Published:Updated:

பியூட்டிஃபுல் லிப்ஸ்... சூப்பர் டிப்ஸ்!

பியூட்டிஃபுல் லிப்ஸ்... சூப்பர் டிப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பியூட்டிஃபுல் லிப்ஸ்... சூப்பர் டிப்ஸ்!

Beauty

பியூட்டிஃபுல் லிப்ஸ்... சூப்பர் டிப்ஸ்!

Beauty

Published:Updated:
பியூட்டிஃபுல் லிப்ஸ்... சூப்பர் டிப்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
பியூட்டிஃபுல் லிப்ஸ்... சூப்பர் டிப்ஸ்!

‘‘பொதுவாக சரும செல்கள் தொடர்ந்து உதிர்ந்து, வளர்ந்து தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும். ஆனால், உதட்டின் தோல் அப்படி உரிந்து தன்னைப் புதிப்பித்துக்கொள்ள பல நாட்கள் ஆகும். எனவே, `லிப் கேர்'-க்கு கொஞ்சம் அதிக கவனம் கொடுக்கவேண்டியது அவசியமாகிறது’’ என்று சொல்லும் சேலம், வீனஸ் பியூட்டி பார்லரின் பியூட்டீஷியன் ராஜபிரியா, இதழ்களின் ஆரோக்கியம் மற்றும் அழகுக்காக தந்த ஆலோசனைகள் இங்கே...

பியூட்டிஃபுல் லிப்ஸ்... சூப்பர் டிப்ஸ்!

மென்மையான இதழ்களுக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• மென்மையான இதழ்கள், அனைவரும் ஆசைப்படும் அழகு. அதற்கு, தேன் கை கொடுக்கும். தேனில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் தன்மை உண்டு. இது உதடுகளை மென்மையாக்கும். 5 நிமிடங்கள் தேனால் உதடுகளை மசாஜ் செய்தபின், 15 நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ச்சியான நீரில் கழுவவும்.

• ஆலிவ் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாகக் கலந்து, இரவுகளில் இதழில் தடவிவரலாம்.

• வெள்ளரிக்காய்த் துண்டு கள்/கற்றாழை ஜெல்லை தினமும் 15 நிமிடங்கள் இதழ்களில் வைத்திருந்து  கழுவலாம்.

• விட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துகள் நிறைந்த பாலாடையால் 15 நிமிடங்கள் இதழ்களுக்கு மசாஜ் கொடுத்து, பின்னர் 15 நிமிடங்கள் ஊற வைக்கலாம்.

• எண்ணெய்ப் பசை நிறைந்த தயிர், இதழ்களை மென்மையாக்கும். 

இதழ்களில் வறட்சி, வெடிப்பு நீங்க...

• வறண்ட உதடுகளுக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸ்... வெண்ணெய். அதில் உள்ள புரோட்டீன் ஈரப்பசை தரும், தக்கவைக்கும்.

• பாதாம் எண்ணெயில் உள்ள `விட்டமின் ஈ', வறட்சியைத் தடுக்கும் என்பதால், தினசரி மசாஜ் எடுத்துக்கொள்ளலாம்.

• சர்க்கரை மற்றும் தேன் கொண்டு இதழ்களை ஸ்கிரப் செய்தால்... சர்க்கரை இறந்த செல்களை நீக்கும்,

பியூட்டிஃபுல் லிப்ஸ்... சூப்பர் டிப்ஸ்!

தேன் ஈரப்பசையைத் தக்கவைக்கும்.

• வெடிப்புகள் நீங்க, ஏதேனும் ஒரு பழத்தின் பேஸ்ட்டை இதழ் களில், உலரும் வரை பேக் போடலாம். குறிப்பாக, நன்கு கனிந்த வாழைப்பழம், சிறந்த லிப் மாஸ்க்.

• சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றின் தோலில் இருக்கும் சாறு, உதடு வறட்சியைத் தடுக்கக்கூடியது... இதைப் பயன்படுத்தலாம்.

