பி.ஏ., சோஷியல் வொர்க் (B.A. Social Work - BSW) படிப்பு குறித்த தகவல்கள் மற்றும் அதற்கான வேலைவாய்ப்பு விவரங்களைப் பகிர்கிறார், சென்னை, கிறிஸ்தவ கல்லூரியின் சமூகப்பணி துறைத்தலைவர் டாக்டர் ஆர். பெலிண்டா.

தகுதி!
பி.ஏ., சோஷியல் வொர்க் படிப்புக்கு, ப்ளஸ் டூ-வில் எந்த குரூப் எடுத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு கல்லூரியும் அவர்களின் தகுதி எதிர்பார்ப்பின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவார்கள்.
சிலபஸ்!
மூன்று ஆண்டுகள் இளங் கலைப் படிப்பான பி.ஏ., சோஷியல் வொர்க்கில் சமூகவியல், பொலிட்டிக்கல்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சயின்ஸ், மனிதவள மேம்பாடு, உளவியல் போன்ற பல தளங்களில் பாடங்கள் கற்பிக்கப்படும். மேலும், செயல்முறைக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். உதாரணமாக, ரூரல் கேம்ப் எனப்படும் கிராமப்புற முகாம்/சேரிப்புற முகாம் ஏற்பாடு செய்யப்படும். மாணவர்கள் ஒரு பின்தங்கிய கிராமத்துக்குச் சென்று, அந்த மக்களுடன் பழகுவது, கலைநிகழ்ச்சிகள் மூலம் அவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துவது, அந்த சுற்றுப்புறத்தை தூய்மை செய்வது என ஈடுபடுத்தப்படுவார்கள். இந்தப் பயிற்சிகள் எல்லாம், படிப்பை முடிக்கும் சமயத்தில் அவர்களை ஒரு முழுமையான சமூகப் பணியாளராக மாற்றியிருக்கும். மேலும், அரசுப் போட்டித் தேர்வு எழுதும் பலர், திட்டமிட்டு பி.ஏ., சோஷியல் வொர்க் கோர்ஸ் தேர்வு செய்வதும் குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு, அந்த போட்டியின் வினாக்களுக்கான பாடங்களை இதில் கற்கப்பெறலாம்.
மேற்படிப்பு!
பி.ஏ., சோஷியல் வொர்க் முடித்தவர்கள், எம்.ஏ., சோஷியல் வொர்க் (Master of Social Work - MSW) படிக்கலாம். இந்த இரண்டு வருட முதுகலைப் படிப்பின் இரண்டாம் வருடத்தில், பிசினஸ் மேனேஜ்மென்ட் அறிமுகம், மனிதவளத் துறையின் நடப்பு மற்றும் சிறப்புக் கொள்கைகள், கிரிமினாலஜி என்று மெருகேற்றப் படுவார்கள்.
வேலைவாய்ப்பு!
மனிதவளத்துறை தொடர்பான வேலைவாய்ப்புகள் பல, சோஷியல் வொர்க் படிப்பு முடித்தவர்களுக்காகக் காத்துக்கிடைக்கின்றன. ஹேபிலிடேஷன் ஸ்பெஷலிஸ்ட், மென்டல் ஹெல்த் அசிஸ்டன்ட் போன்ற உளவியல் சார்ந்த வேலைவாய்ப்புகள், புரொகிராம் கோ-ஆர்டினேட்டர், ஆக்டிவிட்டி டைரக்டர், வொர்க் ஷாப் டைரக்டர் என ஒரு குழு நடவடிக்கைக்கான பொறுப்பாளர் வேலைவாய்ப்புகள் விரிந்திருக்கின்றன. இதுவே, முதுகலையும் முடித்தவர்களுக்கு வாய்ப்பும் வரவேற்பும் இரண்டு மடங்கு! பிசினஸ் அசோஸியேட், லேபர் வெல்ஃபேர் ஆபீசர், ஃபேஷன்ட் வெல்ஃபேர் ஆபீசர், அசிஸ்டன்ட் மேனேஜர், ஹெச்.ஆர். மேனேஜர் என பெரு நிறுவனங்களின், குழுமங்களின் மனிதவளத்துறை பொறுப்புகளுக்கு எம்.எஸ்.டபுள்யூ முடித்தவர்களையே நாடுகிறார்கள். மேலும், வெளிநாட்டிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. தனியார் மற்றும் அரசுத் துறை பணிவாய்ப்புகளும் உள்ளன.
சோஷியல் வொர்க் படிப்பு... வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது!
தா.நந்திதா, படம்: மா.பி.சித்தார்த்