கும்பகோண மகாமகம், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வைபவம். இந்த வருடம் பிப்ரவரி 13-ம் தேதி துவங்கி 22-ம் தேதி மகாமகப் புனித நீராடலோடு நிறைவடைகிறது. விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் 13-ம் தேதி கொடியேற்றத்தில் இருந்து 10 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் மகாமகக் குளத்தில் நீராடலாம்.

கும்பகோணத்தின் கதை!

பெரும் வெள்ளத்தால் இந்த உலகமே அழியும் நிலை வந்தபோது, தேவர்கள் சிவபெருமானின் ஆணைக்கு இணங்க, ஒரு கும்பத்தில் அமுதத்தை நிரப்பி பூஜை செய்தனர். அப்போது மாபெரும் வெள்ளம் வந்து அந்தக் கும்பத்தை அடித்துச்சென்று ஒரு சிறிய குன்றின் மீது சேர்த்தது. தேவர்களின் வேண்டுதலால் பூமிக்கு இறங்கி வந்த சிவபெருமான் அந்தக் குன்றின் மீது இருந்த கும்பத்தை அம்பு எய்து உடைத்தார். உடைந்த கும்பத்தின் மூக்கு விழுந்த இடம் ‘குடமூக்கு’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘கும்பகோணம்’ என்றானது. கும்பம் உடைந்து அமுதம் வழிந்தோடி தங்கிய இரண்டு பள்ளங்கள்தான், மகாமகக் குளம் மற்றும் பொற்றாமரைக் குளம்.

மகாமகத்தின் சிறப்பு!

ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நட்சத்திரம் சிறப்புப் பெறும். அந்த வகையில் மாசி மாதம் பௌர்ணமியுடன் மக நட்சத்திரம் இணையும் நாளில், சிம்ம ராசியில் சந்திரனுடன் குருபகவான் இணையும் நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். அதுவே மகாமகம்.

மகாமகத் தீர்த்தத்தின் மகிமைகள்! நவ கன்னிகா நதிகள் என்று போற்றப்படும்கங்கா, யமுனா, நர்மதா உள்ளிட்ட 9 நதிகளும்சிவபெருமானிடம், ‘மக்கள் தங்களின் பாவங்களை எங்களிடம் கரைத்துச் செல்கின்றனர்.நாங்கள் அதை எங்கு சென்று போக்கிக் கொள் வது?’ என வேண்ட... சிவபெருமான், ‘கும்பகோணத்தில் மகாமகத்தன்று மகாமகக் குளத்தில்நீராடுங்கள்... பாவங்கள் விலகும்’ என்றார்.

நீராடும் முறை!

மகாமகத்தன்று கண் விழிக்கும்போதே ஆதி கும்பேஸ்வரரை மனதில் நினைத்துப் பிரார்த்திக்க வேண்டும்.

மகாமக குளத்தில் மூன்று முறை மூழ்கி எழுந்து தீர்த்தக் கிணறுகளை நோக்கியவாறு வணங்க வேண்டும். பிறகு, கும்பேஸ்வரன் கோயில் அருகேயுள்ள பொற்றாமரைக் குளத்துக்குச் சென்று, சுவாமி இருக்கும் திசையை நோக்கியவாறு மூழ்கி எழ வேண்டும். பின்னர் காவிரியிலும் மூழ்கி எழ வேண்டும். இதனால் நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

குறிப்பு: மகாமகத்தில் புனித நீராடும் முன்பு, பஞ்ச குரோச திருத்தலங்களான திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, கருப்பூர், திருவிடைமருதூர் ஆகிய தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்தாக வேண்டும் என்பது ஐதீகம்.

பலன்கள்!

மகாமக தீர்த்தத்தை ஒருமுறை வணங்கினால் தேவர்களை வணங்கிய புண்ணியமும், பூமியை 100 முறை சுற்றிய புண்ணியமும், கங்கைக் கரையில் 100 ஆண்டுகள் வாழ்கிற பலனும் கிடைக்கும்!

மகாமகத்தால் பெண்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களைச் சொல்கிறார், மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நடத்தி வரும் சுவாமிநாத சிவாச்சார்யார்...

‘‘மகாமகத்தின் மகத்துவமே 9 புண்ணிய நதிகளும் பெண்களாக உருவெடுத்து மகா மகக் குளத்தில் நீராடுவதுதான். அப்படி நீராடுபவர்களுக்கு தீர்த்தமளிப்பதற்காக ஆதி கும்பேஸ்வரருடன் மங்களாம்பிகை வருகிறாள். எனவே, பெண்கள் செம்பருத்திப் பூவை கையில் வைத்து ‘மங்களாம்பிகையாய நமஹ’ என்றபடி, 9 நதிகளையும் ஒவ்வொன்றாக வேண்டிக்கொண்டு, செம்பருத்தியை குளத்தில் போட்டு நீராட வேண்டும். இதன் மூலம் பெண் களின் திருமணத் தடை, கர்ப்பப்பை நோய்கள் அகலும், குழந்தை பாக்கியம் உண்டாகும், தீர்க்கசுமங்கலி பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.’’

மகாமகம், மாவரம்!

தி.ஜெயப்பிரகாஷ்