வடஇந்தியாவில் மிகவும் பிரபலமான ஆரி டிசைன், சில வருடங்களாக தென்னகத்திலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதற்கான பயிற்சிகள், தொழில் ஆலோசனைகளைப் பற்றிப் பேசினார், சென்னையைச் சேர்ந்த ஜெயமாலினி குமரன். கடந்த எட்டு ஆண்டுகளாக ஆரி டிசைன்ஸ் செய்துவரும் இவர், சைதாப்பேட்டையில் இருக்கும் தனது ‘ஸ்ரீ ஆரி கிரியேட்டிவ்ஸ்’ மூலம் பயிற்சிகளும் வழங்கிவருகிறார்.

‘‘ஆரி என்பது, பேனா போன்ற ஒரு ஊசியின் மூலம் ஆடைகளில் வண்ண வண்ண நூல்கள், மோட்டிஃப்கள் கொண்டு டிசைன் செய்வது. எம்ப்ராய்டரி மற்றும் மெஷின் வொர்க்குகளைவிட, இந்த வேலைப்பாடு மிகவும் பிரத்யேகமாகவும் நுட்பமாகவும் இருக்கும். குறிப்பாக, மணப்பெண் ஆடைகளில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் புடவை, பிளவுஸ், பாவாடை மட்டுமல்லாமல், ஆண்கள் அணியும் மணமகன் குர்தாவிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு.

ஆரி வேலைப்பாடு பயிற்சியைப் பெற வயது வரம்பு இல்லை. ஆர்வம் உள்ள எவரும் பயிலலாம். கிராஃப்ட்டில் ஆர்வமுள்ள பெண்கள், இன்றைய சூழ்நிலையில் இதை நம்பிக்கையுடன் கற்று, தொழிலாக முன்னெடுக்கலாம். தரமான பயிற்சி, வளமான கற்பனை, விடாமுயற்சி இருந்தால், பகுதி நேரமாக இதைச் செய்தே மாதம் 10,000 ரூபாய்வரை சம்பாதிக்கலாம்’’ என்று கூறும் ஜெயமாலினி, ஆரி தொழிலில் வெற்றி பெற வழிகாட்டும் வகையில், கீழ்க்காணும் தலைப்புகளில் பேசுகிறார்...

** ஆரி எம்ப்ராய்டரிக்கு எத்தகைய வரவேற்பு உள்ளது?

** ஆரி வொர்க் பயிற்சி பெறும் வழிகள் என்ன?

** வீட்டில் இருந்தபடியே ஆரி வொர்க் பிசினஸைத் தொடங்குவது எப்படி?

** ஆரி எம்ப்ராய்டரிக்குத் தேவையான பொருட்களை எங்கு வாங்குவது?

** பிசினஸ் தொடங்கி ஆர்டர் பெறுவதும், அதை விருத்தி செய்வதும் எப்படி?

** ஆரி துறையில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்?

** ஆன்லைன் மூலமாக ஆர்டர்கள் பெறுவது எப்படி?

‘வழிகாட்டும் ஒலி’யில் ஜெயமாலினியின் வார்த்தைகளைக் கேட்க... பிப்ரவரி 9 முதல் 15 வரை, 044 - 66802912* எண்ணை டயல் செய்யுங்கள்.

- ச.சந்திரமௌலி எம்.உசேன்