Published:Updated:

'ஜெனரேஷன் Y'... கொஞ்சம் காதுகொடுங்க!

'ஜெனரேஷன் Y'... கொஞ்சம் காதுகொடுங்க!

Suicide

'ஜெனரேஷன் Y'... கொஞ்சம் காதுகொடுங்க!

Suicide

Published:Updated:
'ஜெனரேஷன் Y'... கொஞ்சம் காதுகொடுங்க!

ளைஞர்களும், இளம்பெண்களும் மனம் உடைந்து தற்கொலை செய்துகொள்ளும் செய்திகளை தொடர்ச்சியாக கேள்விபட்டு, அதிர்ச்சியில் இருக்கும் இந்தச் சூழலில், அது குறித்து சில வார்த்தைகள் பகிர்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் மோனிகா.

‘‘இந்தியாவிலே தற்கொலைகள் அதிகம் நடக்கும் முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. குறிப்பாக 2012-க்கு பிறகுதான் இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் காட்டுகின்றன ஆய்வு முடிவுகள். தோல்வி, கோபம், அவமானம், ஏமாற்றம், எரிச்சல் என தினசரி வாழ்க்கையில் சந்திக்கவேண்டிய சூழல்களையும் வலிகளையும் கடந்துபோகும் வலுவில்லாமல் முடிவைத் தேடிக்கொள்கிறதா நம் இளைய தலைமுறை? 

'ஜெனரேஷன் Y'... கொஞ்சம் காதுகொடுங்க!

நம் அப்பா, அம்மா தலைமுறையை ‘ஜென் எக்ஸ்' (Gen X) என்றும், 1980 காலகட்டம் தொடங்கி 2000 வரை பிறந்தவர்களை ‘ஜென் வொய்' (Gen Y) அல்லது ‘மில்லேனியல்ஸ்’ என்றும் குறிப்பிடுவர். தோல்வி பயம், ஸ்ட்ரெஸ், ‘நான் எதற்குமே லாயக்கு இல்லை’ போன்ற எண்ணங்கள் அடிக்கடி தோன்றுவது, ``ஜெனரேஷன் Y'யை சேர்ந்தவர்களுக்கே உரிய குணாதிசயங்கள் என்கிறது மனநல மருத்துவ உலகம்.

ப்ளஸ் டூ-வில் குரூப் தேர்ந்தெடுப்பது தொடங்கி, காலேஜ் கோர்ஸ், வேலை, காதல், கல்யாணம் என ஒவ்வொரு கட்டத்திலும் இந்தத் தலைமுறையினருக்கு இருக்கும் அழுத்தம் அதிகம் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும் உண்மைக்கு மிக விலகிய ஒரு மாய உலகம்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஜெனரேஷன் Y'... கொஞ்சம் காதுகொடுங்க!

குறிப்பாக மெய்நிகர் உலகம் (வெர்ச்சுவல் வேர்ல்டு) என்று சொல்லப்படும் சமூகவலைதள உலாவல் அவர்களின் அழுத்தத்தை இன்னும் அதிகமாக்குகிறது என்பது மறுக்கமுடியாத காரணம். ஃபேஸ்புக்கில் யாரோ ஒரு தோழி, தான் மகிழ்ச்சியாக இருக்கும் படங்களைப் போஸ்ட் செய்வதைப் பார்த்தவுடன், ‘நம் வாழ்க்கை மட்டும்தான் இப்படிச் சந்தோஷமே இல்லாமல் கழிகிறதா?’ என்ற தாழ்வு மனப்பான்மை, மனதில் சிறிதாக விழுந்துகிடக்கும் கவலையை பெரிதாக ஊதிவிட்டுவிடுகிறது. நம் வாழ்க்கையின் இரண்டாவது பக்கத்தை இன்னொருவர் வாழ்கையின் நாற்பதாவது பக்கத்தோடு ஏன் ஒப்பிட வேண்டும் என்ற அறிவின் கேள்வியை புறந்தள்ளி, நினைத்தது கிடைக்காவிட்டால் வாழ்க்கையே போய்விட்டதாக உடைந்துபோகிறார்கள்.

இன்னொரு பக்கம், நம் சமூகத்திலும் தற்கொலை எண்ணங்கள் குறித்தோ மனநலப் பிரச்னைகள் குறித்தோ வெளிப்படையாக விவாதிக்கப்படுவதில்லை. அப்படிக் களையப் படாமல் விடும் பல மனநோய்களின் வெளிப்பாடாக தற்கொலை அமைந்துவிடுகிறது. ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் போன்ற பிரச்னைகளால் இயல்பு வாழ்கை பாதிக்கப்படுவதாக உணர்ந்தால், உடனடியாக மனநல நிபுணரைச் சந்திக்கத் தயங்க வேண்டாம். தற்கொலை செய்துகொண்டவர்களில் பெரும்பாலானோர், தற்கொலைக்கு முன்பு தங்கள் பிரச்னையைப் பகிர முன்றிருப்பார்கள். ஆனால், அவர்களின் நெருங்கிய தோழி, பெற்றோர்களால்கூட அது கவனிக்கப்படாமல் அமுங்கிப்போயிருக்கும். அதுவே அந்நேரத்தில் அவர்களுக்கு சரியான கவுன்சலிங் கொடுக்கப்பட்டிருந்தால், அந்த உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். எனவே, மனதுக்குள் போட்டுப் பூட்டாதீர்கள் எதையும். கரைத்துவிடுங்கள்.

மன உளைச்சலைப் பகிர்ந்துகொள்ளுங்கள் என்பதோடு, இளைய தலைமுறைக்கு இன்னொரு கோரிக்கையும் உள்ளது. மற்றவர்களின் பிரச்னைகளையும் அக்கறையுடன் கேளுங்கள், ஆறுதல் சொல்லுங்கள், ஆதரவாக இருங்கள். ஃபேஸ்புக்கில் லைக் போடுவது மட்டுமல்ல தோழமை. இன்பத்தைவிட துன்பத்தில் கரம்பற்றி உடன் இருப்பதே நல்ல நட்பு.

குடி, போதை போன்ற பழக்கங்களால் மூளையில் ஏற்படும் மாற்றங்களும் சில நேரம் தற்கொலை எண்ணத்தைத் தூண்டலாம் என்பதால், எப்போதும் நல்ல பழக்க வழக்கங்கள், நேர்மறையான எண்ணங்கள் என்று இருங்கள்.

ஒரே ஒரு வாழ்க்கைதான்... அதை வாழ்வோம் தன்னம்பிக்கையுடன், தைரியமாக, மிக அழகாக!’’

கோ.இராகவிஜயா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism