Published:Updated:

விருந்தோம்பல் பண்பு கொடுத்த வியக்க வைக்கும் வெற்றி!

விருந்தோம்பல் பண்பு கொடுத்த வியக்க வைக்கும் வெற்றி!
பிரீமியம் ஸ்டோரி
விருந்தோம்பல் பண்பு கொடுத்த வியக்க வைக்கும் வெற்றி!

சக்சஸ் ஸ்டோரி

விருந்தோம்பல் பண்பு கொடுத்த வியக்க வைக்கும் வெற்றி!

சக்சஸ் ஸ்டோரி

Published:Updated:
விருந்தோம்பல் பண்பு கொடுத்த வியக்க வைக்கும் வெற்றி!
பிரீமியம் ஸ்டோரி
விருந்தோம்பல் பண்பு கொடுத்த வியக்க வைக்கும் வெற்றி!

திறமைகளை வெளிப்படுத்துவதற்கு வயதோ, திருமணமோ ஒரு பொருட்டே இல்லை என்பதை தன் 50 ப்ளஸ்களில் நிரூபித்துக்கொண்டிருப்பவர்  சென்னையைச் சேர்ந்த `பே டிரெஷர்' ரிசார்ட்டின் உரிமை யாளர்களுள் ஒருவரான ஷோபனா ரெட்டி.

‘‘யூ.ஜி முடிச்சதும் எனக்குத் திருமணம். பி.எட் படிப்பில் சிறந்த மாணவிக்கான பரிசு வாங்க மேடையேறின சமயம் என் குழந்தை அழ, மனசு பொறுக்காம கீழ இறங்கி குழந்தையைத் தூக்கிட்டு மேடையேறினேன். பரிசைக் கொடுத்த சிறப்பு விருந்தினர், ‘மனைவியா, அம்மாவா ஆனதுக்கு அப்புறமும் கற்றலில் ஆர்வம் குறையாம இருக்கிறதோட, அதில் பரிசும் வாங்குறாங்கன்னா, ரியலி கிரேட்!’னு பாராட்டினதை மறக்க முடியாது'' என்பவர், ஏர்ஃபோர்ஸ் பள்ளியில் பிரின்சிபாலாக இருந்து ஓய்வுபெற்றிருக்கிறார்.

‘‘என் கணவரின்  உறவுக்கார இளைஞர் கள் பிசினஸுக்காக இடம் வாங்கப் போனப்போ, மொழிபெயர்ப்புக்காக என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. போன இடத்துல நானும் அந்த பிசினஸில் பார்ட்னராகி போனேன். நாங்க வாங்கின இடத்துல ரிசார்ட் ஆரம்பிக்கிறதா முடிவாச்சு. அதைப் பத்தின ஏ டு இஸட் விஷயங்களைச் சொல்லி கலந்தாலோசிச் சேன். அவங்களுக்கு வியப்பு. ‘இதில் நானும் ஒரு பார்ட்னரா வரலாமா?’னு நான் கேட்க, ‘முழுப்பொறுப்பையும் நீங்களே பார்த்துக்கோங்க பார்ட்னர்’னு சந்தோஷமா எங்கிட்ட ஒப்படைச்சாங்க.

விருந்தோம்பல் பண்பு கொடுத்த வியக்க வைக்கும் வெற்றி!

ரிசார்ட் கட்டுறதுல ஆரம்பிச்சு பெயர் வைக்கிறது, இன்டீரியர்னு... சுழன்று சுழன்று பார்ட்னர்களான நாங்க அத்தனை வேலைகளையும் கவனிச்சோம். 2011-ல் ரிசார்ட்டை ஆரம்பிச்சோம்" என்றவர் இவை அனைத்தையும் தலைமை ஏற்று வழிநடத்திச் செல்லும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

‘‘ரிசார்ட் ஆரம்பிச்ச புதுசுல, ‘ஒரு பெண்ணா இந்த ரிசார்ட் வேலைகளை முழுமையா, கவனமா உன்னால பார்த்துட முடியுமா?’னு கேட்டாங்க என் பார்ட்னர் கணேஷும், என் கணவர் ஜி.ஆர்.ரெட்டியும். ‘நீங்களே சொல்லுங்க’னு சிரிச்சப்ப ‘உன் தைரியம் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. சறுக்கினாலும், மறுபடியும் எழுந்துடுவே’னு நம்பிக்கை கொடுத்தாங்க. அதுதான் உண்மை. எடுத்தவுடனேயே இதில் வெற்றியோ லாபமோ பார்க்க முடியலை. குறிப்பா, இந்த உலகம் ஆண் ஆதிக்கம் நிறைஞ்சதுனு பல இடங்களில் அடிபட்டுத் தெரிஞ்சுக்கிட்டப்போ எல்லாம், ‘அதுக்காக ஆண்களுக்கு விட்டுக்கொடுத்துட முடியாது. பெண்களாலும் ஆதிக்கம் செய்ய முடியும்’னு போராட்ட குணத்தோட மீண்டு எழுறதுக்கு காரணமா இருந்ததே என் தைரியம்தான். அந்த தைரியத்துனாலதான் இப்ப வரைக்கும் இந்த பிசினஸ்ல நிலைச்சு நின்னுட்டு இருக்கோம்.

மேலே சொன்னது எல்லாம் வெளிப் போட்டிகள், தடைகள். ரிசார்ட்டுக்குள்ள எந்தத் தவறு நடந்தாலும் அதுக்கு நான் மட்டுமே பொறுப்பு. ஆனா, அதுக்கான வாய்ப்பே இல்லாம வேலைகள் சுமுகமா நகர்ந்தது. என் கணவர் ஏர்ஃபோர்ஸ் ஆபீஸர். ஏர்ஃபோர்ஸ் அதிகாரிகள் இல்லங்களில் அடிக்கடி `சோஷியல் கெட் டுகெதர்’ நடத்துவது வழக்கம். அப்போ எல்லாம் வெரைட்டியான உணவுகள் தயாரிப்பதில் இருந்து, டேபிள் டெகரேஷன், பார்ட்டி ஹால் டெகரேஷன், உணவு பரிமாறுவது, வழியனுப்புவதுனு அனைத்தையும் ஏதோ ஸ்டார் ஹோட்டல் புரொஃபஷனல்கள் போல பெண்கள் நாங்க சேர்ந்து செய்வோம். அந்த அனுபவங்கள்தான் ரிசார்ட்டில் எனக்குக் கைகொடுத்தது. விருந்தோம்பல் குணம், என் இயல்பு. `ரிசார்ட் கெஸ்ட்டுகளை எல்லாம் திருப்திப்படுத்த, அவங்களை மறுபடியும் வரவைக்க, அவங்களோட பாராட்டையே எங்களுக்கு விளம்பரமாக்க’னு இது எல்லாத்துக்கும் அடிப்படை... என்னோட, என் ரிசார்ட்டோட ஹாஸ்பிட்டாலிட்டிதான்’’ எனும்போது, பெருமையில் புன்னகை பூக்கிறது ஷோபனாவுக்கு.

தனி அழகுடன் ஈர்த்த ரிசார்ட்டின் ஓவியங்களை ரசித்த நம்மிடம், ‘‘இதெல்லாம் நான் வரைஞ்சதுதான்’’ என்று மற்றுமொரு சர்ப்ரைஸ் கொடுத்தார் ஷோபனா...

‘‘என்னோட தாத்தா ஆர்ட்டிஸ்ட். அந்த தாக்கத்துல, நான் ஆர்ட்டிஸ்ட் லட்சுமி நாராயணன்கிட்ட பெயின்ட்டிங் கத்துக்கிட்டேன். நிறைய வரைவேன். அதையெல்லாம் பயன்படுத்த, இந்த ரிசார்ட் ஒரு வாய்ப்பா அமைந்தது. இங்க இருக்கிறதுல 90 பர்சன்ட் என் பெயின்ட்டிங்ஸ்!’’ எனும் ஷோபனாவுக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் அமெரிக்காவில் மார்க்கெட்டிங் அனலிஸ்ட். இளையவர் பைலட்.

2014-ம் வருடம் அஜந்தா ஃபைன் ஆர்ட்ஸ் வழங்கிய ‘சாதனைப் பெண்மணி’ விருது, சென்ற வருடம் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் பெண்கள் அமைப்பு வழங்கிய சிறந்த தொழில் முனைவோருக்கான விருது என்று பெற்றுவரும் ஷோபனா,

‘‘ஜஸ்ட் 58... இன்னும் தூரம் போவோம்...’’

- அட்டகாசமான சிரிப்புடன் நிறைவு செய்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வே.கிருஷ்ணவேணி,படங்கள்:  ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism