Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

Published:Updated:
நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

``நாலு நாளைக்கு வீட்டு வேலை செய்யும் பொண்ணு லீவாம்.  நான் என்ன செய்யப் போறேன்னே தெரியலை. காலையில எழுந்து பாத்திரத்தை விளக்குவேனா... வாசல் தெளிச்சு கோலம் போடுவேனா... பாலைக் காய்ச்சி எல்லோருக்கும் காபி போட்டுக் கொடுத்துட்டு டிபன் செய்வேனா... இல்லை, மத்தியானத்துக்கு ஆகவேண்டிய சமையலை செய்வேனா..? இதுக்கு நடுவுல நான் பெத்தது எதுவும் தானா எழுந்திருக்காது. தொண்டைத் தண்ணி வத்தக் கத்தினாத்தான் எழுந்து பாத்ரூமுக்குப் போகுங்க. அப்புறம் `சோப்பை காணோம்.... யூனிஃபார்மைக் காணோம்’னு வேற என் டென்ஷனை ஏத்துங்க. அய்யய்யோ... முடியலடா சாமி! இப்படியே போனா பேசறதுக்குக்கூட உடம்புல தெம்பு இருக்காது!’’

- தன் வீட்டின் வேலைக்காரப் பெண்மணிக்கு விடுப்பு கொடுத்துவிட்டு, இப்படி புலம்பிக் கொட்டும் பலரை நமக்கு தெரியும். இப்படி ஒரு பேச்சை சமீபத்தில் நானும் கேட்க நேர்ந்தது... என் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம்! அவர் வீடே இல்லாமல்கூட இருந்துவிடுவார்... ஆனால், வீட்டு வேலை செய்யும் பெண் இல்லாமல் இருக்கவே முடியாது என்பதைப் போல இருந்தது... அவர் புலம்பிய விதம்! இத்தனைக்கும் அந்தப் பெண்ணுக்கு இளம்வயதுதான்; உபத்திரவம் இல்லாத உடல் நலனும் உடையவர்.

நமக்குள்ளே!

அன்றைய தினம் நான் இன்னொரு சகோதரியையும் எதேச்சையாக சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.   அவர்... அலுவலகத்தில் புதிதாக துவங்கியிருக்கும் கேன்டீனை நடத்தும் பெண்மணி. அவரின் உபசரிப்பும், உணவின் கைப்பக்குவமும் அவரிடம் பேச வைத்தது.

‘’கேன்டீனை மூடிட்டு வீட்டுக்கு போகும்போதே சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிட்டு போயிடுவோம். அடுத்த நாள் காலையில 4 மணிக்கே எழுந்தா... ஒரு அடுப்புல இட்லி குண்டானை வெச்சுடுவேன். இட்லி வெந்துகொண்டிருக்கும்போதே இன்னொரு அடுப்புல பெரிய பாத்திரத்துல பொங்கலை வேக வெச்சுடுவேன். பொங்கலும் இட்லியும் வேகும்போதே... சப்பாத்தியை உருட்டிடுவேன். சப்பாத்தியை கல்லுல போட்டு எடுக்கும்போதே... வடையை தட்டி எண்ணெய் சட்டியில போட்டு எடுத்துடுவேன். சமையல் கட்டுல இருக்கும்போது, நான் கை நீட்டினா போதும்... நான் என்ன கேட்கிறேன்னு புரிஞ்சுக்கிட்டு என் கணவர் எனக்கு எடுத்து கொடுத்துட்டே இருப்பார். பிறகு, சமைச்சதை எல்லாம் அது அதுக்கான பாத்திரத்துல வெச்சு மூடி அவர் ஆட்டோவுல ஏத்தறதுக்குள்ள குளிச்சு துணி மாத்திக்கிட்டு நான் அவரோட ஆட்டோவுல ஏறிடுவேன். ஆபீஸ்ல கேன்டீன் நாலாவது மாடி. லிஃப்ட் கிடையாது. அவர் நாலு பாத்திரம், நான் நாலு பாத்திரம்னு இடுப்பிலும் தலையிலும் தூக்கிட்டு மாடிக்கு ஏறி வியாபாரத்தை பார்க்க ஆரம்பிச்சா... நமக்குள்ள ஒரு புது ஆளு புகுந்த மாதிரி ஃப்ரெஷ்ஷா ஃபீல் பண்ணுவேன். களைப்போட பசியா வர்றவங்க... வயிறார சாப்பிட்டு விட்டு புன்னகையோடு போவதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கும்’’ - அந்த சகோதரி உற்சாகமாகப் பேசினார்.

பக்கத்து வீட்டு சகோதரிக்கு இந்த கேன்டீன் நடத்தும் சகோதரியின் வார்த்தைகளும், வாழ்க்கையும் ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால்தான் இங்கே இதை பகிர்ந்துகொள்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உரிமையுடன்,

நமக்குள்ளே!


ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism