Election bannerElection banner
Published:Updated:

'பெண்ணாக பிறப்பது சாபம்'... நிரூபிக்கும் பொதுக்கழிப்பிடங்கள்!

'பெண்ணாக பிறப்பது சாபம்'... நிரூபிக்கும் பொதுக்கழிப்பிடங்கள்!
'பெண்ணாக பிறப்பது சாபம்'... நிரூபிக்கும் பொதுக்கழிப்பிடங்கள்!

சுகாதாரக் கேடு

லக நாடுகள் கழிவு மேலாண்மையில் பல புதிய திட்டங்களை மிகுந்த தொழில்நுட்பத்துடன் செயல்படுத்தி வருகின்றன. ‘டிஜிட்டல் இந்தியா’ என கூக்குரல் எழுப்பப்படும் நம் நாட்டில், மக்களின் கழிப்பறைத் தேவைகளே இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நம் இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதம் பேர் கழிப்பிட வசதியற்றவர்கள். இன்னொரு பக்கம், பொதுக்கழிப்பிடங்களின் நிலைமை மிகவும் மோசம். எந்த சமூகப் பிரச்னையிலும் ஆண்களைவிட அதிகமாகப் பாதிக்கப்படும் பெண்கள், கழிப்பறை சுகாதாரக்கேட்டால் ஆரோக்கியத்தில் இருந்து மன அழுத்தம்வரை பல தளங்களிலும் துயரப்படுகிறார்கள். 21-ம் நூற்றாண்டிலும், ‘எங்களுக்கு நல்ல நிலையில் இருக்கிற ஒரு பப்ளிக் டாய்லெட்கூட இல்லை’ என்ற அவர்களின் குமுறல்களுக்கு முன், இத்தனை ஆண்டுகள் நம்மை ஆண்ட கட்சிகள் நிற்க வேண்டும்... கூனிக்குறுகி!

'பெண்ணாக பிறப்பது சாபம்'... நிரூபிக்கும் பொதுக்கழிப்பிடங்கள்!

காஞ்சனா, ஓய்வுபெற்ற அரசு அலுவலர், மதுரை

'பெண்ணாக பிறப்பது சாபம்'... நிரூபிக்கும் பொதுக்கழிப்பிடங்கள்!

‘‘பல ஊர்களில் வேலை பார்த்திருக்கிறேன். என் 33 ஆண்டு பணி அனுபவத்தில், பராமரிக்கப்பட்ட பெண்கள் கழிப்பறையை ஓரிடத் தில்கூட நான் கடந்ததே இல்லை.

அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு என்று கழிப்பறைகள் இருக்கும்; கதவு இருக்காது. கதவு இருந்தால், தண்ணீர் இருக்காது. தண்ணீர் இருக்கும் கழிவறைகள், சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசும்.

சில அலுவலகங்களின் வளாகத்தின் மூலையில், இருள் சூழ்ந்த இடத்தில் பெண்களுக்கான கழிவறையைக் கட்டியிருப்பார்கள். இன்னும் சில அலுவலகங்களில் பெண்களின் கழிப்பறையில் பூட்டு தொங்கும். இதற்கெல்லாம் அர்த்தம் ஒன்றுதான்... பெண்களின் நசுக்கப்பட்ட பல அடிப்படைத் தேவை, உரிமைகளில், பொதுக்கழிப்பறையும் அடக்கம்!

இன்னும் 10 வருடங்கள் கழித்து ஒரு பெண்ணிடம் பப்ளிக் டாய்லெட் பற்றிப் பேசினாலும், அவரின் நிலையும் இதுவாகவே இருக்கும் என்பதுதான் உண்மை, கொடுமை!’’

செல்வி ராஜேந்திரன், ஆட்டோ ஓட்டுநர், திருச்சி

'பெண்ணாக பிறப்பது சாபம்'... நிரூபிக்கும் பொதுக்கழிப்பிடங்கள்!

‘‘ஆட்டோ டிரைவ ரான என் கணவர் ராஜேந்திரன் சென்ற வருடம் நெஞ்சுவலியால் இறந்த பின், என் மூன்று பெண்களைக் காப்பாற்ற நான் இப்போது ஆட்டோ ஓட்டுகிறேன். காலையில் 8 மணிக்கு வண்டியை எடுத்தால், வீடு திரும்ப இரவு 9 மணி ஆகிவிடும். அவசரத் தேவைகளுக்கு பொதுக்கழிப்பிடங்களைத்தான் பயன்படுத்தியாக  வேண்டும். ஆனால், அது சகித்துக்கொள்ள முடியாததாக இருக்கும். மாதவிடாய் நாட்களில் சவாரிக்குச் செல்வது இல்லை. கைப்பேசியில் அழைக்கும் ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டும் மறுக்கமுடியாமல் செல்வேன். பெண்ணாகப் பிறப்பது பாவம் என்பதை, ஒவ்வொரு பொதுக்

கழிப்பறையிலும் நிரூ பித்துக் கொண்டிருக்கிறது அரசு.’’

கவிதா, தனியார் பள்ளி ஆசிரியர், தஞ்சாவூர்

'பெண்ணாக பிறப்பது சாபம்'... நிரூபிக்கும் பொதுக்கழிப்பிடங்கள்!

``நான் கர்ப்பமாக இருந்தபோது ஒரு நிகழ்ச்சிக்காக தஞ்சாவூரில் இருந்து சென்னைக்குப் பகல் நேரப் பேருந்தில் சென்றேன். வழியில் பேருந்து நிறுத்தப்பட்ட ஒரு மோட்டலில், கழிவறை சென்றேன். அங்கு நிலைமை படுமோசம். அதனால் சிறுநீர்த்தொற்று ஏற்பட்டுவிட்டது. நிகழ்ச்சி முடிந்து மீண்டும் ஊர் திரும்பியபோது, சிறுநீரை அடக்கிவைத்ததால், கால்கள் வீங்கிவிட்டன. கூடவே, சிறுநீர் கடுப்பு, வலி என படுத்தியெடுக்க... டாக்டரிடம் சென்றபோது, ‘கர்ப்ப

காலத்தில் இப்படி சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்து. இவற்றால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படலாம்’ என எச்சரித்தார். என்ன செய்வோம் பெண்கள் நாங்கள்?!’’

கிளாடி, திருநங்கை

'பெண்ணாக பிறப்பது சாபம்'... நிரூபிக்கும் பொதுக்கழிப்பிடங்கள்!

‘‘கழிவறை சுத்தமாக இல்லை என்று பெண்கள் புலம்பும் வேளையில், எங்களுக்குக் கழி வறைகளே இல்லை என்று கதறிக்கொண்டிருக்கிறோம் திருநங்கைகள். பெண்கள் கழிவ றைகளில் எங்களை அனுமதிக்க மாட்டார்கள். அவஸ்தையான சமயங்களில் முக்காடிட்டபடி சென்று, வெளியேறும்வரை பேச்சு எழுப்ப மாட்டோம். ஒரு

வேளை நாங்கள் திருநங்கை என்று தெரிந்துவிட்டால், அந்த இடத்தில் சகிக்கமுடியாத அவமானங் களைச் சந்திக்க வேண்டிவரும்.

திருநம்பிகளின் நிலைமை இன்னும் மோசம். அவர்கள் ஆண்களுக்கான பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தச் சென்றால், பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறார்கள். இயற்கை உபாதைக்கு வழியே இல்லாமல் நிற்கும் கையறு நிலை, பெரும் சாபம்!.’’

உஷா, தென்காசி, ஃபேன்ஸி ஸ்டோர் உரிமையாளர்

'பெண்ணாக பிறப்பது சாபம்'... நிரூபிக்கும் பொதுக்கழிப்பிடங்கள்!

‘‘சில பொதுக்கழிப் பறைகளில், தொட்டியில் தண்ணீர் எடுத்துக்கொள்ளச் சொல்வார்கள். பல நாட்கள் சுத்தம் செய்யப்படாத தொட்டியில், புழுக்கள் நெளியும் அந்தத் தண்ணீர், சமயத்தில் அழுகை வரை நம்மைத் துரத்தும். பயன்படுத்தினால் தொற்று, அரிப்பு என்று பிரச்னை. வேண்டாம் என்று வெளியேறினால் பதற்றம், மன உளைச்சலில் இருந்து யூரினரி பிளாடர்வரை பிரச்னை. ஒரு பொதுக்கழிப்பறையைப் பயன்படுத்துவதால் நம் நாட்டில் பெண்களுக்கு கிடைக்கும் தொல்லைகள்தான் எத்தனை!’’

ஸ்ரீநிதி ராகவன், கல்லூரி மாணவி, சென்னை

‘‘ஆண்கள் திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகிறார்கள். அது தவறு என்பது ஒரு பக்கம் இருக்க, யோசித்துப் பார்த்தால் அதனால் அவர்கள் இந்தப் பொதுக்கழிப்பறை சுகாதாரக்கேட்டில் இருந்து தப்பிக் கிறார்கள். பெண் களுக்குதான் எந்தப்பக்கமும் வெளிச்ச மில்லை.’’ 

'பெண்ணாக பிறப்பது சாபம்'... நிரூபிக்கும் பொதுக்கழிப்பிடங்கள்!

நிரம்பிய சிறு நீர்ப் பையும் நாள் முழுக்க அவஸ்தையுமாக இருக்கும் பெண் களின் சாபம் நீங்கும் நாள் வருமா?!

தொகுப்பு: வே.கிருஷ்ணவேணி, கே.குணசீலன், செ.சல்மான், சி.ஆனந்தகுமார், தா.நந்திதா, கோ.இராகவிஜயா ந.ஆசிபா பாத்திமா பாவா, ரா.நிரஞ்சனா,

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், வீ.சதீஷ்குமார், பா.அபிரக்‌ஷன்

தற்காப்பு டிப்ஸ்!

'பெண்ணாக பிறப்பது சாபம்'... நிரூபிக்கும் பொதுக்கழிப்பிடங்கள்!

விர்க்க முடியாமல் சுகாதாரக்கேடான கழிப்பறையைப் பயன்படுத்தும்போது, செய்ய வேண்டிய தற்காப்பு வழிகள் பற்றிச் சொல்கிறார், சென் னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் ராஜேஸ்வரி.

• அசுத்தமான, தண்ணீர் வசதியற்ற கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டிய நிலையில், கைவசம் வெட் வைப்ஸ், சானிட்டரி வைப்ஸ் வைத்துக்கொண்டு, சுத்தம் செய்துகொள்ளவும்.

• ஹேண்ட்பேக் உடன் சானிட்டைஸர் வைத்துக்கொண்டு, வெளிக்கழிப்பறைகளை உபயோகித்தபின் கைகளை நன்றாகக் சுத்தம் செய்யவும்.

• சந்தையில், இப்போது பிரைவேட் பார்ட்டு்க்கான பிரத்யேக க்ளென்சர்கள் கிடைக்கின்றன. சுகாதாரமற்ற கழிப்பறையை பயன்படுத்தி வீடுவந்து சேர்ந்த பின், க்ளென்சரால் சுத்தம் செய்துகொள்வது தொற்றைத் தவிர்க்கும்.

கர்ப்பகாலத்தில் மிகவும் ஆபத்து!

'பெண்ணாக பிறப்பது சாபம்'... நிரூபிக்கும் பொதுக்கழிப்பிடங்கள்!

ர்ப்பகாலத்தில் சிறுநீரை அடக்குவதாலும், சுகாதாரமற்ற கழிப்பறைப் பயன்பாட்டாலும் சிறுநீர்த்தொற்று ஏற்பட்டால் நேரும் விளைவுகளையும் சொல்கிறார், மதுரையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் அனிதா.

‘‘பொதுவாக, சுகாதாரமற்ற கழிவறையைப் பயன்படுத்தும் மற்றும் சிறுநீரை அடக்கும் பெண்கள் அனைவருக்குமே யூரினரி டிராக்ட் இன்ஃபெக்‌ஷன் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு அதன் விளைவு ஆபத்தானதாக இருக்கும். ஏனெனில், அது அவர்களுக்கு ரத்தத்துடன் கலந்து, நஞ்சுக்கொடியின் வழியே குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், அதீத காய்ச்சல், வாந்தி, மயக்கம் என வாட்டும் இந்தத் தொற்றுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால், அந்த மருந்துகளின் வீரியம் சிசுவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், சிகிச்சைகூட சிக்கலாகும் கர்ப்பிணிகளுக்கு’’ என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு