Election bannerElection banner
Published:Updated:

ஒரு டஜன் யோசனைகள்!

ஒரு டஜன் யோசனைகள்!
ஒரு டஜன் யோசனைகள்!

பதற்றம், ஒப்பீடு... தவிருங்கள், வெல்லுங்கள்!பரீட்சையில் தேர்ச்சி பெற பயனுள்ள கைடு

நெருங்கிவிட்டன பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள். உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு பரீட்சை நேரத்தில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க பெற்றோர்களுக்கு உதவும் ஒரு டஜன் ஆலோசனைகளை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அசோகன்.

பதற்றம் தவிர்க்கவும்...

பொதுவாக, பதற்றம் அதிக மானாலே அங்கு செயல்பாடு குறையும். எனவே, பிராக்டிகல்ஸ், தேர்வு அட்டணை வெளியீடு, ஹால் டிக்கெட் பெறுவது என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ‘அய்யோ... பரீட்சை வந்துடுச்சே’ என்று பதற்றம்கொள்ளாமல், நிதானத்துடன் உங்கள் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள். 

திட்டமிடல் அவசியம்!

குறைந்தபட்சம், தேர்வுக்கு ஒரு வாரம் முன்பே, எந்தெந்த நாட்களில் என்னென்ன பாடங்களை ரிவைஸ் செய்ய வேண்டும் என்பது தொடர்பான திட்டமிடலை உருவாக்கிக்கொள்ளலாம். அந்த அட்டவணையை அவர்கள் படிக்கும் அறையில் ஒட்டி, ஃபாலோ செய்யச் சொல்லலாம். ஒருவேளை திட்டமிட்டபடி படிக்க முடியவில்லை, சில பாடங்களுக்கு கூடுதல் நேரம் ஆகிறது எனில், டென்ஷன் வேண்டாம். அதற்கேற்ப அட்டவணையில் மாற்றம் செய்துகொள்ளலாம். 

ஒப்பீடு வேண்டாம்!

பொதுவாக, தேர்வு நேரத்தில் மாணவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, மற்ற மாணவர்களுடன் தங்களை ஒப்பிட்டுக்கொள்வது. ஒவ்வொரு மாணவருக்கும் படிக் கும் நேரம், அதனை மனதில் தக்கவைத்துக்கொள்ளும் திறன் மாறுபடும். எனவே அவர்கள் நண்பர்கள், தோழிகளுக்கு போன்செய்து, ‘இந்த சப்ஜெக்ட் முடிச்சிட்டியா? அய்யோ, நான் இன் னும் பாதியைத் தாண்டலையே...’ என்பது போன்ற ஒப்பீட்டுப் புலம்பல்களை கண்டிப்பாக அனுமதிக்காதீர்கள். அது அவர்களின் பதற்றத்தையே அதிகரிக்கும்.

ஒரு டஜன் யோசனைகள்!

சிரமமான பாடங்கள்... 

காலை நேரத்தில் மனது ரிலாக்ஸ்டாகவும், ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கும் என்பதால், உங்கள் பிள்ளை கொஞ்சம் சிரமமாக உணரும் பாடங்களை அந்நேரத்தில் படிக்க வலியுறுத்தலாம். மேலும், அதிக நேரம் தொடர்ந்து படிக்கும்போது ஒரே பாடத்தைப் படிக்காமல், சோர்வாக உணரும் சமயங்களில் வேறு பாடத்தை மாற்றிப் படிக்க வலியுறுத்தலாம். படிக்கும்போது ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் அவர்களுக்கு 5 முதல் 10 நிமிடங்கள் பிரேக் கொடுத்து, ரிலாக்ஸாக வழிசெய்யுங்கள்.

கற்றலில் நுட்பம்!

சற்று கடினமான வினாக்கள், சமன் பாடுகளை முதல் எழுத்தைக்கொண்டு நினைவில் வைத்துக்கொள்வது, கீ வேர்ட்ஸ்கொண்டு படிப்பது என்று, சில நுட்பங்கள் மூலம் பிள்ளைகளின் மனதில் பதியவைக்கச் சொல்லுங்கள்.

மாதிரித் தேர்வுகள்! 

அட்டவணை, வரைபடம் என்று தேவைப்படும் கேள்விகளை, அதற்குத் தகுந்தவாறு தயார் செய்து கொள்ள வேண்டியது முக்கியம். தேர்வில் எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க நேரம் போதவில்லை என்று உங்கள் பிள்ளை நினைக்கும் பாடங்களின் தேர்வுகளுக்கு, மாதிரித் தேர்வுகள் எழுதவைக்கலாம். இது அவர்களின் வேகத்தையும், நம்பிக்கையையும் அதிகப்படுத்தும்.

மன அமைதி... மஸ்ட்!
 
தேர்வு சமயத்தில் உங்கள் வீடு, சொந்தங்கள் அல்லது வீட்டைச் சுற்றி நடக்கும் பிரச்னைகள் பிள்ளையின் மனதைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோல, நட்பு வட்டம், ஆசிரியரின் கண்டிப்பு என்று அவர்களுக்கு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்று கண்டறிந்து, அதிலிருந்து அவர்களை மீட்டு, அவர்களுக்கு அமைதியான, நிம்மதியான மனதை கொடுங்கள்... நினைத்ததைப் படித்து முடிக்க!

உறக்கமும் உணவும்...

தேர்வு சமயத்தில் பிள்ளைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும், எளிதில் செரி மானமாகாத மற்றும் அவர்களுக்குப் பிடிக்காத உணவுகளை எல்லாம் கொடுக்க வேண்டாம். எளிமையான, அவர்கள் விருப்பத்துடன் சாப்பிடும் உணவாக செய்துகொடுங்கள். அதேபோல, தேர்வுக்கு முந்தைய நாள் 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் மிக அவசியம். தூக்கமின்மை... சோர்வு மற்றும் மறதியை ஏற்படுத்தலாம்.
 
கேள்வித்தாள் கணிப்புகள்... ஜாக்கிரதை!

‘இந்தக் கேள்வி நிச்சயம் வரும்’, ‘இந்தப் பாடத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கமாட்டாங்க’ போன்ற கணிப்புகள் தவறு என்பதையும், `ஒருவேளை கணிப்புக்கு மாறாக கேள்விகள் கேட்கப்பட்டால் ஒட்டு மொத்த மனநிலையும் அந்நேரத்தில் உடைந்துபோகும்' என்பதையும் அவர்களுக்குப் புரியவையுங்கள்.

ஒரு டஜன் யோசனைகள்!

பாசிட்டிவ் எண்ணங்கள்...

தேர்வுக்கு முந்தைய நாள் மாணவர்கள் எதையும் புதிதாகப் படிக்க வேண்டாம். ஏற்கெனவே அவர்கள் என்ன படித்துள்ளார்களோ அதைத் தெளிவாக ரிவைஸ் செய்தாலே போதும். ‘நீ நல்லா படிச்சிருக்கே... சூப்பரா எழுதுவே. ஒருவேளை சில கேள்விகளுக்கு விடை தெரியலைன்னாலும், தெரிஞ் சதை நல்ல எழுதிட்டு வா’ என்று நம்பிக்கை கொடுத்து, பாசிட்டிவ் எண்ணங்களுடன் அவர்களை தேர் வுக்கு அனுப்பிவைக்க வேண்டியது பெற்றோர்கள் பொறுப்பு. மாறாக, ‘ஒரு மார்க் கொஸ்டீன்ஸ்ல விட்டு டாதே’, ‘அந்தக் கேள்வியில் எப்பவும் சமன்பாடுகளை மாத்தி எழுதுற மாதிரியே இப்பவும் எழுதிடாதே’ என்பது போன்ற நெகட்டிவ் வலியுறுத் தல்கள் வேண்டவே வேண்டாம்.

தேர்வு அறை...

குறிப்பிட்ட நேரத்துக்கு அரை மணி நேரம் முன்பாகவே தேர்வு மையத்துக்குச் சென்றுவிடுவது நல்லது. கால தாமதமாக தேர்வு அறைக்குச் செல்வதால் ஏற்படும் பதற்றம், பரீட்சை பேப்பரிலும் எதிரொலிக்கும்.

முடிந்த தேர்வை மறக்கவும்!

ஒரு தேர்வு முடிந்த உடன், அந்த வினாத்தாள் பற்றி நண்பர்கள், தோழிகளுடன் விவாதிக்க அனுமதிக் காதீர்கள். ‘அய்யோ, இதுக்கு இதுவா ஆன்ஸர்... நான் மாத்தி எழுதிட்டேனே’ என்பது போன்ற புலம்பல்களுக்கு, எந்த பலனும் இருக்கப்போவதில்லை என்பதுடன், அது அடுத்த தேர்வுக்குத் தயாராவதில் மன சுணக்கத்தை ஏற்படுத்தும்.

உங்களுக்கும் உங்கள் பிள்ளை களுக்கும் வாழ்த்துகள்!

-  சு.சூர்யா கோமதி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு