``திங்கள் முதல் சனி வரை வீட்டு வேலை, ஆபீஸ், காலேஜ் என்று நிற்க நேரமில்லாமல் ஓடினாலும், சண்டே சில நிமிடங்கள் செலவிட்டால் சருமம், கூந்தல், கண்கள், பாதம் என அழகு சார்ந்த பிரச்னைகளை நிவர்த்திசெய்து மீளலாம்’’ என்று சொல்லும் சென்னை, பேர்ல்ஸ் பியூட்டி சலூனின் உரிமையாளர் முத்துலட்சுமி தரும் ஹோம்மேட் பியூட்டி டிப்ஸ் இங்கே!
முகம் பளிச்சிட...

வெயில் மற்றும் தூசியினால் முகம் வறண்டு காணப்படுபவர்கள் ஒரு டீஸ்பூன் பாலேட்டில் அரிசி மாவு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவ, முகம் பொலிவு பெறும்.

சருமச் சுருக்கங்களுக்கு சிறிதளவு கடலை மாவில் ஆலிவ் ஆயில் அரை டீஸ்பூன், வெண்ணெய் அரை டீஸ்பூன் சேர்த்துக் கலந்து பேக் போட்டுக் கழுவ, சுருக்கங்களுடன் கரும்புள்ளிகளும் குறையும்.

ஆயிலி ஸ்கின் உடையவர்கள் தினமும் 3 முதல் 5 முறை முகத்தை வெறும் நீரால் கழுவுவது சிறந்தது. அப்படிக் கழுவும்போது குளிர்ந்த நீரில் ஒருமுறை, வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை என மாறி மாறிக் கழுவ, எண்ணெய் சுரப்பு குறையும்.

ஆய்லி ஸ்கின்னுக்கு கடலை மாவு 100 கிராம், பாசிப்பயறு மாவு 100 கிராம், மஞ்சள்தூள் 10 கிராம் ஆகியவற்றுடன் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பேக் போட்டு காய்ந்தவுடன் கழுவ, முகம் எண் ணெய்ப் பசையில் இருந்து மீளும்.

முடி உதிர்வுக்குத் தீர்வு!

தினமும் ஃப்ரீ ஹேர் விடுகிறவர்களுக்கு, கூந்தல் சிக்குப் படுவதாலேயே முடி கொட்டும். அவர்கள் தலைக்குக் குளித்தவுடன் பாதி முடி உலர்ந்ததும் ஹேர் சீரத்தை (Hair serum) ஸ்கால்ப்பில் படாமல் கூந்தலில் மட்டும் தேய்த்துவந்தால் சிக்கு ஏற்படாமல் கூந்தல் பட்டாகும்.

வறட்சியால் முடி உதிர்வு எனில், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தயிர், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைக் கலந்து ஸ்கால்ப்பில் அப்ளை செய்து தொடர்ந்து குளித்து வர, முடி உறுதி அடைவதோடு உதிர்வதும் நிற்கும்.

பேன் தொல்லைக்கு ஒரு டீஸ்பூன் துளசி பவுடர், ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு டீஸ்பூன் மெடிக்கேர் ஆயில் (மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கும்) ஆகியவற்றைக் கலந்து தலையில் மசாஜ் செய்து குளித்தால், பலன் கிடைக்கும்.

முடி வலுவில்லாமல் மிகவும் `தின்’னாக காணப்பட்டால், ஒரு வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் பச்சரிசி மாவு, ஒரு டீஸ்பூன் ஹென்னா, ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து தொடர்ந்து தலை மற்றும் கூந்தலில் தேய்த்துக் குளித்து வர... கூந்தலின் வலு கூடும்.

கண் சோர்வு... கெட் அவுட்!

கண்களில் பஞ்சுவைத்து அதன் மேல் வெள்ளரிக்காய்த் துருவலை 15 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்தால்... சோர்வு, எரிச்சல் நீங்கி கண்கள் புத்துணர்வு பெறும்.

பயன்படுத்திய டீ பேக் அல்லது இரு முறை டிகாக்ஷன் எடுத்த தேயிலை எச்சத்தை ஃப்ரிட்ஜில் குளிரவைத்து எடுத்து கண்கள் மீது 10 நிமிடங்கள் வைத்திருந்து கழுவ... கண் சோர்வு, எரிச்சல் காணாமல் போகும்.

பாலேட்டுடன் தக்காளி கலந்து கண்களைச் சுற்றி மிருதுவாகத் தேய்த்துக் கழுவ, கருவளையம் நீங்கும்.

உடல் சூடு, உடல் கருமை நீங்க...

உடலில் சூடு அதிகமானால் முட்டையின் மஞ்சள் கரு, ஒரு கப் தயிர், ஒரு கப் பாசிப்பயறு மாவு, ஒரு கப் துளசி பவுடர் ஆகியவற்றைக் கலந்து, தலைக்கு பேக் போட்டு சிகைக்காய் தேய்த்துக் குளிக்க, சூடு நீங்கி உடல் குளிர்ச்சி பெறும்.

ஒரு கிராம் குங்குமப்பூவை கசக்கி 10 மில்லி பாதாம் எண்ணெயில் கலந்து லேசாகச் சூடுசெய்யவும். இதை உடலில் கருமை படர்ந்துள்ள இடங்களில், தடவி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் பாசிப்பயறு மாவால் 5 நிமிடங்கள் மசாஜ் கொடுக் கவும். கருமை நீங்கி உடல் வசீகரிக்கும்.

கை - கால் அழகு பெற...

கை, கால் கருத்து, வறண்டு காணப்படுபவர்கள் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், சிறிது பாலேடு, ஒரு வாழைப்பழம் ஆகியவற்றைக் கலந்து பேக் போட்டு அரை மணிநேரம் கழித்துக் கழுவ, சருமம் பொலிவு பெறும்.

ஒரு டப் அல்லது பக்கெட்டில் பாதங்கள் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு... அரை டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், சிறிது யூகலிப்டஸ் ஆயிலைச் சேர்த்து, அதில் பாதங்களை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின் பெடிக்யூர் ஃபிரஷ்கொண்டு தேய்க்க, பாதம் வெடிப்புகள் நீங்கி மென்மையாகும்.சண்டே... இனி பியூட்டிக்கான டே!

- சு.சூர்யா கோமதி