


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!




Santhosh Neelamegan @santhozn
கடவுளாக இருப்பது உண்மையிலயே சுவாரஸ்யமான விஷயமாதான் இருக்கும் போல... ரெண்டாவது மாடிலயிருந்து வேடிக்கை பாக்கும்போதே இவ்வளவு ஜாலியா இருக்குனா...
மீனம்மா @meenammakayal
எந்த எதிர்கேள்வியும் கேட்காமல் ஒன்றை நான் நம்பவேண்டும் என்றால்... அது என்னைப் பற்றிய பாராட்டாக இருக்கவேண்டும்.
ஆல்தோட்டபூபதி @thoatta
பபிள்கம் கேட்ட மகளிடம், பபிள்கம் சாப்பிட்டா வாய் ஒட்டிக்கும்னு சொன்னா, `அப்ப கொசு வாயில போட்டுடுங்க யாரையும் கடிக்காது'ங்கிறா.
Vigneswari Suresh @VignaSuresh
பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுத்து இருவது ஆண்டுகள் ஆனாலும் கூட, அம்மாக்கள் பார்க்க வருகையில், சாம்பார் பொடி அரைத்து வருகிறார்கள்.


இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!....நிதர்சனம்
இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவாங்க. வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவாங்க.!
இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!
250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!
மொபைல் போனை முதலில்
வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப் படுத்தினார்கள். இப்போது வைத்திருக் காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!
தூக்கம் வராமல்
முதலாளி...
தூங்கி வழியும்
வாட்ச்மேன.........முரண்.
கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!
தொகுப்பு: பொன்.விமலா, கார்த்தி, ஐ.மா.கிருத்திகா, தா.நந்திதா, கோ.இராகவிஜயா