொரு டபுள் கலர் டிசைனர் காயில் செய்யவும் (ஒரு ஜோடி). தவிர, வெள்ளை நிற க்வில்லிங் பேப்பரில் 2 பெட்டல் வடிவங்கள், ஒரு டைட் காயில் செய்யவும். `டெடி பேர்’ செய்யத் தேவையான இந்த அனைத்து வடிவங்களையும் செய்த பின், காயவிடவும்.

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 4: ஒரு ஹோம்மேட் பேப்பரை படத்தில் காட்டியுள்ளபடி இரண்டாக மடிக்கவும்.

படம் 5: 1 செ.மீ. இடைவெளியில், அதன் நான்கு புறங்களிலும் பென்சிலால் பார்டர் கோடுகள் வரையவும்.

க்வில்லிங் கிளாஸ்..!படம் 6: அந்தக் கோடுகள் மீது ஃபெவிக்கால் தடவவும்.

படம் 7: ஃபெவிக்கால் மீது ஒரு கோல்டன் கலர் க்வில்லிங் பேப்பரை பார்டர்போல ஒட்டிக் காயவிடவும். `கிரீட்டிங் கார்டு பேஸ்’ ரெடி.

படம் 8: ஒரு வெள்ளை நிற ஹோம்மேடு பேப்பரை, படத்தில் காட்டியுள்ளபடி `கிரீட்டிங் கார்டு பேஸ்’ஸின் நடுவில் ஒட்டக்கூடிய அளவில் வெட்டி ஒட்டவும்.

படம் 9: அதனைச் சுற்றி கோல்டன் கலர் க்வில்லிங் பேப்பரை பார்டர்போல ஒட்டிக் காயவிடவும்.

படம் 10: ஏற்கெனவே செய்துவைத்துள்ள டிசைனர் காயில்களை கிரீட்டிங் கார்டின் ஒரு முனையில் (5 பேப்பரில் செய்தது மேலே, 7 பேப்பரில் செய்தது கீழே) படத்தில் காட்டியுள்ளபடி `டெடி பேர்’ வடிவத்தில் ஒட்டவும்.

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 11: டெடிபேரின் கால், கை, காது, மூக்கு பகுதிகளுக்குச் செய்துவைத்துள்ள மற்ற டிசைனர் காயில்களை படத்தில் உள்ளதுபோல ஒட்டிக் காயவிடவும்.

படம் 12: செய்துவைத்துள்ள `ஹார்ட்டின்’ பூவை, கிரீட்டிங் கார்டில் ஒட்டவும்.

படம் 13: விருப்பத்துக்கேற்ப க்வில்லிங் பேப்பர்களை மடித்து ஒட்டி கார்டை மேலும் அலங்கரிக்கலாம்.

படம் 14: கலக்கலான க்வில்லிங் கிரீட்டிங் கார்டு ரெடி.

``காதலர் தினம் நெருங்குவதால், இதுபோல நிறைய டிசைன்கள் செய்து விற்பனை செய்யலாம். இது வித்தியாசமான கார்டு என்பதால், விரும்பி வாங்குவார்கள். ஒரு கார்டை தாராளமாக 300 ரூபாய் விலைவைத்து விற்க முடியும். இப்படி சீஸனுக்கு ஏற்ற கான்செப்டில் க்வில்லிங் கிரீட்டிங் கார்டை டிசைன் செய்து விற்றால், ஆன்லைனில் குவியும் ஆர்டர்கள்!’’ - கலகலப்பாக சொல்லி முடித்தார் கார்த்தீஸ்வரி.

- க்வில்லிங் கிளாஸ் தொடரும்....

சு.சூர்யா கோமதி  படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

அடிப்படை உருவங்கள் செய்வோம்!

காயில்

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 1: க்வில்லிங் பேப்பரை க்வில்லிங் ஊசியில் இருக்கும் துளையில் நுழைத்து சற்று டைட்டான காயிலாகச் சுற்றவும்.

படம் 2: சுற்றிய பேப்பர் உருவிவிடாதவாறு காயிலின் மையத்தில் பிடித்துக்கொண்டு ஊசியில் இருந்து மெதுவாகக் கழற்றவும்.

படம் 3: அதன் இறுதி முனையில் ஃபெவிக்கால் தடவி காயிலுடன் ஒட்டிக் காயவிடவும்.

படம் 4:
காயில் ரெடி.

தளர்வான காயில்

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 1: மேலே செய்தது போலவே, ஆனால் இறுக்க மாக இல்லாமல் சற்றுத் தளர்வாகச் சுற்றிக் காயிலை தயார் செய்யவும்.

டிசைனர் காயில்

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 1: 10 mm க்வில்லிங் பேப்பரை படத்தில் காட்டியுள்ளபடி அடிப்பகுதியில் வெட்டவும். 

படம் 2: அவ்வாறு டிசைன் செய்த க்வில்லிங் பேப்பர்களை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் காயவிடவும்.

படம் 3: காய்ந்ததும் காயிலாகச் செய்து, அதன் ஒரு முனையில் ஃபெவிக்கால் தடவி ஒட்டவும்.

படம் 4: டிசைனர் காயில் ரெடி. இதையே இரண்டு வண்ண க்வில்லிங் பேப்பர்களை இணைத்துச் செய்தால், டபுள் கலர் டிசைனர் காயில் ரெடி.

`ஹார்ட்டின்’ வடிவம் 

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 1: ஒரு தளர்வான காயில்செய்து, படத்தில் காட்டியுள்ளபடி இதய வடிவம் பெறுமாறு அழுத்தி விடவும்.

பெட்டல் வடிவம்

க்வில்லிங் கிளாஸ்..!

படம் 1: ஒரு காயில் செய்து, அதன் ஒரு பகுதியை அழுத்தி இலை வடிவத்தில் நீவிவிடவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism