Published:Updated:

'மிட்நைட் ரெஸ்டாரன்ட்'!

'மிட்நைட் ரெஸ்டாரன்ட்'!
பிரீமியம் ஸ்டோரி
News
'மிட்நைட் ரெஸ்டாரன்ட்'!

- கலக்கும் காலேஜ் பாய்ஸ்...Restaurant

‘‘பொதுவா, நாலு காலேஜ் பசங்களை ஒண்ணா பார்த்தாலே, ‘இதுங்க எல்லாம் எங்க உருப்படப்போகுதுங்க?’னு முணுமுணுக்க ஆரம்பிச்சிடுவாங்க. ஆனா, நாங்க நாலு நண்பர்கள் ஒண்ணா சேர்ந்து, வெற்றிகரமா ஒரு ரெஸ்டாரன்ட் நடத்திட்டு இருக்கோம்!’’

'மிட்நைட் ரெஸ்டாரன்ட்'!

- அறிமுகத்திலேயே ஆச்சர்யம் கொடுக்கிறார், கரண் மேத்தா. இவர் மற்றும் கல்யாண், வ்ருஷால், நஸீப் இணைந்து நடத்தும் மிட்நைட் ரெஸ்டாரன்ட் ‘ஆர்டர் மேட் இன்’... டூப்பர் ஹிட்!

‘‘நாங்க எல்லோரும் சென்னை, பொத்தேரியில் இருக்கிற எஸ்.ஆர்.ஆம் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ். ஒருநாள் ராத்திரி ஜாலியா வாக் போயிட்டிருந்தப்போ, வ்ருஷால் சமையலைப் பத்தி பேசினான். அந்த எஃபெக்ட்ல சட்டுனு எல்லோருக்கும் பசி எடுக்க ஆரம்பிக்க, நடுராத்திரியில எந்த ஹோட்டலும் இல்லை. எங்களை மாதிரியே இன்னும் சில ஸ்டூடன்ட்ஸும், எங்கயாச்சும் சாப்பாடு கிடைக்குமா தேடிட்டு இருந்ததையும் பார்க்க முடிந்தது. அப்போ ஸ்பார்க் ஆன ஐடியாதான், மிட்நைட் ரெஸ்டாரன்ட். 6 மாசத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சுட்டோம்... ‘ஆர்டர் மேட் இன்' (order made inn)’’ என்று கல்யாண் சொல்ல...

‘‘எஸ்.ஆர்.எம் காலேஜ் பக்கத்துல, பொத்தேரி ஏரியாவை எங்க ரெஸ்டாரன்ட்டுக்கான இடமா தேர்ந்தெடுத்தோம். ஏன்னா, அங்கதான் நடுராத்திரி ஸ்டூடன்ட்ஸ் பேயா சாப்பாட்டுக்கு அலைஞ்சுட்டு இருப்பாங்க. ராத்திரி 10 மணி முதல் காலை 3 மணி வரை சுறுசுறுப்பாக செயல்படும் எங்க மிட்நைட் ரெஸ்டாரன்ட். ‘இந்த நேரத்துல யார் சாப்பிட வருவாங்க?’னு தோணுமே... அதான் சொன்னோமே... இதுதான் ஸ்டூடன்ட்ஸ் முழிச்சுட்டு இருக்கிற நேரம். தவிர, மற்றவர்களும் வருவாங்க’’ என்று சிரிக்கிறார், வ்ருஷால்.

‘‘எங்க கஸ்டமர்கள், விளம்பரம்... ரெண்டுமே ஹாஸ்டல் ஸ்டூடன்ட்ஸ்தான்’’ என்ற கரண், ‘‘முதல்ல ஹாஸ்டல் நண்பர்களைதான் முக்கியமா டார்கெட் செய்து, எங்க ஹோட்டலைப் பற்றிச் சொன்னோம். எதிர்பார்த்ததுபோலவே, அவங்க ரெகுலர் கஸ்டமர்கள் ஆனதோட, ‘ஏய், அந்த மிட்நைட் ரெஸ்டாரன்ட் சூப்பர்மா’னு காலேஜ் முழுக்க எங்களுக்கான இலவச விளம்பரமும் செய்துகொடுத்துட்டாங்க. சொன்ன நம்புவீங்களா... எங்க ரெஸ்டாரன்ட்ல சாப்பிடுறதுக்காகவே கிளம்பி வர்ற டே ஸ்காலர் ஸ்டூடன்ட்ஸ் பலர் இருக்காங்க’’ என்கிறார் கண்ணடித்து.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'மிட்நைட் ரெஸ்டாரன்ட்'!

‘‘ஒரு சமையல்காரரை அப்பாயின்ட் செஞ்சுருக்கோம். மளிகை வாங்கிறது, பில்லிங், டெலிவரி வேலைகளை எல்லாம் நாங்க பார்த்துப்போம். முதல்ல டெஸ்ட் ரன் ஆக 30 அயிட்டங்கள் செஞ்சு பார்த்தோம். எங்க டார்கெட் ஸ்டூடன்ட்ஸ் என்பதால, அவங்களுக்குப் பிடிச்ச ஃபாஸ்ட்ஃபுட், சாட் அயிட்டம்னு மெனுவை தயார் செஞ்சோம். சூப்பர் டூப்பர் ஹிட். இப்போ 70 அயிட்டங்கள்வரை செஞ்சுட்டு இருக்கோம். இடம் வாடகை, காஸ் சிலிண்டர், சமையல்காரர் சம்பளம், மளிகைப் பொருட்கள்னு ஒரு நாளைக்கு எல்லா செலவும் போக, 800 முதல் 1,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்’’ என்றபோது, நஸீப் குரலில் உற்சாகம்.

‘‘ஆரம்பத்தில் நண்பர்கள்கிட்ட கொஞ்சம் கொஞ்சம் கடன்வாங்கிதான் பிசினஸை ஆரம்பிச்சோம். ஆனா, ஒரே மாசத்தில் அவங்க பணத்தை திருப்பிக் கொடுத்துட்டோம். சில நேரங்களில் கூட்டத்தை சமாளிக்க முடியாது. பக்கத்துல இருக்கிற வீடுகளில் இருந்து ஹோம்டெலிவரி ஆர்டர்களும் வரும். சமாளிக்க முடியாம திணறும் அளவுக்கு ஒஹோன்னு ஓடிட்டு இருக்கோம். ஒரு நாளும் சேல்ஸ் ஆகாம இருந்ததில்லை. தொழிலை இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் விரிவுபடுத்திட்டு, எங்க பெற்றோர்களை கூட்டிட்டு வரணும் ரெஸ்டாரன்டுக்கு!’’ என்கிறார் வ்ருஷால்.

‘‘மழை, வெள்ளம், செமஸ்டர் ஹாலிடேஸ், செமஸ்டர்னு கொஞ்சம் பிரேக்ல இருந்தோம். காலேஜ் திறந்ததும், இன்னும் பல புது வகை உணவுகளுடன் உங்கள் ஆர்டருக்காகக் காத்திருக்கும் எங்கள் ‘ஆர்டர் மேட் இன்’ ” என்று கோரஸாகச் சொன்னவர்கள்,

‘‘இப்போ சொல்லுங்க... நாலு பசங்க ஒண்ணு சேர்ந்து உருப்படலாம்தானே?’’

- ‘தம்ப்ஸ் அப்’புகிறார்கள்!

தா.நந்திதா படங்கள்:மா.பி.சித்தார்த்