Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

Published:Updated:
கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!

‘‘எனக்குக் குடும்பம்தான் சொர்க்கம்!’’

லைஞர் டி.வி ‘மூவி ஸ்பெஷல்’, `இசையருவி'யில் `விஜே’ என செம பிஸி சுமையா கௌஸர்.

கேபிள் கலாட்டா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘நான் பிஸியெல்லாம் இல்ல, ஜஸ்ட் கேஷுவல். எனக்கு ஸீன் போடுறவங்களைப் பிடிக்காது, ஸீன்

கேபிள் கலாட்டா!

போடவும் பிடிக்காது. எங்க குடும்பம், பெரிய்ய்ய்ய குடும்பம். எப்பவும் என்னைச் சுத்தி 15 பேர் இருப்பாங்க. அப்பா, ட்ரான்ஸ்போர்ட் மேனேஜர். அம்மா, பியூட்டிஷியன். நான் பி.டெக் பட்டதாரி. ஒரு பிபிஓ-ல நைட் ஷிஃப்ட் வேலை கிடைச்சது. ‘அய்யய்யோ வேண்டாம்’னு அலறினாங்க வீட்டுல. அவ்ளோ பத்திரமா பார்த்துக்கிறாங்களாம்! மீடியாவுக்கும் சண்டைபோட்டு, சமாதானம் செஞ்சுதான் `ஓ.கே' வாங்கினேன். டைம் கிடைச்சா தியேட்டர் கிளம்பிடுவேன். இருந்தாலும், என் குடும்பம்தான் எனக்கு சொர்க்கம்!’’

எங்கள் வீட்டில் எல்லா நாளும்... லா ல லா!

‘‘கல்யாணத்துக்கு அப்புறம்தான் கரியர் ஆரம்பமாச்சு!’’

யக்குநர் பாலுமகேந்திராவின் கடைசிப் படமான ‘தலைமுறைகள்’ திரைப்படத்தின் நாயகி, விஜய் டி.வி ‘ஆண்டாள் அழகர்’ சீரியலின் இரண்டு நாயகிகளுள் ஒருவர், ரம்யா ஷங்கர்.

கேபிள் கலாட்டா!

‘‘பொதுவா பொண்ணுங்களுக்கு கல்யாணத்துக்கு அப்புறம் கரியர் தத்தளிக்க ஆரம்பிச்சிடும். ஆனா, எனக்கு திருமணத்துக்கு அப்புறம்தான் கரியர் ஆரம்பம்னே சொல்லலாம். என் கணவர் புரொஃபஷனல் போட்டோகிராஃபர். செம சப்போர்ட் எனக்கு. சீரியல்களைப் பொறுத்தவரை, என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தாதான் கமிட் ஆவேன். ‘ஆண்டாள் அழகர்’ல கூட லிமிட்டட் கேரக்டர்கள், ஒவ்வொண்ணும் முக்கியத்துவம் வாய்ந்ததா இருக்கும். இந்தி சீரியல்களை தமிழ்ல டப் பண்ற ட்ரெண்ட் எனக்குப் பிடிக்கவே இல்லை. இதை இப்படியேவிட்டா, நம்ம சீரியல் நடிகர்களுக்கு கலை வாழ்க்கையே இல்லாமப் போயிடும். அந்த நிலைமையை மாத்தணும்!’’

மாற்றம், முன்னேற்றம், ரம்யா!

அர்ஜுனுக்கு டும்டும்டும்!

விஜய் டி.வி ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் ‘அர்ஜுனாக’ பல பெண்களின் மனதை ஷூட் செய்யும் அமித் பார்கவ்வுக்கும், புதுயுகம் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி ரஞ்சனிக்கும் விரைவில் காதல் திருமணம். புது மாப்பிள்ளையிடம், ‘என்ன பாஸ்..?!’ என்றால் வெட்கச் சிரிப்புச் சிரிக்கிறார்...

கேபிள் கலாட்டா!

‘‘நானும் ரஞ்சனியும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். ஒரு கட்டத்துல, ரெண்டு பேருக்கு இடையில் பல விஷயங்கள் ஒத்துப்போவதை உணர்ந்தோம். அப்புறம் என்ன, டூயட்தான். ஒன்றரை வருஷமா காதலித்து வந்தோம். ரெண்டு பேர் வீட்டிலும் க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாங்க. ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம். எனக்கு சீரியல், சினிமா கமிட்மென்ட்கள் இருக்கு. ரஞ்சனி, விரைவில் `ஆர்.ஜே’ ஆகப் போறாங்க. இந்த நிமிஷம் லைஃப் ரொம்ப அழகா இருக்கு!’’

காதல் முதல் காதல்வரை!

மனதில் நிற்கும் `ஈஸ்வரி'!

ன் டி.வி `பிரியமானவள்’ சீரியலில் ‘ஈஸ்வரி’யாகக் கலக்கிக்கொண்டிருக்கிறார், எலிசபெத்.

கேபிள் கலாட்டா!

‘‘பிறந்தது கேரளா. காஞ்சிபுரத்துல ஃபேமிலி செட்டில் ஆக, இன்ஜினீயரிங் முடிச்சேன். கல்யாணத்துக்கு அப்புறம் சென்னை வாசம். எதேச்சையா ‘எம் மகன்’  படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அப்படியே, இதுவரை 70 படங்கள்ல நடிச்சிட்டேன். பிறகு, விஜய் டி.வி ‘புதுக்கவிதை’ சீரியல் வாய்ப்பு கிடைச்சது. அடுத்து சன் டி.வி ‘சொந்த பந்தம்’, ‘பிரியமானவள்’, ‘சந்திரலேகா’, விஜய் டி.வி ‘கல்யாணம் முதல் காதல் வரை’னு கரியர் ஜோரா போயிட்டிருக்கு. ‘பிரியமானவள்’ ‘ஈஸ்வரி’ ரோல், எனக்கு பெரிய பெயர் வாங்கிக்கொடுத்திருக்கு. என் மாமியார், மாமனார், கணவருக்கு மீடியா பத்தி பெருசா தெரியலைன்னாலும், எனக்கு முழுக்க சப்போர்ட்டிவா இருக்காங்க. இப்போ, `வென்று வருவான்'ங்கிற படத்துல

கண்பார்வையற்ற பெண்ணா நடிச்சிருக்கேன். அந்தப் படம் எனக்கு திருப்புமுனையா அமையும்!’’

சூப்பர் ஜி சூப்பர் ஜி!

மல்டி பெர்ஃபார்மர் சபரீஸ்வரன்!

சின்னத்திரை நடிகர் சபரீஸ்வரன், சொற்பொழிவாற்றுவது, கல்லூரியில் வகுப்பெடுப்பது என மல்டி பெர்ஃபார்மராகக் கலக்குகிறார்.

‘‘என் சொந்த ஊர் சேலம். விஸ்காம் படிச்சுட்டு, ராதிகா மேடத்தோட ராடான் டி.வி-யில அசிஸ்டன்ட் புராஜெக்ட் எக்ஸிக்யூட்டிவா சேர்ந்தேன். அப்படியே இந்த எட்டு வருஷத்துல பல டெலிவிஷன் கம்பெனிகளில் வேலை பார்த்துட்டேன். கடைசியா ரம்யா கிருஷ்ணன் மேடத்தோட ‘னிவாசா விஷுவல் கம்பெனி’யில கிரியேட்டிவ் டைரக்டரா வேலை செஞ்சப்போ, சன் டி.வி ‘தங்கம்’ சீரியல்ல நடிக்க ரம்யா மேம் சான்ஸ் கொடுத்தாங்க. அந்த சீரியலுக்காக ஃபிலிம் ஃபேன்ஸ் அசோஸியேஷனோட ‘பெஸ்ட் காமெடியன்’ விருது கிடைச்சது. தொடந்து சன் டி.வி ‘தென்றல்’, புதுயுகம், கலைஞர் டி.வி சீரியல்கள்னு நடிச்சேன். இப்போ சன் டி.வி ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’, பொதிகையில் ‘நிழல்’னு நடிச்சிட்டு இருக்கேன்’’ என்பவர்,

கேபிள் கலாட்டா!

‘‘என் தாத்தா வி.கே.நாகரத்தினம், இலக்கிய சொற்பொழிவாளர். அந்த ஜீன்ல, ஆர்வத்துல எனக்கு மகாபாரதத்துல பெரிய ஈடுபாடு ஏற்பட, லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற இடங்களில்

மூணு மணி நேரம் தொடர்ந்து மகாபாரதம் சொற்பொழிவாற்றிட்டு இருக்கேன். என் பேச்சாற்றலை பார்த்து லயோலா காலேஜ்ல பார்ட் டைம்மா புரொஃபசர் வேலை தந்திருக்காங்க. இப்போ அங்க மூவி மேக்கிங் ஸ்டூடன்ட்ஸுக்கு ‘ரைட்டிங் ஃபார் மூவிஸ்’ என்ற சப்ஜெக்ட் எடுத்துட்டு இருக்கேன். வீட்டில் மனைவி, குழந்தைகள், செல்லமா வளர்க்கிற கிளி அம்ரெல்லா காக்கட்டுனு, சபரீஸ்வரன் ஹேப்பி!’’

சொற்பொழிவை சீக்கிரமா முடிச்சிட்டார்!

ரிமோட் ரீட்டா, படங்கள்:  ரா.வருண் பிரசாத்

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:ரூ 150

தொற்றிக்கொள்ளும் குதூகலம்!

`‘ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியில் ‘திருக்குறள் சுற்று’ பிரமாதமாக உள்ளது. சின்னஞ்சிறார்கள் அழுத்தம் திருத்தமாக திருக்குறளைச் சொல்வதும், அதன் பொருளை உரைப்பதும் அருமை! பார்வையாளராக அமர்ந்திருக்கும் குழந்தைகளும் திருக்குறளைப் பற்றிய நிறைய விஷயங்களை இனிமையாக பகிர்ந்துகொள்கிறார்கள். தமிழில் புதிய புதிய வார்த்தைகளை குழந்தைகள் உற்சாகமாகக் கண்டுபிடித்து சொல்லும் போது, நமக்குள்ளும் அந்த குதூகலம் தொற்றிக்கொள்கிறது’’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் பாண்டிச்சேரியில் இருந்து அனுராதா ரமேஷ்.

டூ இன் ஒன் கலக்கல்!

``புதுயுகம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு இடையிடையே ‘நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெய்லு’ என்னும் தலைப்பில் பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகளை பொதுமக்களிடம் கேட்டு அவர்கள் கூறும் பலதரப்பட்ட பதில்களையும் நமக்குத் தருகிறார்கள். இறுதியில் சரியான பதிலையும், அளிக்கிறார்கள். பொழுதுபோக்கு ப்ளஸ் பொது அறிவு என `டூ இன் ஒன்’னாக கலக்கும் புதுயுகம் தொலைக்காட்சிக்கு வாழ்த்துகள்!’’ என்று பாராட்டுகிறார் சேலத்தில் இருந்து பி.அமுதா.

சாக்லேட் விளம்பரம்... சபாஷ்!

``தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சாக்லேட் விளம்பரத்தில், பொம்மலாட்டக் கலையை மையமாக வைத்து அன்பை வெளிப்படுத்திக் காட்டுவது மனதை மகிழ்விக்கிறது. பாரம்பர்யக் கலைகளை அழிவில் இருந்து காக்க இதுபோன்ற விளம்பரங்கள் உறுதுணையாக இருக்கும்’’ என்று அக்கறையுடன் குறிப்பிடுகிறார் திருநெல்வேலியில் இருந்து  ஆர்.ஜெயலட்சுமி.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism