டிஜிட்டல் யுகத்திலும் காதலுக்குக் கிடைப்பதில்லை க்ரீன் சிக்னல். காதல் ஜோடிகளுக்கு ரெட் சிக்னல்தான் பொதுவிதி. ஆனால், உண்மையான காதலர்களுக்கு உறுதுணையாக இருந்து... பெற்றோர்கள், உறவினர்களின் மிரட்டல் முதல் தாக்குதல் வரை அவர்களைப் பாதுகாத்து, திருமணம் முடித்து வைக்கிறார், திருச்சியைச் சேர்ந்த `கராத்தே' முத்துக்குமார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக, தன் ‘காதலர் பாதுகாப்பு இயக்கம்’ மூலமாக 1,311 காதல் திருமணங்கள் நடத்திவைத்துள்ளவரைச் சந்தித்தோம்.

‘‘அப்போது திருச்சி சட்டக்கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்தேன். நண்பரின் நண்பர் போன்ற சங்கிலித் தொடர்பில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி எங்களிடம் அடைக்கலம் கேட்டு வந்தனர். அவர்கள் இருவரும் மேஜர். ஜாதியை முன்னிறுத்தி இருவர் வீட்டிலும் எதிர்ப்பு. எல்லா ஊர்களிலும் நடக்கும் காதல் திருமணங்கள் போலவே, நண்பர்கள் சிலர் இணைந்து திருச்சி, சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை முடித்துவைத்தோம். பின்னர் பாதுகாப்பு கேட்டு, மகளிர் காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தோம். இதற்குள் அவர்களுடைய பெற்றோர், உறவினர்கள் தகவல் தெரிந்து 10 கார்களில் எங்களைத் துரத்த, இரவு முழுவதும் காரிலேயே சுற்றினோம். ஒருகட்டத்தில் எங்கள் காரை அவர்கள் மடக்க, போலீஸுக்குத் தகவல் கொடுத்து... அவர்கள் காப்பாற்றிய சம்பவம் செம திகில். அப்படித்தான் ஆரம்பித்தது.

அடுத்து, கேரளாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியின் மகள் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது ஒருவருடன் காதல் மலர்ந்தது. இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. கேரளாவுக்குச் சென்று அந்தப் பெண்ணை போலீஸ் குடியிருப்பிலிருந்து அழைத்து வரும் முதல்கட்ட முயற்சி தோல்வியடைந்தது. இரண்டாவது முறை முயற்சித்து, அந்தப் பெண்ணை திருச்சிக்கு அழைத்துவந்து வெற்றிகரமாக திருமணத்தை முடித்தோம்.

இப்படித் தொடர் சம்பவங்களால், ‘முத்துக்குமார்கிட்ட போகலாம்...’ என்று ஒருகட்டத்தில் காதலர்கள் நம்பிக்கையுடன் என்னைத் தேடிவர ஆரம்பிக்க, ‘காதலர் பாதுகாப்பு இயக்கம்’ ஆரம்பித்துவிட்டோம்’’ என்று சிரிக்கும் முத்துக்குமார், தானும் காதல் திருமணம் முடித்தவர்தான்.

‘‘காதலிக்கிறோம், கல்யாணம் செய்து வைங்க என்று யார் வந்து நின்றாலும் உடனடியாக திருமணம் முடித்து விடுவதில்லை. எந்தளவுக்கு தங்கள் காதலில் உண்மையாக, உறுதியாக இருக்கிறார்கள் என்பதை கவுன்சலிங் மூலம் அறிந்துகொள்ள வைப்போம். பிறகு, சட்டரீதியாக தகுதியா னவர்களா என்பதைச் சரிபார்த்து, பின்னரே திருமண ஏற்பாடுகளைச் செய்வோம். உண்மைக் காதலர்களுக்குப் பிரச்னை என்று அறியவந்தால், நாங்களே அவர்களை அணுகி உதவி செய்வதும் உண்டு’’ என்றவர், இந்தச் சேவையில் சினிமாவுக்கு நிகரான திகில் சம்பவங்களைச் சந்தித்திருக்கிறார்.

‘‘ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்துப் பையன், முஸ்லிம் பெண்ணுக்கு ரங்கத்தில் திருமணத்தை முடித்தபோது, ‘காவேரி பாலத்தைத் தாண்டுறதுக்குள்ள உங்களை கொலை செய்றோம் பாருங்க’ என்று பெண் வீட்டினர் சவால்விட்டு துரத்தினர். பெற்றோர்களுக்கு எங்கள் காரை வைத்து போக்குக் காட்டி, காதல் ஜோடியை ஆளுக்கொரு டூ வீலரில் ரகசியமாக அனுப்பி தப்பிக்க வைத்தோம். குழந்தை பிறந்த பிறகு இன்று அந்த ஜோடி பெற்றோருடன் சேர்ந்துவிட்டனர். ஆனால், அன்று அவர்கள் இருந்த கோபத்துக்கு நாங்கள் சிக்கியிருந்தால் எதுவும் நடந்திருக்கலாம்’’ என்பதையும் சிரித்துக்கொண்டேதான் சொல்கிறார் முத்துக்குமார்.

இந்தக் காதல் காவலர் மணமுடித்து வைத்த காதலர்களில் ஒருவரான திருச்சியைச் சேர்ந்த பொறியாளர் வசந்தகுமார், ‘‘எங்க வீட்டுல ஸ்டேட்டஸ் பார்த்தாங்க. என் மனைவி தெய்வானை வீட்டுல சாதி பார்த்தாங்க. நாங்க முத்துக்குமாரைப் போய் பார்த்தோம். நாலு வருஷக் காதலை நல்லபடியா அவர் சேர்த்துவெச்சார், அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி. பின் எங்க வீட்டுல எங்களை ஏத்துக்கிட்டாங்க. தெய்வானை வீட்டில் என்னிடம் மட்டும் யாரும் பேசமாட்டாங்க. இப்போ என் மனைவி கர்ப்பமா இருக்காங்க’’ என்றார் பரவசப் புன்னகையுடன்.

இதே ஊரைச் சேர்ந்த மற்றொரு பொறியாளர் ரமேஷ், ‘‘பெரம்பலூருக்கு எங்க அக்கா வீட்டுக்குப்போனப்போ, தீபாவைப் பார்த்தேன். காதலிச்சோம். விஷயம் வீட்டில் தெரிஞ்சதும் எங்க வீட்டுல இருந்து தீபா வீட்டுக்குப் பெண் கேட்டுப் போனாங்க. ஆனா அவங்க ஒப்புக்கல. எங்க வீட்டிலும் ‘வேண்டாம் விட்டுடு’னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. அவங்க வீட்டுல தீபாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்த ஸீன்லதான் முத்துக்குமாரைச் சந்திச்சோம். பதிவுத் திருமணம் செய்து வெச்சார். ‘அலைபாயுதே’ ஸ்டைலில் ரெண்டு பேரும் அவங்கவங்க வீட்டுக்குப் போயிட்டோம். மறுபடியும் தீபாவுக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்ய, நாங்க விஷயத்தை வெளியில் சொல்ல, பிறகு என் பெற்றோர் ஆசியோட கோயிலில் கல்யாணம் நடந்தது. இப்போ எங்களுக்கு அட்சயா, அட்சிதானு ரெண்டு குழந்தைங்க. கூட்டுக்குடும்பமா, சந்தோஷமா இருக்கோம்’’ என்றார் புன்னகையுடன்.

எஸ்.மகேஷ், படங்கள்:என்.ஜி.மணிகண்டன்