‘நானும் சந்தியாவும் அவ்ளோ நெருக்கம். அவ சாப்பிடலைன்னா நான் சாப்பிட மாட்டேன். வீட்டுக்கு வந்ததும் அவளைக் கட்டிப்பிடிச்சி கொஞ்சாம என்னால தூங்கவே முடியாது. சந்தியாவுக்கு ஒண்ணுனா... கண் கலங்கிடுவேன். லவ் யூ சந்தியா!’

- வாட்ஸ் அப்பில் நண்பர் ஒருவர் இப்படி பகிர்ந்ததும் ஷாக்காக இருந்தது. காரணம், நண்பருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. என்னவென்று போன் போட்டு விசாரித்தால்... விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

நண்பரின் செல்லக்காதலி சந்தியா, ஒரு வெள்ளைப் பூனைக்குட்டி. அத்தனை பிரியமாய் இருக்கிறார் சந்தியாவின் மீது. பூனைக்குட்டியோடு சேர்ந்து அவர் எடுத்த செல்ஃபியைப் பார்த்து சிரித்துக்கொண்டேன்.

நண்பரைப் போலவே பைக் காதலர்கள், சினிமா காதலர்கள், பேனா காதலர்கள், செல்போன் காதலர்கள் என நிறைய பேரை நாம் ஒவ்வொருவருமே தினசரி சந்திக்கத்தானே செய்கிறோம்.

முதல் மதிப்பெண் எடுத்த மாணவியை கேட்டால், `டாக்டராக வேண்டும்’ என்று தன் லட்சியக் காதலை பதிவு செய்கிறார்.

`இந்த வருஷத்துக்குள்ள ஒரு புத்தகம் வெளியிட்டு விடணும்’ என்று இலக்கியத்தில் இருக்கும் தன் காதலை வெளிப்படுத்துகிறார் எழுத்தாளர்.

சிக்ஸர் அடித்துவிட்டு, பேட்டுக்கு முத்தம் கொடுக்கும் வீரருக்கு கிரிக்கெட்டில் காதல்.

கால்கள் இல்லையென்றாலும், செஸ் போட்டியில் சாதனைப் படைக்கும் மாணவியிடம் இருக்கிறது வாழ்க்கையின் மீதான தன்னம்பிக்கை நிறைந்த காதல்.

ஆம்... எல்லோரிடத்திலும் நீக்கமற நிறைந்தேதான் இருக்கிறது காதல். நாம் செய்கிற செயலில் வைக்கும் ஆழமான, நேர்மையான ஈடுபாடு... காதலன்றி வேறு என்னவாக இருக்கு முடியும் தோழிகளே!

இங்கே பறவைகள், விலங்குகள், புத்தகங்கள், மரங்கள், வாகனங்கள், இலக்குகள் என்று எவற்றின் மீதும் நாம் வைக்கும் காதல், எப்போதும் அழிவதில்லைதானே!

அதேபோல மனிதர்கள் பரஸ்பரம் வைக்கும் காதலும் எந்த நிலையிலும் அழியாமல் தொடர, இந்தக் காதலர் தினத்தில் வாழ்த்தலாம்தானே!

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்!

உரிமையுடன்,

ஆசிரியர்