Published:Updated:

ட்விட்டர் என்னடா, ஃபேஸ்புக் என்னடா 'வாட்ஸ் அப்'பான உலகத்திலே!

ட்விட்டர் என்னடா, ஃபேஸ்புக் என்னடா 'வாட்ஸ் அப்'பான உலகத்திலே!
பிரீமியம் ஸ்டோரி
News
ட்விட்டர் என்னடா, ஃபேஸ்புக் என்னடா 'வாட்ஸ் அப்'பான உலகத்திலே!

Whatsapp Story

ன்று நம் கையோடு ஆறாவது விரலாய் ஒட்டிக்கொண்டுவிட்டது, ஸ்மார்ட்போன். அந்த ஸ்மார்ட்போனின் ஸ்மார்ட் ஃபிட்டிங்... உலக நாயகன், இளசுகளின் நண்பன், இணையத் தலைவன்... வாட்ஸ்அப்!

ட்விட்டர் என்னடா, ஃபேஸ்புக் என்னடா 'வாட்ஸ் அப்'பான உலகத்திலே!

இன்று கிட்டத்தட்ட உலகம் முழுக்க 100 கோடி பேர் பயன்படுத்தும் இந்த `வாட்ஸ்அப்'பின் சுவாரஸ்யமான ஃப்பளாஷ்பேக் இங்கே..!

அப்பா ரெண்டு பேர்!

‘இந்த வாட்ஸ்அப் எல்லாம் வேலைக்கு ஆவாது. சம்பளம் கம்மியா இருந்தாலும் பரவாயில்லை பேசாம வேலைக்குப் போக வேண்டியதுதான்’ என்றார் `வாட்ஸ்அப்'பின் தந்தை ஜேன் கோம். ‘கொஞ்சம் பொறுமையா இரு கோம். இந்த வாட்ஸ்அப் ஏதோ பெருசா சாதிக்கப்போகுதுனு எனக்குத் தோணு’  என்றார் `வாட்ஸ்அப்'பின் டேடி பிரையன் ஆக்டன். யெஸ்... `வாட்ஸ் அப்'புக்கு இரண்டு அப்பாஸ். ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டனின் கூட்டுக் கண்டுபிடிப்பே... இந்த ஆப்.

இணைந்த கைகள்!

கோம், உக்ரைன் நாட்டுக்காரர். ஆக்டன், அமெரிக்கர். இருவரையும் ஒன்று சேர்த்தது, யாஹூ அலுவலகம். ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ என்று இருவரும் இறுகியது, யாஹூ அலுவலகத்தில் அவர்கள் வேலை பார்த்த நாட்களில்தான். யாஹூவுக்கு இவர்கள் வந்து சேர்ந்ததே டிவிட்ஸ்டிங் ஸ்டோரிதான்.

கோமுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா மூளை. டீன் ஏஜில் கம்ப்யூட்டரும் நெட்டும் கிடைத்தால் பசங்க என்ன செய்வார்களோ, அதை அவர் செய்யவில்லை. சிஸ்டம் பற்றி சின்சியராக, முழுமையாகக் கற்றுக்கொண்டார். முக்கியமாக, கம்ப்யூட்டர் ஹேக்கிங்கில் கலக்கல் ஹீரோ நம் கோம். எந்த கம்ப்யூட்டரிலும் சும்மா புகுந்து விளையாடுவார். படா படா நிறுவனங்கள் எல்லாம், ‘ஹேக்கிங்கா? கூப்புட்றா கோமை...’ என்று தேடும் அளவுக்கு வேலைக்காரர். படித்துக்கொண்டே பார்ட் டைம் வேலைபார்த்துக்கொண்டிருந்த கோமின் திறமை யாஹூ நிறுவனத்துக்குத் தெரியவர, ஒரு தொகையை கொடுத்து அவரை `அலேக்'காக வேலைக்கு எடுத்துக்கொண்டது. கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு, ஆக்டனுடன் ஆபீஸ் செல்பவர் ஆகிவிட்டார் கோம். தங்களை ஒன்றாக இணைத்த யாஹூவைவிட்டு, ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாகவே வெளியேறினார்கள்.

வாட்ஸ்அப் பிறந்தது!

கோம், ஆக்டன் இருவரின் அடுத்த திட்டம், ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வது. ஆனால் இருவரின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டபோது, அவர்களே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்... பிற்காலத்தில் ஃபேஸ்புக்கே வலியவந்து அவர்களுக்கு வேலைதரும் என்று!

வேலை இல்லாமல் இருந்த கோம், ஆக்டன் இருவரும் நண்பர்களுடன் மொபைலில் வெட்டிக் கடலைப் போட்டுக்கொண்டிருந்தபோது, ஒவ்வொரு மெசேஜுக்கும் வசூலிக்கப்பட்ட கட்டணம், அந்த வறுமையான சூழலில் இருவருக்கும் கசப்படித்திருக்கிறது. ‘நாசமாப்போக’ என்று நெட்வொர்க்காரனை திட்டாமல், ‘கட்டணம் இல்லாமல் மெசேஜ் அனுப்புவது எப்படி?’ என்று இருவரும் யோசித்தார்கள். ‘மெயில் தேவைகளுக்குப் பயன்படுத்தும் நெட் கனெக்‌ஷனையே பயன்படுத்தும் வகையில் ஒரு `கம்யூனிக்கேட்டிங் ஆப் இருந்தால்..?’ என்று இருவரின் மூளையும் கசங்கி விரிந்து யோசித்த வேளையில்... பிறந்தது வாட்ஸ்அப்! 2009-ல் கோம் பிறந்தநாளன்றே `வாட்ஸ்அப்'புக்கும் ஹேப்பி பர்த்டே கொண்டாடினார்கள் நண்பர்கள்.

ஸ்டார்ட்டிங் ட்ரபுள்!

ஆரம்பத்தில் வாட்ஸ்அப்-புக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. தொடர்ந்து அதில் டிங்கரிங் வேலைகள் செய்துகொண்டே இருந்தார்கள் இருவரும். அப்போதுதான் கோம் ஒரு டகால்டி ஐடியா பிடித்தார். அதாவது, ஒவ்வொரு முறை யூஸர் ஸ்டேட்டஸ் அப்லோடு செய்யும்போதும், எல்லோருக்கும் நோட்டிஃபிகேஷன் காட்டுவதுபோல செட்டப் செய்தார்.நோட்டிஃபிகேஷன் காட்டுவதோடு மட்டுமின்றி, ரிசீவ் செய்பவர் அதைப் பார்த்துவிட்டாரா என்ற ரிப்ளை நோட்டிஃபிகேஷனையும் (அதான் அந்த டபுள் ப்ளூ டிக்) செட்டப் செய்தார். அவ்வளவுதான்... ஐபோன் வாட்ஸ்அப் யூசர்ஸ் எண்ணிக்கை திகுதிகுவென 2,50,000-ஐ தாண்டியது. அப்புறமென்ன... பிளாக்பெரி, ஆண்ட்ராய்ட் என்று இப்போது ஜாவா வரைக்கும் வாட்ஸ்அப் வைரல்தான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ட்விட்டர் என்னடா, ஃபேஸ்புக் என்னடா 'வாட்ஸ் அப்'பான உலகத்திலே!

ஃபேஸ்புக் பர்சேஸ்!

`வாட்ஸ்அப்'பின் விஸ்வரூப வெற்றியைப் பார்த்து பல பெரிய நிறுவனங்களும் போட்டிபோட்டு அதில் முதலீடு செய்தார்கள். ஹைலைட்டாக, ஃபேஸ்புக் மொத்தமாக வாட்ஸ்அப் காப்புரிமையையே வாங்கிவிட்டது. என்னதான் ஃபேஸ்புக்  `வாட்ஸ்அப்'பை தத்தெடுத்தாலும், இன்றும் கோம் மற்றும் ஆக்டன் இருவரும் தான் `வாட்ஸ்அப்'பின் செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறார்கள்.

இன்று தகவல் பரிமாற்றத்தில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் பரிமாற்றம் வரை, விழிப்பு உணர்வுத் தகவல்களில் இருந்து பேரிடர் கால அவரச உதவிகள்வரை எங்கோ உயர்ந்து நிற்கிறது வாட்ஸ்அப்... வீ லவ் யூ!

தொகுப்பு: பா.நரேஷ்