நடிகை லட்சுமி மேனன், எப்போதும் மனதில் உள்ளதை வெளிப்படையாக, தைரியமாகப் பேசுபவர். உலகமே காதலைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், ‘காதலும் வேண்டாம்... கல்யாணமும் வேண்டாம்!’ என்று சிரிப்பவரிடம் ஒரு பேட்டி.

‘‘நான் சொல்றதெல்லாம் என்னோட தனிப்பட்ட கருத்து. அதெல்லாம் சரின்னு நான் சொல்லலை. என் மனசுக்குத் தோணுறதைச் சொல்றேன்...’’ - வாக்குமூலத்துடன் ஆரம்பிக்கிறார் கண்ணழகி...

‘‘காதல், கல்யாணம் என்றால் ஏன் இவ்வளவு கோபம்?’’

‘‘கோபம்னு சொல்ல முடியாது. காதலிச்சாலும் சரி, கல்யாணம் பண்ணிட்டாலும் சரி... நம்மளோட இயல்பை நாம தொலைக்கணும் என்பதுதான் அங்க முதல் விதியா இருக்கு. அது என்னால முடியவே முடியாது. என் வாழ்க்கையில் பாதியில் வந்து சேர்ந்துக்கிற ஒருத்தருக்காக, அத்தனை வருஷம் ‘நான்’ ஆக இருந்த என்னை ஏன் மாத்திக்கணும்? ஒவ்வொரு விஷயத்துக்கும் எதுக்காக பெர்மிஷன் வாங்கணும்? எனக்கு யாரோட கன்ட்ரோல்லயும் இல்லாமல் சுதந்திரமா இருக்கணும். அதோட, நான் ரொம்பவே ஓப்பன் டைப். மனசுல படுறதை உடனே வெளிப்படையா பேசிடுவேன். இதுவரைக்கும் காதல்னு சொல்ற மாதிரி எந்த ஃபீலும் எனக்கு வந்ததும் இல்லை; இனி வரப்போவதும் இல்லை. இந்த உலகம் தோன்றினப்போ... காதல், கல்யாணம்னு எதுவும் இல்லையே? மனுஷங்க உருவாக்கினதுதானே அந்த கல்ச்சர்? ஸோ, அது இல்லாமலும் என்னால வாழ முடியும். அப்படி வாழறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க..! சொல்லப்போனா, பொண்ணா பிறந்ததுக்கே ரொம்ப கவலைப்படுற ஆளு நான். இதுல காதல், கல்யாணம்னு வேற சிக்கிட்டு... நோ சான்ஸ்! எனக்கு நிறைய பாய் ஃப்ரெண்ட்ஸும், ரெண்டே ரெண்டு கேர்ள் ஃப்ரெண்ட்ஸும் இருக்காங்க. அவங்க எல்லாம் எனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ். லிமிட் தாண்டி லவ் என்ற சர்க்கிளில் சிக்கிக்க மாட்டேன். இதுதான் லட்சுமி மேனன். எந்த எமோஷனல் கமிட்மென்ட்ஸும் இல்லாம, என் ட்ரீம் நோக்கிப் போயிட்டு இருக்கேன்.’’

‘‘என்ன உங்க ட்ரீம்..?’’

‘‘வேர்ல்டு டூர் போறதுதான் என்னோட ட்ரீம். உலகம் முழுக்கச் சுத்தணும். சின்ன வயசுல பெருசா எந்த டூரும் போனதில்லை. என் 17 வயசுல, எல்லா நாடுகளுக்கும் தனியா போய் சுத்திப் பார்க்கணும்னு ஒரு ஆசை எனக்குள்ள வந்தது. இப்போ அதுதான் என்னைத் துரத்திட்டு இருக்கு. முதல் கட்டமா கிரீஸ், வெனீஸ், கனடா, நியூயார்க், ஆஸ்திரேலியா போகணும் என்பது என் பிளான். அந்த மக்களோட கலாசாரம், பழக்கவழக்கம், உணவு, உடைன்னு எல்லாத்தையும் பார்த்து, ரசிச்சு பிரமிக்கணும். முக்கியமான விஷயம்... என்னோட அந்தப் பயணத்துல யாரும் கூட வரக்கூடாது. தன்னந்தனி மனுஷியா உலகைச் சுற்றி வரணும்!’’

‘‘தனிமை பிடிக்குமா?’’

‘‘ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல நான் ரொம்ப துறுதுறு. ஆனா, டீன் வயசுல சட்டுனு அப்படியே ரிசர்வ்டு டைப் ஆகிட்டேன். வீட்டில் இருந்தாலும், என் ரூமில்தான் இருப்பேன். எந்த ஊரு ஷூட்டிங்குக்கும் தனியாதான் போயிட்டு வருவேன். அதனாலதான், தனியா வேர்ல்டு டூர் ஆசை!’’

‘‘வாழ்க்கை முழுக்கத் துணையில்லாம இருந்துட முடியுமா?’’

‘‘நிறைய பேர் `உன் கேரக்டர், ட்ரீமுக்கு செட் ஆகிற ஒரு பையனை கல்யாணம் பண்ணிக்கலாமே’னு கேட்டிருக்காங்க. அந்த கான்செப்டே எனக்குப் பிடிக்கலையே! நான் எப்பவும் தனியாதான் இருக்க விரும்புறேன். அந்த எழுதப்படாத சட்டத்துக்குள்ள என்னால வரமுடியாது.’’

‘‘இப்படி சொல்லிவிட்டு, பின்னர் காதல் கல்யாணம் செய்துகொண்டவர்கள் உண்டே!''

‘‘நிச்சயமில்லாத நாளையைப் பற்றி உங்களுக்கு எந்த வாக்குறுதியும் என்னால தரமுடியாது. ஒருவேளை சேர்ந்துதான் வாழணும்னு இருந்தா... `லிவிங் டுகெதர்' முறையில வாழ்ந்துடுவேன். நிறைய கேர்ள்ஸ், தங்களோட ட்ரீமுக்காக கல்யாணம் பண்ணிக்காம இருக்காங்க. நானும் அப்படி ஒருத்தியா இருக்க விரும்புறேன்.’’

‘‘இப்போது காதல் கசக்கிறது சரி... இதற்கு முன் காதலித்த அனுபவம் உண்டா?’’

‘‘காதல் இல்லை, நிறைய க்ரஷ் இருந்திருக்கு. டீன் வயசில் நிறையப் பசங்களை சைட் அடிச்சிருக்கேன். சில இன்ஃபேச்சுவேஷன் கதைகளும் இருக்கு. ‘பாய்ஸ்’ படம் ரிலீஸ் ஆனப்போ, சித்தார்த்மேல எனக்கு பயங்கர க்ரஷ். அவர்கூட நடிச்சதுக்கு அப்புறமும் அந்த க்ரஷ் அப்படியே இருக்கு. அதேபோல, இப்போ ‘ஜெயம்’ ரவி மேல க்ரஷ். க்ரஷுக்கும், காதலுக்கும் வித்தியாசம் இருக்குங்க!’’

‘‘வாட் நெக்ஸ்ட்?’’

‘‘ஜர்னலிசம் சார்ந்த இங்கிலீஷ் காபி எடிட்டிங் கோர்ஸ் ரெகுலர்ல படிச்சுட்டு இருந்தேன். சினிமா கரியர்னால அதை டிராப் செய்துட்டு, இப்போ இந்திராகாந்தி ஓபன் யுனிவர்சிட்டியில பி.ஏ., இங்கிலீஷ் லிட்டரேச்சர் படிக்கிறேன். ‘ஜெயம்’ ரவி’கூட நடிச்ச ‘மிருதன்’ படம் ரிலீஸுக்கு ரெடி. அடுத்து ஜீவா, விஜய் சேதுபதிகூட படங்கள் கமிட் ஆகியிருக்கேன்.

பை த வே... ஹேப்பி வேலன்டைன்ஸ் டே!’’

- சிரிக்கிறார், லட்சுமி மேனன்.

கு.ஆனந்தராஜ்