Published:Updated:

திருமண சிக்கல்... தீர்த்துவைத்த தோழன்!

திருமண சிக்கல்... தீர்த்துவைத்த தோழன்!
பிரீமியம் ஸ்டோரி
திருமண சிக்கல்... தீர்த்துவைத்த தோழன்!

நானும் அவளும் / அவனும்

திருமண சிக்கல்... தீர்த்துவைத்த தோழன்!

நானும் அவளும் / அவனும்

Published:Updated:
திருமண சிக்கல்... தீர்த்துவைத்த தோழன்!
பிரீமியம் ஸ்டோரி
திருமண சிக்கல்... தீர்த்துவைத்த தோழன்!

அவள் விகடன் 18-ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட 18 பவுன் தங்கம் மெகா பரிசுப்

திருமண சிக்கல்... தீர்த்துவைத்த தோழன்!

போட்டிகளில், ‘நானும் அவளும்/அவனும்’ போட்டியின் (போட்டி எண் - 12) வெற்றியாளர், சென்னையைச் சேர்ந்த ஜி.தேவிப்ரியா. இவருடைய வாழ்க்கை அனுபவம் இதோ...

ன் முகம் மட்டும் மலராமல், நெஞ்சமும் மலரும்படியான உள்ளன்பு கொண்டவன், என் நண்பன் ராஜராஜன்.

என்னுடைய 15 வயதில் என் தந்தையை இழந்த எனக்கு, அப்போது 27 வயது. தொடர்ந்து வரன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எதுவும் அமைவதாக இல்லை. இந்தச் சூழ்நிலையில், நான் பதிவுத்துறை அலுவலகத்தில், ஒரு பத்திர எழுத்தரிடம் கணினி தட்டச்சராகப் பணிபுரிந்தேன். அங்கு இரண்டு தோழிகளும், ஒரு தோழனும் கிடைக்கப்பெற்றேன். அந்தத் தோழன்தான், ராஜராஜன்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமண சிக்கல்... தீர்த்துவைத்த தோழன்!

உற்றார், உறவினர் என எந்த உதவியும் இல்லாத சூழலில், ஒரு கட்டத்தில் நான் என் திருமணத்தை மறந்துவிட்டேன். நாட்கள், வருடங்கள் நகர்ந்துகொண்டே இருந்தன. அப்போது என் ஒரே ஆறுதல், நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருந்த எங்கள் நட்புதான். என் நண்பன் எனக்கு ஊக்கம் கொடுத்து, வாழ்வில் நன்மை, தீமைகளைக் கடந்து செல்லும் பக்குவம் பயிற்றுவித்தான். சொல்லப்போனால், சிறுவயதிலேயே நான் தொலைத்த என் அப்பாவின் ஸ்தானத்தை, அவன் நிரப்புவதாக உணர்ந்தேன். அதனாலேயே அவனை நான் ‘அப்ஸ்’ என்று அழைக்க ஆரம்பித்தேன். என் தோழிகள்கூட என்னிடம், ‘உங்கப்பா எங்க காணோம்?’ என்றுதான் அவனைப் பற்றிப் பேசுவார்கள்.

எங்களின் நட்புக்கு மூன்று வயதாகியிருந்தது. அந்நேரத்தில், எனக்கு ஒரு வரன் அமைந்திருந்தது. என் நிச்சயதார்த்த வேலைகளை நானே பார்த்துக்கொள்ளும் சூழல். இதற்கிடையே மாப்பிள்ளை, பெண் வீட்டுத் தரப்பினர் ‘உங்க தரப்புல இருந்து கல்யாணத்துக்கு எத்தனை பேர் வருவீங்க?’ என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டோம். மதுரையில் நடக்கவிருந்த எங்கள் திருமணத்துக்கு, திருச்சியில் இருந்து பெண் வீட்டினர் வர ஒரு வேன் ஏற்பாடு செய்துகொடுத்தால் போதும் என்று நாங்கள் தகவல் தெரிவித்தோம்.

நிச்சயதார்த்த நாள் வந்தது. விருந்து, உபசரணை என்று கலகலவெனக் கழிந்த விழாவுக்கு, என் தோழனால் வர முடியவில்லை. அன்று அவனுடைய மற்றொரு உற்ற நண்பரின் திருமணம் இருந்ததால், அங்கு சென்றுவிட்டான். நிச்சயம் முடிந்து மாப்பிள்ளை வீட்டாரை வழியனுப்பும் முன், நான் என் சித்தி, சித்தப்பாவின் மூலம் ஒரு விண்ணப்பத்தை அவர்களிடம் தெரிவித்தேன். யாதெனில், திருமணத்துக்கு அழைக்க வேண்டியவர்களின் பட்டியல் தவிர்க்க முடியாமல் நீள்கிறது என்பதால், ஒரு பேருந்தை ஏற்பாடு செய்துதரச்சொல்லி கேட்டோம்.

மாப்பிள்ளை வீட்டார், ‘நீங்கள் முதல்ல வேன்தானே கேட்டீங்க? இப்போ என்ன பஸ்னு மாத்திப் பேசுறீங்க?’ என்று கேட்க, அதற்கு எங்கள் தரப்பில் இருந்து சற்று வேகமாக பதில் சொல்ல, அதை மாப்பிள்ளை வீட்டார் வேறுவிதமாகப் புரிந்துகொள்ள, என வாய்ப்பேச்சு முற்றியது. மாப்பிள்ளை வீட்டினர், ஏதோ முறித்துக்கொண்டு போவதுபோல கிளம்ப ஆரம்பித்தார்கள். 31 வயதில் கைகூடி வந்த திருமணமும் கவலைக்கிடமானதில் நான் விரக்தி அடைந்தேன். அழுதுகொண்டிருந்தவளிடம், ‘நான் உன் கழுத்தில் தாலி கட்டுவேன்’ என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினார், மாப்பிள்ளை. ஆனாலும் எனக்கு நம்பிக்கை இல்லை.

அடுத்த நாள் முதல் வழக்கமாகப் பணிக்குச் செல்ல ஆரம்பித்தேன். என் தோழிகள் மூலம் நடந்தவற்றைக் கேட்டறிந்த என் நண்பன், எனக்காக மிகவும் வருந்தினாலும் அதை என்னிடம் காட்டிக்கொள்ளாமல் நம்பிக்கையாகப் பேசினான். பெங்களூரில் பணிபுரிந்த மாப்பிள்ளையின் தொலைபேசி எண்ணை என்னிடம் கேட்டு வாங்கினான். பின்னர், ‘நான் உன் ஃப்ரெண்ட்னு என்னை மாப்பிள்ளைகிட்ட அறிமுகப்படுத்திட்டு போன்ல பேசினேன். ரெண்டுபேரும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம். எல்லாம் நல்லபடியா நடக்கும்’ என்றான். என்றாலும், இன்றுவரை அவன் அப்படி என்னைப் பற்றி அவரிடம் என்ன பேசினான் என்பதைக் கூறவில்லை.

திருமண சிக்கல்... தீர்த்துவைத்த தோழன்!

இரண்டு வாரங்களில், மாப்பிள்ளையின் அண்ணன் என் அலுவலகத்துக்குப் போன் செய்தார். ‘சரி, இப்போ உங்க வீட்டுல என்னதான் சொல்றாங்க?’ என்றார். எங்கள் வீட்டில் முடிவுகள் எடுப்பது நான்தான் என்பதால், ‘திருமணப் பேச்சில் மனஸ்தாபம் ஏற்படுறது சகஜம்தான். உங்களுக்கு சம்மதம்னா தொடர்ந்து ஏற்பாட்டைச் செய்யுங்க’ என்றேன். பிறகு மாப்பிள்ளை வீட்டார் கலந்து பேசி, கல்யாண வேலைகளை ஆரம்பித்தனர். பெண் வீட்டாருக்குப் பேருந்து ஏற்பாடும் செய்து கொடுத்தனர். மதுரை, இம்மையில் நன்மை தருவார் கோயிலில் எங்கள் திருமணம் சுபமாக முடிந்தது.

என் தோழனை என் அப்பாவின் ஸ்தானத்தில் நான் வைத்ததுக்கு, நியாயம் செய்துவிட்டான் அவன். ஒரு தந்தையின் பொறுப்புடனும், அக்கறையுடனும் சிக்கலைத் தீர்த்து, என் திருமணம் நடந்தேற அவன் முக்கியக் காரணமாக இருந்ததில் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் எனக்கு.

என் கணவர் பற்றியும் சொல்லியாக வேண்டும். பொதுவாக, ஒரு பெண் சாதாரணமாக ஒரு ஆணிடம் பேசினாலே தவறாக நினைக்கும், தன் காதலி, மனைவிக்கு ஆண் நண்பர்கள் இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடும் குறுகிய எண்ணமும் கொண்டிருக்கும் ஆண்களுக்கு மத்தியில், என் கணவர் கணபதி ஒரு ஜெம். மேலும், தான் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் நண்பன் என்று ஒருவன் போனில் அழைத்துப் பேசும்போது, மரியாதை கொடுத்து அவன் சொற்களை காதுகளில் வாங்கி, இதயத்தில் இருத்திக்கொண்ட அவரின் புரிதல், எங்கள் இல்லற வாழ்வின் அழகான ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.

என் தோழன், இன்று எனக்கு மட்டுமல்ல, என் கணவருக்கும் தோழன்! நன்றிகள்... கணவருக்கும், தோழனுக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism