Published:Updated:

கதை கதையாம் காரணமாம்... 2

கதை கதையாம் காரணமாம்... 2
பிரீமியம் ஸ்டோரி
கதை கதையாம் காரணமாம்... 2

கதை கதையாம் காரணமாம்... 2

கதை கதையாம் காரணமாம்... 2

கதை கதையாம் காரணமாம்... 2

Published:Updated:
கதை கதையாம் காரணமாம்... 2
பிரீமியம் ஸ்டோரி
கதை கதையாம் காரணமாம்... 2

வயதுக்கேற்ற கதைகள்!

குழந்தைகளின் க்ளோஸ் ஃப்ரெண்ட் யார் தெரியுமா? பக்கத்து வீட்டு ஆகாஷோ, எதிர் வீட்டு தீக்ஷிதாவோ இல்லை. இவர்கள் எல்லோரையும்விட அவர்களுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்... கதை.

நம்பிக்கை இல்லையா? உங்கள் குழந்தை ஆகாஷிடமும் தீக்ஷிதாவுடனும் பேசும்போது தூரத்திலிருந்து

கதை கதையாம் காரணமாம்... 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கவனித்துப் பாருங்கள். அது தன் பிஞ்சுக் கைகளை ஆட்டி ஆட்டி, தரையைத் தட்டி, பலவித முகபாவனைகளோடு ஏதேனும் ஒரு கதையைத்தான் சொல்லிக்கொண்டிருக்கும். வயதை மறந்து குழந்தைகள் உலகத்துக்குச் செல்ல ஆர்வமிருந்தால், ஒருமுறை அந்தக் கதை சொல்லலில் இணைந்துகொள்ளுங்கள். நீங்கள் துணி துவைத்தபோது நகர்ந்து சென்ற சோப்புநுரையில் உருவான கதையாக அது இருக்கலாம்; பள்ளிக்கு அவர்களை வண்டியில் அழைத்துச் சென்றபோது எதிரே வந்த பெரிய லாரி அந்தக் கதையிலும் வரலாம்; பாட்டி வீட்டில் மொட்டை மாடியில் நின்று பார்த்து விமானம் பற்றிய சயின்ஸ் ஃபிக்‌ஷன்கூட உருவாகிக்கொண்டிருக்கலாம். குழந்தைகள் தாம் கவனிப்பதை எல்லாம் கதையாக மாற்றிவிடும் வரமான மனதுக்காரர்கள். அவர்களின் இந்த ஆர்வத்தை மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

கதை கதையாம் காரணமாம்... 2

குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பழக்கமுடைய பெற்றோர்களுக்கு ஒரு சபாஷ். ‘நானும் சொல்லத்தான் நினைப்பேன். என்ன சொல்றது, எப்படிச் சொல்றதுனு தெரியாம, ரெண்டு நாளைக்கு ஏதோ ஒண்ணைச் சொல்லிட்டு விட்டுடுவேன்’ என்பவர்களை, அன்போடு வரவேற்கிறோம்.

உங்கள் குழந்தையைப் பற்றி உங்களைவிட அதிகம் தெரிந்தவர் யாருமில்லை. அதுதான் உங்களை மிகச்சிறந்த கதைசொல்லியாக மாற்றப்போகிறது. கதையை, ஒரே விதத்தில் எல்லா வயதுக் குழந்தைகளுக்கும் சொல்லக்கூடாது. அப்படிச் சொல்லும்போது அவர்கள் சீக்கிரத்தில் சோர்ந்துபோவார்கள். உடனே, இருக்கவே இருக்கிறது நீதிக் கதைகள் என்று ஆரம்பித்துவிடாதீர்கள். அது உங்களையும் சோர்ந்துபோக வைத்துவிடும். கதையை முடித்துவிட்டு, ‘இதிலிருக்கும் நீதி என்ன?’ என்று கேட்கத் தொடங்கும்போது கதையின் கழுத்து நெரிக்கப்படுகிறது. கதைக்குள் நீதி இருந்தால், குழந்தைகளே தேடிக் கண்டடையட்டும்.

கதை கதையாம் காரணமாம்... 2

கதை சொல்லும் வசதிக்கு, குழந்தைகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துக்கொள்வோம், பின்வருமாறு...

ஐந்து வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு மிகக் குறைந்த சொற்களே தெரிந்திருக்கும். அதில் சில சொற்களுக்கு பொருள் தெரியாமலே சொல்லிவருவார்கள். அவர்களுக்குக் கூறும் கதைகளில் அந்தச் சொல்வங்கியை அதிகம் மீறாமல் கூற வேண்டும். சொற்கள் போலவே உறவுகள், பார்த்திருக்கும் காட்சிகள், மனிதர்கள் என ஓர் எல்லைக்கு உட்பட்டே கதை சொல்ல வேண்டும். கதையோட்டத்தில் ஏதேனும் சொல் வந்தால் புரிந்துகொள்வார்கள்; சட்டென்று நினைவுபடுத்திப் பார்க்க முடியாத கதாபாத்திரத்தை நுழைத்தால், கதையிலிருந்து சற்று வெளிவந்துவிடுவார்கள். லாஜிக்கை எதிர்பார்க்காது, பொது இயல்புக்கு மீறிய சாகச கதைகளை விரும்புவார்கள் என்றாலும் டி.வி-யில் செய்தி வாசிப்பதுபோல ஆடாமல் அசையாமல் சொன்னால், ‘போதும் மம்மி, எனக்கு போகோ சேனலைப் போடுங்க’ என்று சொல்லிவிடுவார்கள். உங்கள் கதையில் வரும் பச்சைக்கிளி சிவப்பாகக்கூட இருக்கலாம். ஆனால், உங்கள் கைகள் கிளியின் றெக்கையாக மாறியிருக்க வேண்டும். சிங்கம், எலியைத் தேடும்போது உங்களின் கண்களில் அந்தத் தேடலைக் கொண்டுவர வேண்டும். உங்கள் குரலிலிருந்து புலியும், நரியும், நாயும் ஒலிக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், கதையின் காட்சிகளை நிகழ்த்திக்காட்ட வேண்டும். 

11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அடுத்த பிரிவு. இவர்களின் சொல் வங்கி, முந்தைய பிரிவினரைக் காட்டிலும் அதிகம். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பல சம்பவங்கள் தெரியவந்திருக்கும். இவர்கள் கேட்கும் கதையில், லாஜிக்கை காரணத்தோடு மீற வேண்டும் என நினைப்பார்கள். உதாரணமாக, ஒரு சிங்கம் டவுன்பஸ்ஸில் போகிறது என்று சொன்னால், ‘சிங்கம் எப்படி டவுன் பஸ்ஸில் போகும்?’ என்ற லாஜிக்கைவிட, ‘சிங்கம் ஏன் டவுன் பஸ்ஸில் போகுது?’ என்று அந்த லாஜிக்கை மீறுவதற்கான காரணமே அவர்களின் எதிர்பார்ப்பு.

கதை கதையாம் காரணமாம்... 2

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர் களுக்கு கதைசொல்வது மிகுந்த சவாலானது. இப்போது அவர்கள் தனியாக நண்பர்களின் வீடுகளுக்கு, கடைகளுக்கும் செல்பவர்களாக இருப்பார்கள். பெற்றோருடன் வெளியே செல்வதற்கும், தனியாகச் செல்வதற்குமான வித்தியாசத்தை உணரும் பருவம். அவர்களுக்கு பாடத்திலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஏராளமான விஷயங்கள் கிடைத்த வண்ணம் இருக்கும். அவர்களுக்கான கதைசொல்லலில் லாஜிக் உடையாமல், கரு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். ‘இந்த வயசுல கதையெல்லாம் கேட்கமாட்டாங்க’ என்று நினைக்கலாம். ஆனால், மூளைக்கு வேலைவைக்கும் புதிர் கதைகள் மற்றும் பரபரப்பான துப்பறியும் கதைகளை இவர்கள் விரும்புவார்கள். அவர்களுக்கு கதைப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தித் தரலாம்; வீட்டில் இருக்கும் குட்டித் தம்பி,

தங்கைக்கு இவர்களையே கதை சொல்ல வைக்கலாம்.

இந்த மூன்று பிரிவுகளில், உங்கள் குழந்தை எந்தப் பிரிவு என்று அறிந்து, அதற்கேற்ற கதைகளை அவர்களுக்கு உருவாக்கிச் சொல்லுங்கள்!

ஓ.கே... பெற்றோருக்கான ‘ஸ்டோரி டெல்லிங்’ பயிற்சிக்கு செல்வோமா..?! 

வேப்ப மரம், அணில், முயல், ரெட்டை ஜடை சிறுமி, குரங்கு, ஏலியன்ஸ், சாக்பீஸ்... இந்த ஏழு கேரக்டர்களும் வரும் ஒரு கதையை உருவாக்கி உங்கள் குழந்தைக்குச் சொல்லுங்கள் பார்ப்போம்!

விஷ்ணுபுரம் சரவணன்

அம்மா சொல்லும் கதை... அமுதம்!

வே
லு சரவணன், சிறுவர் நாடகக் கலைஞர். 20 வருடங்களாக கதை சொல்லல், நாடகம் என குழந்தைகளுக்காக, குழந்தைகளோடு பணியாற்றி வருபவர். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.

“வானரப்பேட்டைனு ஒரு ஊர்ல, அங்கன்வாடியில் நாடகம்போட போயிருந்தோம். ரெண்டு, மூணு வயது குழந்தைகள் நிறைஞ்சிருந்தாங்க. கோமாளி வேஷம் போட்டுட்டுப் போன என்னைப் பார்த்து மிரண்டு ஒரு குழந்தை அழ ஆரம்பிச்சிருச்சு. சுற்றியிருந்தவங்க, ‘குழந்தையைப் பயமுறுத்திறியே’னு என்னைத் திட்ட ஆரம்பிக்க, பூதம் வேஷம் போட்டிருந்தவர் ஸ்கூல்குள்ளேயே வரமாட்டேன்னு சொல்லிட்டார்.

கதை கதையாம் காரணமாம்... 2

அழுத குழந்தையை சமாதானம் செய்ய முடியாததால, ஸ்கூல் வெளியே ஜன்னலோரமாக தூக்கிட்டுப் போனாங்க. நான் ஒரே ஆளா நாடகத்தை நடிச்சேன். அதை ஜன்னல் வழியா பார்த்த அந்தக் குழந்தையோட அழுகை நின்னு, சிரிக்க ஆரம்பிச்சது. இதை என்னோட வெற்றியா சொல்லலை. ஒரு நல்ல கதை, குழந்தையோட மனசுக்கு எத்தனை நெருக்கமா வினைபுரிய வல்லதுங்கறதைத்தான் சொல்ல வர்றேன்.

பெற்றோர் ஏன் குழந்தைகளுக்குக் கதை சொல்லணும்..?

சாப்பாடு எங்க வேணும்னாலும் கிடைக்கும். ஆனா, அம்மா கையால ஊட்டிவிடும்போது, அது வெறும் சாப்பாடு மட்டுமா என்ன? அதுபோல அப்பா, அம்மாகிட்ட கதைகேட்கும்போது குழந்தைக்குக் கிடைக்கிற சுதந்திரமும், மகிழ்ச்சியும், தெளிவும், அரவணைப்பும் இணையில்லாதது. உறவுகளை உணர்வுபூர்வமா அவங்களுக்கு அறிமுகப்படுத்த கதைகள்போல வேறெதுவும் உதவாது.

கதைகளைப் புத்தகத்துல, நெட்ல தேடாதீங்க. நீங்கதான் அவங்க கதைகளுக்கான நூலகம். உங்க வாழ்க்கையில் இருக்கிற சிறந்த கதைகளை, குழந்தைகளுக்குச் சொல்லுங்க. அதைவிட பெரிய பரிசை அவங்களுக்கு உங்களால கொடுக்க முடியாது” என்கிறார் வேலு சரவணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism