பிப்ரவரி 14... அந்த சுபயோக சுபதினத்துக்குன்னு ஒரு டிரெஸ் கோடு இருக்கு. ‘இந்த கலர் டிரெஸ் போட்டா யெஸ்... இந்த கலர் டிரெஸ் போட்டா நோ’னு சுத்தி இருக்கிறவங்க கொடுக்கிற பில்ட்-அப்ல, ‘நாம ஏதாச்சும் ஒரு கலர்ல டிரெஸ் போட்டுட்டுப் போய், ‘ஓ அப்படியா!’னு நோட் பண்ண வெச்சுடக்கூடாதே’னு பதற்றத்துல இருக்கிற ‘ரொம்ப நல்ல புள்ளைங்களுக்கு'... அந்த டிரெஸ் கோடு பத்தின டீட்டெய்ல்ஸ் இங்கே...

கறுப்பு... வெறுப்பு!

‘இந்தக் காதல், கல்யாணத்தை எல்லாம் யாரு கண்டுபிடிச்சது?’னு உருட்டுக்கட்டையோட தேடிக்கிட்டிருக்கிற லட்சுமி மேனன் டைப் ‘லவ் ஹேட்டர்ஸ்’ பெண்களின் கலர்... கறுப்பு!

வெள்ளை... டபுள் சைடு `ஓ.கே'!

‘நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே’னு வெள்ளை மேகங்களுக்கு நடுவுல டூயட் பாடுற அளவுக்கு, ரெண்டு பக்கமும் `ஓ.கே' ஆகி லவ் டிராக் ஜம்முன்னு போயிட்டு இருக்குனு அர்த்தம். ‘யாரும் எங்கிட்ட வந்து ‘ஐ லவ் யூ’ சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாதீங்கப்பா’னு ஹேப்பியா சொல்ற ‘காதுமா’க்களின் கலர்தான்... வெள்ளை!

சிவப்பு... என்ட்ரி பாஸ் ஸ்டாக் இல்லை!

`வீட்டில் ஏற்கெனவே அத்தை பையன், முறை மாமன்னு ரெடியா லைன் கட்டி நிக்கிறாய்ங்க. இதுல புதுசா எந்த என்ட்ரி பாஸும் கொடுக்க முடியாது. ஆளைவிடுங்க அய்யாசாமிகளா'னு எஸ்கேப் ஆகிற பொண்ணுங்க... சிவப்பு சல்வாரில் சலோ!

‘பச்சை’யம்மா... பிரியம்!

‘அவனை ரொம்பப் பிடிச்சிருக்கு. அவனுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு. ஆனா, அவன் வாயைத் திறந்து ‘ஐ லவ் யூ’னு புரபோஸ் பண்றதுக்குள்ள ரெண்டு, மூணு ராக்கெட்டே விட்டுட்டாங்க. டே மங்குனி மண்டையா... உனக்கா கத்தான் வெயிட் பண்றேன்’னு அந்த ஸ்வீட் ராஸ்கலுக்கு செல்லமா சிக்னல் கொடுக்கும் கேர்ள்ஸின் சாய்ஸ்... பச்சை.

நீலம்... வெயிட்டிங் ஃபார் தி மொமென்ட் !

இப்போதைக்கு ‘காதல்’ என்ற சேப்டர் எல்லாம் வாழ்க்கையில் இல்லை. இனிமேலாவது காலகாலத்துல அந்த நல்ல விஷயம் நடக்கட்டும் என்பதை, ‘ஐ’ம் வெயிட்டிங்’னு ஊருக்கு அறிவிக்கும் சங்கத்தினரின் பிப்ரவரி 14 யூனிஃபார்ம்... நீலம்!

ஆரஞ்சு... தைரியம் வந்தாச்சு!

கண்ணாடி முன்னாடியே 1,759 தடவை ரிகர்சல் செய்தும், நேர்ல சொல்ல தைரியம் வரலை. இன்னிக்குதான் பொண்ணு நேரா பையன்கிட்ட விஷயத்தை சொல்லப்போகுது. அந்த தைரியத்தோட கலர்தான்... ஆரஞ்சு.

பிங்க்... இன்னிக்குதான் செட் ஆகியிருக்கு!

‘பார்த்து, சிரிச்சு, ஹலோ சொல்லி, காபி ஷாப் போய், ஃப்ரெண்ட்ஸ் ஆகி, காதல் பூ பூத்து, ஒருவழியா இந்த வேலன்டைன்ஸ் டே சுபநாளில்தான் அதை வெளிய சொல்லி செட் ஆகியிருக்கோம். அதனால, அதர் கைஸ் ப்ளீஸ் கெட் அவுட். ஃப்ரியா விடுங்க’னு லவ் மூடில் இருக்கும் கேர்ள்ஸின் கலர்... பிங்க்!

பிரேக்-அப் சோகம்.... மஞ்சள்!

நல்லாதான் போயிட்டு இருந்தது. யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல. பிரேக்-அப் ஆகி, சோக ராகம் பாடும் கேர்ள்ஸின் கலர்... மஞ்சள். முக்கிய குறிப்பு: இதை 100% உண்மைனு நம்பி யாராச்சும், எங்கயாச்சும் அடி வாங்கினா, கம்பெனி ஜவாப்தாரியல்ல!

கோ.இராகவிஜயா