Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!

யார் இந்த சீதா?!

கேபிள் கலாட்டா!

யார் இந்த சீதா?!

Published:Updated:
கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!

விஜய் டி.வி-யின் ‘சீதையின் ராமன்’ சீரியலில் என்ட்ரி கொடுத்துவிட்டார் ராமனின் சீதா. இரண்டு எபிசோடுகள் பில்ட்-அப் காத்திருப்புக்குப் பிறகு இளம் வயது சீதா துள்ளலுடன் திரையில் தோன்ற, ‘யார் இந்த சீதாபிராட்டி..?’ என்று ஆராய்ச்சியில் இறங்கியபோது கிடைத்தன அரிய தகவல்கள். பெயர் மதிராக்‌ஷி முந்தில். மகாராஷ்ட்ர மாநிலம், புனே பெண். 20 வயது இளமை. ‘ஓரி தேவுடோய்’ தெலுங்கு படம் மூலம் சினிமா அறிமுகம். ‘சீதா கி ராம்’ சீரியலில், தயாரிப்பாளர் நிகில் சின்ஹாவின் சாய்ஸில் சீதா ஆனவர். ‘ஹீரோயினா வெள்ளித்திரையில் நடிச்சப்போகூட கிடைக்காத வரவேற்பை சீதாவாகி வாங்கிட்டேன். இந்த ரோல் எனக்குக் கிடைச்சதே பாக்கியம். தொடர்ந்து, நிறைய வரலாற்று சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துட்டே இருக்கு. தேங்க்யூ சீதா’ என்கிறார் மதிராக்‌ஷி சந்தோஷத்துடன்.

சீதா இஸ் கிரேட்!

‘‘எல்லோரையும் ரசிக்க வைக்கணும்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேபிள் கலாட்டா!

ந்தி டி.வி-யில் செய்தி வாசிப்பாளர், ‘திரைகடல்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர், ‘ஹவுஸ்ஃபுல்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர், தயாரிப்பாளர், ரைட்டர் என்று பன்முகம் காட்டுகிறார், முபஷ்ஷிர்.

‘‘நான் பிறந்து வளர்ந்தது சேலம். அங்க ஒரு லோக்கல் சேனல் தொகுப்பாளர் ஆடிஷன்ல தேர்வாகி, காலேஜ்ல படிச்சுட்டே, பார்ட்டைம் ஆங்கரா வேலைபார்த்தேன். வெளியே எங்கயாச்சும் போகும்போது, எங்க ஊரு பாசக்கார மக்கள் எல்லாரும் ‘சூப்பரா பண்றீங்க பாஸ்’னு பாராட்டுவாங்க. ஆஹா... உண்மையிலேயே நாம நல்ல ஆங்கர்தான்னு முடிவு பண்ணி, என் கனவுகளை சென்னைக்கு ஷிஃப்ட் செய்தேன். தந்தி டி.வி-யில் சினிமா, விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கின எனக்கு, திடீர்னு ஒருநாள் நியூஸ் ரீடர் வாய்ப்பு கொடுத்தாங்க. இப்போ ‘திரைகடல்’, ‘ஹவுஸ்ஃபுல்’னு நல்லபடியா போயிட்டிருக்கு. என் நிகழ்ச்சிகள் எல்லா தரப்பையும் ரசிக்க வைக்கணும்... இதுதான் என் பாலிசி. ஆரம்பத்தில் யாரையும் காப்பி பண்ணாம, நான் இயல்பா கலாய்க்கிற ஸ்டைல்லயே காம்பியரிங் செய்தப்போ, ‘என்னடா இவன் இப்படிப் பண்றான்?’னு கேட்டவங்க, ‘முபாஷ்ஷிர் மாதிரியே எல்லோரும் அவங்கவங்களோட இயல்பான பாடிலேங்குவேஜ், மாடுலேஷன்லயே காம்பியர் பண்ணுங்க’னு இப்போ சொல்றாங்க... அது!

என் அழகான குடும்பம் சேலத்தில் இருக்கு. அப்பா, அரபுமொழி ஆசிரியர். அவருக்கு சினிமா, டி.வி எல்லாம் வேப்பங்காய். அப்படிப்பட்ட அப்பாவுக்கு, எப்படிப்பட்ட பிள்ளை!’’

அப்பாவையும் ரசிக்க வைங்க!

ப்ரியங்காவுக்கு அமெரிக்க விருது!

கேபிள் கலாட்டா!

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, இப்போது உலகப் பிரபலம். ‘மேரி கோம்’ திரைப்படம், அமெரிக்க டி.வி சீரியலான ‘குவாண்டிகோ’ வாய்ப்பு எல்லாம் இப்போது மேடத்தை புகழ் பெற வைத்துவிட்டது. மேலும், இந்த முன்னாள் உலக அழகிக்கு, அமெரிக்காவின் சேனல் ஸ்பெஷல் விருதான ‘மக்கள் சாய்ஸ் நடிகை’ அவார்டும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியப் பெண் ப்ரியங்கா. இன்னொரு மகுடமாக, ஆஸ்கர் விருதை ஒரு வெற்றியாளருக்கு தன் கையால் வழங்கவிருக்கிறார் ப்ரியங்கா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு இந்தியருக்குக் கிடைத்திருக்கும் கௌரவம் இது. அதை அறிவிக்கும் ஆஸ்கர் அவார்டின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ப்ரியங்கா சோப்ராவின் விவரங்கள் மற்றும் அவர் சமீபத்தில் நடித்த `குவண்டிகோ’ சீரியலின் வீடியோக்களும் இணைக்கப்பட்டுள்ளன.

அசத்துங்க அழகே!

ரிமோட் ரீட்டா

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:ரூ 150

‘கிச்சன் கலாட்டா’... கிரேட்!

‘`சன் டி.வி வழங்கும் ‘கிச்சன் கலாட்டா’ நிகழ்ச்சியில், குழந்தைகளில் பலர் சாப்பிடாமல் அடம்பிடிக்கும் கீரை வகைகளில், பக்கோடா, காய்கறி - கீரை குருமா போன்ற உணவு வகைகளை நாவில் நீரூறச் செய்யும் வகையில் செய்துகாட்டி அசத்துகின்றனர். மேலும் சத்தான பொருட்களை எப்படி எல்லாம் வித்தியாசமான முறையில் உணவில் சேர்க்கலாம் என்று விளக்குகிறார்கள். இது மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி’’ என்று பாராட்டுகிறார், திருப்பாலையில் இருந்து பி.எஸ்.லஷ்மி.

மொட்டைத்தலையும்... முழங்காலும்!

``தொலைக்காட்சியில் ஓர் ஆரோக்கிய பான விளம்பரத்தைப் பார்த்தேன். ‘தவறுகள் செய்யட்டும்... அப்போதுதான் பெரியவர்கள் ஆகலாம்' என்று அதில் வருகிறது. இதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. என்னதான் தங்கள் பொருள் விற்பனை ஆக வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும், இப்படியா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் விளம்பரப்படுத்துவது? சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்துகிறார், சென்னை போரூரில் இருந்து சாவித்திரி.

‘சூ’ப்பரோ சூப்பர்!

``மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும். ‘சூ’ நிகழ்ச்சியில் பள்ளி - கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதுடன், அதன் அறிவியல் விளக்கம், கருவியின் முக்கியத்துவம், மாற்றுமுறை எரிபொருள் போன்ற விளக்கங்களை தருவது, இளையதலைமுறையினரை ஊக்கு விக்கும் விதமாக அமைந்துள்ளது’’ என்று சிலாகிக்கிறார், மதுரையில் இருந்து  ஆர்.கவிதா,

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism