ஒரு நாளைக்கு 100 முடி உதிர்கிறதா..? கவலையே படாதீர்கள்!

நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான். நோய்களைப் பற்றி வெளிச்சம் தந்து வரும் ‘நோய் நாடி’ தொடரில், முடி உதிர்வு பிரச்னை தொடர்பான விஷயங்களை இந்த இதழில் பார்க்கலாம்.

பொடுகு, முடி உதிர்தல், வழுக்கை என கேசம் சார்ந்த பிரச்னைகளும், அதற்கான சந்தை வியாபார விளம்பரங்களும் இந்தத் தலைமுறையில் பெருகி வருவது கண்கூடு. தலைமுடி சார்ந்த பிரச்னைகள், அதற்கான மருத்துவக் காரணங்கள், இயற்கைத் தீர்வுகள், சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார், சென்னை மருத்துவக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியரும், சருமவியல் துறைத் தலைவருமான டாக்டர் ஜானகி.

``முடி உதிர்வு என்பது எப்போதும் உள்ள பிரச்னைதான் என்றாலும், இன்று இளம் தலைமுறையினர் அதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவதுதான், அதை முக்கியப் பேசுபொருளாக்கி இருக்கிறது. மருத்துவத் தளத்திலும், அழகு சாதனப் பொருட்கள் தளத் திலும் அது முக்கிய இடத்தையும் பெற்றுவிட்டது. சரியான நேரத்தில், தரமான மருத்துவரிடம், பிரச்னைக்கு உரிய சிகிச்சையை, தேவைப்படும் காலம்வரை மேற்கொண்டால்... முடி உதிர்வுப் பிரச்னையை வெல்லலாம் எளிதாக!’’ என்ற முன்னுரையுடன் தொடங்கினார், டாக்டர்.

முடி வளர்ச்சி, முடி உதிர்வு... ஒரு விளக்கம்!

‘‘குழந்தை, தாயின் வயிற்றில் 22 வாரக் கருவாக இருக்கும்போதே, அதன் முழு ஆயுளுக்குமான ஹேர்

ஃபாலிக்கிள்களின் வளர்ச்சி முழுமை அடைந்திருக்கும். உடல் முழுக்க 5 மில்லியன் ஹேர் ஃபாலிக்கிள்களும், அதில் தலையில் மட்டும் ஒரு மில்லியன் ஹேர் ஃபாலிக்கிள்களும் உருவாகியிருக்கும். குழந்தை பிறக்கும்போது, அதில் ஓராயிரம் ஹேர் ஃபாலிக்கிள்கள் வரையிலான வளர்ச்சி, மண்டையோட்டை அடைந்து கேசமாக வெளித்தெரியும். மற்றவை உள்ளுக்குள் இருக்கும். இதற்குப் பிறகு, புதிதாக எந்த ஹேர் ஃபாலிக்கிள்களும் உருவாகாது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை வளர வளர, ஏற்கெனவே உருவாகி இருக்கும் ஹேர் ஃபாலிக்கிள்களின் வளர்ச்சி தூண்டப்பட, கேச வளர்ச்சி அதிகரிக்கும். வளரும் முடியானது, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உதிரும். ஆனால், அதே வேர்க்காலில் மீண்டும் முடி வளர ஆரம்பிக்கும். இது இயற்கையானதே.

இந்தத் தொடர் நிகழ்வில், முடி உதிர்ந்து...

ஊட்டச்சத்தின்மை, மன அழுத்தம், மரபு, பொடுகு என ஏதாவது ஒரு காரணத்தால் மீண்டும் அந்த வேர்க்காலில் முடி வளராமல் இயக்கம் தடைபடலாம். இப்படித் தொடர்ந்து முடி உதிர்ந்து, ஆனால், அங்கு புதிய முடி உருவாகாத சூழ்நிலையில்தான், சொட்டை, வழுக்கை என அது பிரச்னை யாகக் கவனிக்கப்படும். மேலும், ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50-100 முடி வரை உதிர்வது இயல்பே. மேற்சொன்னது போன்ற ஏதாவது ஒரு காரணத்தால், அதற்கும் அதிகமான எண்ணிக்கையில் முடி உதிரும்போது, அது ஹேர்ஃபால் பிரச்னை ஆகிறது.

முடியின் இயக்கத்தைப் பொறுத்த வரையில், குரோயிங் ஃபேஸ், ரெஸ்ட்டிங் ஃபேஸ் என இரண்டு நிலைகள் உள்ளன. ஒரு முடியின் வளர்ச்சியானது 4 - 5 வருடங்கள் வரை இருக்கும் என்பதே, குரோயிங் ஃபேஸ். அதன் பின் உதிரும் முடியானது, மீண்டும் வெளிவர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியான 4 - 5 மாதங்களே, ரெஸ்ட்டிங் ஃபேஸ். இதுதான் பொதுவான கேச வளர்ச்சி சுழற்சி.

முடி உதிர்வு பிரச்னையாவது எப்போது?

முடி உதிர்வும், வளர்ச்சியும் இயற்கையான இயக்கங்கள் என்று பார்த்தோம். ஒரு நாளைக்கு எவ்வளவு முடி உதிர்கிறது என்பதே, அது இயல்பா, பிரச்னையா என்பதைத் தீர்மானிக்கிறது. பொதுவாக, ஒரு நாளைக்கு 50 - 100 முடிவரை உதிரலாம். கவலைப்படத் தேவையில்லை. ஆனால், 100 முடிக்கும் அதிகமாக, கொத்துக் கொத்தாகக் கொட்டும்போது, அது ஹேர்ஃபால் பிரச்னை ஆகிறது. ஆண், பெண், வயது பாகுபாடின்றி யாருக்கும் இது நிகழலாம். எனினும், குழந்தைகளுக்கு பெரும்பாலும் முடி உதிர்வுப் பிரச்னை இருக்காது, அப்படி இருந்தால் பூஞ்சைதான் முக்கியக் காரணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேர்ஃபால் காரணங்கள்!

இரும்புச்சத்து குறைபாடு

நீண்டநாள் காய்ச்சல் (டெங்கு, டைஃபாய்டு)

புற்றுநோய் சிகிச்சை

ரத்தசோகை

தைராய்டு

மன அழுத்தம்

`விட்டமின் ஏ’ அதிகரித்தல்

பாக்டீரியா, வைரஸ் பாதிப்புகள்

சருமநோய்

பொடுகு

குறிப்பு: இந்தப் பட்டியல் இன்னும் நீளமானது.

சில புரிதல்களும், தெளிதல்களும்..!

சில தீவிரமான வியாதிகளால் கேசத்தின் குரோயிங் ஃபேஸ், ரெஸ்ட்டிங் ஃபேஸ் ஆக மாறும்போது, முடி உதிர்வு அதிகமானதாக தெரியும். இது நோயின் விளைவுதான், விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதால், அச்சம் தேவையில்லை.

மற்ற காரணங்கள் எல்லா வற்றையும்விட, மன அழுத்தம் அதிக மான முடி உதிர்வை ஏற்படுத்தும். அவ்வகையில், இளம் வயதினரின் முடி உதிர்வுக்கு, அவர்களின் வேலைப் பளுவும் முதன்மைக் காரணமாகிறது.

முடி உதிர்வுப் பிரச்னையைப் பொறுத்தவரையில், 100-ல் 50 பேருக்கு மட்டுமே சரியான காரணம் கண்டுபிடிக்க முடியும். எனவே, பார்லரில் இருந்து தற்போது பெருகிவரும் ஹேர் ட்ரீட்மென்ட் சென்டர்கள்வரை, அவர்கள் பரிந்து ரைப்பதை எல்லாம் வேதவாக்காக நினைத்துக்கொண்டு, வாங்கித் தடவுவது, குடிப்பது, சாப்பிடுவது எல்லாம் கூடாது. தரமான மருத்துவ ஆலோசனையே பிரச்னையின் வேரைக் கண்டறிந்து சரிசெய்யும்.

13 வயதில் இருந்து பருவ வயதினருக்கு முகப்பருவைப் போலவே தலையில் பொடுகு ஏற்படுவதும் இயல்பு. இதனால் ஏற்படும் முடி உதிர்வுப் பிரச்னையை 90% குணப்படுத்திவிடலாம்.

பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள், தலைக்குக் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன் தலையில் எண்ணெய் தேய்த்து வைத்திருந்து குளித்தால் போதும்.

ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு நன்றாக முடி வளர்வதும், குழந்தை பிறந்த பிறகு முடி உதிர்வதும் இயல்பு. ஒரு கட்டத்தில் அது தானாக சரியாகிவிடும். தொடர்ந்து நீடித்தால், மருத்துவ ஆலோசனை தேவை.

ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் சொட்டை ஏற்படலாம்.

சிகிச்சை!

25 ஆண்டுகளுக்கு முன்பு முடி உதிர்வுப் பிரச்னைக்கு இந்தளவுக்கு மருத்துவ முக்கியத்துவம் கிடையாது. ஆனால், அழகுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக் கும் இந்த யுகத்தில், மக்களின் தேவைக்கு ஈடுகொடுக்க முடி உதிர்வுப் பிரச்னைக்கான சிகிச்சைகளும் பெருகியுள்ளன, நவீனமடைந்துள்ளன. முடி உதிர்வுப் பிரச்னையைப் பொறுத்தவரை உடனடித் தீர்வு சாத்தியம் இல்லை. பொறுமையுடன் 5, 6 ஆண்டுகள் தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால், முன்னேற்றம் காணலாம். ஒரு மாதம் ஒரு சிகிச்சையை எடுத்துவிட்டு, ‘ஒரு ரிசல்ட்டும் இல்ல’ என்று வேறு சிகிச்சையை தேடித் தாவினால், பலன் கிடைக்காது.

முடி உதிர்வைக் குறைக்க, ஃபாலிக்கிளைத் தூண்ட, ஊட்டம் கொடுத்து கேச வளர்ச்சியைத் தூண்ட என பல பலன்களை முன்னிறுத்தி சிகிச்சைகள் அளிக்கப்படும். வெளிப்புறத்தில் அப்ளை செய்யும் எண்ணெய்கள், க்ரீம்கள் முதல் ஸ்டீராய்டு ஊசிகள், லேசர், ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் சிகிச்சை வரை இன்று பரவலாக வழங்கப்படுகின்றன. எனவே, முடி உதிர்வு என்பது இனி தீர்க்க முடியாத பிரச்னை என்பது இல்லை.

மொத்தத்தில் ஆரோக்கியமான லைஃப்ஸ்டைல், ஸ்ட்ரெஸ் ஃப்ரீ வாழ்க்கை, சத்தான உணவு, தலையை சுத்தமாக வைத்துக்கொள்வது இவை எல்லாம் முடிஉதிர்வுப் பிரச்னைகளில் இருந்து காக்கும் கவசங்கள். முடி உதிர்வுக்கான சிகிச்சையின் முக்கிய அம்சம், பொறுமை!’’

- வலியுறுத்தலுடன் முடித்தார், டாக்டர் ஜானகி.

- நோய் நாடி வெல்வோம்...

சா.வடிவரசு

கேசத்துக்கான ஆரோக்கிய நடவடிக்கைகள்!

சாப்பாடு விஷயத்தில் கூடுதல் அக்கறை அவசியம். இயற்கை உணவுகள் கைகொடுக்கும். பேரீச்சை உள்ளிட்ட இரும்புச்சத்து நிறைந்த உணவுகள், பசலை உள்ளிட்ட கீரை வகைகள், பச்சை நிறக் காய்கறிகள், கறிவேப்பிலை, மீன் இவையெல்லாம் முடிவளர்ச்சிக்கு உதவும்; முடி உதிர்வைத் தடுக்கும்.

கேரட், வெங்காயம், பூண்டு, ஆரஞ்சு, பப்பாளி, கொய்யா, நெல்லிக்காய் இவையெல்லாம் முடிவளர்ச்சியைத் தூண்டும் உணவுகள். பூண்டில் உள்ள அலிசின் என்ற மூலக்கூறு, முடி உதிர்வுப் பிரச்னைக்கு எதிராக செயல் படக்கூடியது.

வெந்தயம், முடி வளர்ச்சியைத் தூண்டும் ஆற்றல் உடையது. அதில் உள்ள மூலக்கூறுகள் முடிக்கு வலுவூட்டுவதோடு, ஈரப்பதத்தையும் அளிக்கவல்லவை. வெந்தயத்தை அரைத்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் பூசிவந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

முளைகட்டிய தானியம் மற்றும் பயறு வகைகளில் உள்ள அதிகளவிலான புரதம் மற்றும் ஊட்டச்சத்துகள் முடி வளர்ச்சியைத் தூண்டுவதோடு முடி உதிர்வைத் தடுக்கும்.

வாரத்துக்கு 2 - 3 முறை தலைக்குக் குளிப்பது அவசியம்.

சிகைக்காய், ஷாம்புவை விருப்பம்போல் தேர்வுசெய்து கொள்ளலாம். பொடுகு, வறட்சி, கூந்தல் உடைவது போன்ற பிரச்னை உள்ளவர்கள் அதற்கான பிரத்யேக புராடக்ட்டுகள் எடுத்துக்கொள்ளலாம்.

அரிப்பு, எரிச்சல் என ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால், டை, கலரிங்கை எல்லாம் உடனடியாக நிறுத்திவிட வேண்டும். மேலும், இவற்றின் நீண்டகால தொடர் பயன்பாட்டையும் தவிர்க்கவும்.

முடியை நேராக்குவது, சுருளாக்குவது என்று கேசத்தை அதன் இயல்பில் இருந்து மாற்றும்போது, டேமேஜ் ஏற்படும்.

சில எதிர்பாராத அதிர்ச்சி, இழப்பு போன்றவை யும் முடி உதிர்வுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதால், அதுபோன்ற சூழலில் இருந்து விரைவில் மனதளவில் மீள்வது முக்கியம்.

கொத்தாக முடி உதிர்வு... சொட்டை!

ராஜபாளையத்தைச் சேர்ந்த தோல் சிறப்பு மருத்துவர் பொன்னு சாமி, தலையில் ஓர் இடத்தில் மட்டும்

கொத்தாக முடி உதிர்ந்து சொட்டை ஏற்படுத்தும் அலொபீஸியா அரேட்டா (Alopecia Areata - AA)பிரச்னை பற்றிப் பேசினார். ‘‘கை, கால்,புருவங்கள் என உடலின் ரோமங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும், பொதுவாக வட்டம் அல்லது நீள்வட்ட வடிவில் உதிரும் பிரச்னையே, அலொபீஸியா அரேட்டா. மன அழுத்தம், உடல் பிரச்னை, பூஞ்சைத் தொற்று போன்றவற்றால் இந்தப் பிரச்னை ஏற்படலாம். நம் உடலின் செல்கள், தங்களின் திசுக்களையே அடையாளம் காண முடியாமல், அவற்றை அந்நியமாக நினைத்து எதிர்வினை புரிவதால் (ஆட்டோஇம்யூன் டிசீஸ்) ஏற்படும் சிக்கல் இது. இது சாதாரண முடி கொட்டும் பிரச்னை அல்ல என்பதால், தாமதிக்காமல் உடனடியாக சரும சிறப்பு மருத்துவரின் ஆலோசனையும்... க்ரீம், ஆயின்மென்ட், மாத்திரைகள், ஊசி என வீரியத்தைப் பொறுத்து சிகிச்சையும் பெற வேண்டியது முக்கியம். 99 சதவிகிதம் பேருக்கு மீண்டும் முடி வளர ஆரம்பிக்கும்... கவலை வேண்டாம்!’’ என்றார்