• தேங்காய் எண்ணெயை, வெதுவெதுப்பான சூட்டில், தின மும் 2 முறை மசாஜ் செய்துவர, பலன் நிச்சயம்.

• ஆலிவ் ஆயிலை எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து பயன்படுத்தலாம்.

கறுப்பான உதடுகளுக்கு...

• எலுமிச்சை உட்பொருள் கொண்ட லிப் பாம் பயன்படுத்து வது பரிந்துரைக்கத்தக்கது.

• நெய்யில் இரு துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, இரவில் உறங்கும்போது இதழ்களில் தடவிவரலாம்.

• எலுமிச்சைச் சாற்றை ரோஸ் வாட்டருடன் கலந்து பயன்படுத்தலாம். பீட்ரூட் ஜூஸ் அப்ளை செய்யலாம்.

• எலுமிச்சைச் சாற்றுடன் கிளிசரின் கலந்து இதழ்களில் தடவிவர, கருமை நீங்கி நல்ல நிறம் கிடைக்கும் (எலுமிச்சைச் சாற்றைத் தனியாக இதழ்களில் அப்ளை செய்தால் வறட்சியை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும்).

• அரை ஸ்பூன் பாலாடை யுடன் 5 துளி சிறு/பெரு நெல்லிக் காய் சாறு சேர்த்து உதடுகளில் தடவி வர, 15 நாட்களில் பிங்க்கி லிப்ஸ் கியாரன்டி.

• மூன்று ஸ்பூன் சர்க்கரையை இரண்டு ஸ்பூன் வெண்ணையில் கலந்து, வாரத்துக்கு மூன்று முறை இதழ்களில் ஸ்கிரப் செய்து வர, மென்மையான, சிவப்பான உதடுகள் வசப்படும்.

பியூட்டிஃபுல் லிப்ஸ்... சூப்பர் டிப்ஸ்!

செய்யக்கூடாதவை!

எந்நேரமும் உதடுகளைக் கடித்துக்கொண்டே இருப்பது கூடாது. இதனால் இதழ்கள் அழகு இழப்பதோடு சுருக்கங்களும் ஏற்படும். வாய் வறண்டுபோகிறது என்று அடிக்கடி எச்சிலால் இதழ்களை ஈரமாக்கிக்கொண்டே இருந்தால், வாய் இன்னும் உலர்ந்துபோவதுடன் இதழ்களில் துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடும்.

செய்ய வேண்டியவை!

விட்டமின் குறைபாடு, உடற்சூடு போன்ற காரணங்களால் வாய் ஓரங்களில் புண்கள் ஏற்பட்டால், ஊட்டச்சத்துமிக்க உணவும், நிறைய தண்ணீரும் எடுத்துக்கொள்ளவும். உதடுகளில் சுருக்கங்கள் நீங்க, தினமும் பிரஷ் செய்த பிறகு, இன்னொரு பேபி பிரஷ் கொண்டு உதடுகளை மேலும் கீழுமாக மென்மையாக பிரஷ் செய்யவும்.

லிப்ஸ்டிக் டிப்ஸ்!

எப்போதும் பிராண்டட் லிஸ்ப்டிக் மட்டுமே பயன்படுத்தவும். லிப்ஸ்டிக் போட பயன்படுத்தும் பிரஷ்ஷை அடிக்கடி கழுவி சுத்தம் செய்யவும். மற்றவர்கள் பயன்படுத்திய லிப்ஸ்டிக்கை தவிர்க்கவும். இரவு உறங்கச்செல்லும் முன் சிறிது பாதாம் எண்ணெயால் லிப்ஸ்டிக்கை நன்கு துடைத்து எடுத்து இதழ்களை க்ளென்ஸ் செய்யவும்; இடமிருந்து வலமாக ரொட்டேஷன் முறையில் ஒரு நிமிடம் மசாஜ் செய்யலாம்.

ஃபாலோ செய்யுங்கள்... பேபி லிப்ஸ் பெறுங்கள்!

தொகுப்பு: ச.ஆனந்தப்பிரியா, கோ.இராகவிஜயா  படங்கள்:சூ.நந்தினி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism