ஆளுமையை வளர்க்க அருமையான வழிகாட்டி!

பெண்களுக்கு அழகை விட முக்கியம்... ஆளுமை. அதை வளர்த்துக்கொள்ளஇந்த இதழ் `ஒரு டஜன் யோசனைகள்' பகுதியில் ஆலோசனைகள் வழங்கு கிறார், பிரபல பேச்சாளர் பாரதி பாஸ்கர்.

ஒரு டஜன் யோசனைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோற்றத்தில் கவனம்!

ஆளுமையைப் பொறுத்தவரை தோற்றம் முதன்மையானது. தோற்றம் என்பது வேறு, தோற்றப் பொலிவு என்பது வேறு. அணியும் ஆடையானது ஃபேஷன் என்பதைத் தாண்டி... இடம், சூழலுக்குத் தகுந்தபடியும், மற்றவர்களின் கண் களை உறுத்தாதவாறும், உங்கள் உடல்வாகுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும். அப்படிப் பொருத்தமான ஆடை அணியும்போது இயற்கை யாகவே ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும். மற்றவர்களிடம் உங் களுக்கான மரியாதையை ஆடையும் பெற்றுத்தரும். 

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறியுங்கள்!

ஆளுமையை வளர்க்க, முதலில் தகர்த்தெறிய வேண்டியது தாழ்வு மனப்பான்மை. பெரும்பாலான பெண்கள் ‘நாம சொன்னா அது சரியா இருக்குமா? மத்தவங்க கேட்பாங்களா?’ என்று தாங்கள் நினைப்பதை வெளியில் கூறத் தயங்குவார்கள். சமுதாய நிகழ்வுகளில் நீங்கள் அப்டேட்டடாக இருக்கும்போது, இந்தத் தயக்கத்தைத் தூக்கி எறியும் தன்னம்பிக்கை தானாகக் கிடைக்கும்.

வாசிப்பு அவசியம்!

டி.வி-யின் ஆதிக்கத்தால், இன்று பெண்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்துள்ளது. பொழுதை வீணாகக் கழிக்கும் சீரியல்களில் இருந்து விடுபட்டு... செய்தித்தாள், புத்தகங்கள் என்று வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள். ஆளு மைத்திறன் எல்லாம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விஷயம் என்று நினைக்கும் இல்லத்தரசிகளே... உங்கள் குடும்பத்தை, உறவுகளை, நட்பை அரவணைத்துச் செல்வ திலும், வீட்டு நிர்வாகத்திலும் அசத்தலாக வெளிப்படுத்தலாம் உங்கள் ஆளுமையை! அது அவசியமானதும்கூட.

கேலிகளை அனுமதிக்காதீர்கள்!

கணவர், குழந்தை என வீட்டிலோ... அலுவலகத்தில் நெருங்கிய தோழியோகூட `ஜாலி கேலி' என்ற பெயரில்

ஒரு டஜன் யோசனைகள்!

உங்களின் சுயமரியாதையைச் சிதைப்பதை அனுமதிக்கா தீர்கள். அவர்களின் எல்லையையும், உங்களின் எதிர்ப்பையும் நாசூக்காக, பேசுபவர்களின் மனம் புண்படாதவாறு புரியவையுங்கள்.

நேர மேலாண்மை!

ஆளுமைத்திறனை கைகொள் வது, நேர மேலாண்மையில்தான் உள்ளது. ஆயிரம் வேலைகள் இருந்தாலும், நேரத்தைத் திட்டமிட்டு பயன்படுத்தும்போது விரயமாகும் நேரம் சேமிக்கப்படும், வேலை சீக்கிரம் முடியும், வெற்றி வசமாகும். மேலும், நேர மேலாண்மை மற்றவர் களிடம் உங்களுக்கான மதிப்பையும் உயர்த்தும்.

இட மேலாண்மை!

பெரும்பாலும் நேர மேலாண் மையைப் பின்பற்ற முடியாமல் போவ தற்கான காரணம், பொருட்களை கண்ட இடங்களில் போட்டுவிட்டு தேவைப்படும் நேரத்தில் அதைத் தேடி மணித்துளிகளை வீணாக்குவது தான். வீடு, அலுவலகம் என்று எங்கும் பொருட்களை அதற்கு உண்டான இடங்களில் மாற்றாமல் வைத்து, எடுத்துப் பயன்படுத்துங்கள். அது பதற்றத்தைக் குறைக்கும், செயல்திறனை அதிகரிக்கும்.

கற்றல் தொடரட்டும்!

உங்கள் துறை எதுவாக இருந்தா லும் அதில் உங்களை அப்டேட் செய்துகொண்டே இருந்தால்தான் அதில் வெற்றியாளராகத் தொடர்ந்து பயணிக்க முடியும். அப்போதுதான் புதிய கோணத்தில் உங்களால் செயல்பட முடியும். மேலும், `டெக்கி' விஷயங்களை, உங்களைவிட வயது குறைந்தவர்களாக இருந்தாலும், அதைப் பற்றித் தெரிந் தவர்களிடம் தயங்காமல் கேட்டுஅறிந்துகொள்ளுங்கள். கற்றுக் கொள்ளாமலேயே இருப்பதைவிட காலதாமதமாகக் கற்பது சிறந்தது. குடும்பம், வேலை என்று எவ்வளவு பரபரப்பு இருந்தாலும், கற்றலுக்கான நேரம் ஒதுக்குங்கள்.

கருத்துப் பரிமாற்றம்!

நீங்கள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்களுடைய கருத்து மற்றவர்களைச் சென்று சேர்வதில்தான் உங்களுடைய வெற்றி உள்ளது. ஆனால்... நினைத்ததை எல்லாம் பேசிவிடாமல், பேசும் சூழலுக்கு, முன் இருக்கும் நபருக்குப் பொருத்தமானவற்றை பேசுங்கள். மற்றவர்களிடம் பேசும்போது அவர்களின் கண்களை பார்த்துப் பேசுங்கள். தயக்கம் இருந்தால், தினமும் சில நிமிடங்கள் கண்ணாடியின் முன் நின்று பேசிப்பார்க்கலாம். உங்களுடைய கருத்து தவறாகிவிட்டால் தயங்காமல் மன்னிப்புக் கேளுங்கள். அது உங்களுடைய மதிப்பை இன்னும் உயர்த்தும்.

வாய்ப்பினைப் பயன்படுத்துங்கள்!

ஒரு டஜன் யோசனைகள்!

நிறைய பெண்கள் செய்யும் தவறு, வாய்ப்பு வரும்போது தயக்கத்தினால் அதைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பதுதான். ஒரு சிறிய வாய்ப்புகூட பெரிய அளவிலான உயர்வைத்தரும் என்பதால், மற்றவர்களின் விமர்சனங்களைப் பற்றி யோசிக்காமல் கைகளை உயர்த்துங்கள். ஒருவேளை அதில் நீங்கள் சரியாகச் செயல்பட முடியாமல் போனாலும்கூட, அதில் இருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

தொழில்நுட்பம் வேண்டும் தோழிகளே!

இந்த `டெக்கி' உலகத்தில் தொழில்நுட்பம் தெரியாமல் ஆளுமையுடன் செயல்பட முடியாது. ‘நான் பார்க்கும் வேலைக்கு அதெல்லாம் தேவையில்லை’ என்று நினைக்காமல், இல்லத்தரசிகளில் இருந்து அனைவருமே மெயில் அனுப்புவது, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது போன்ற அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கான நேரம்!

குடும்பம், வேலை என்று ஓடிக்கொண்டே இருந்தால் சலிப்பு ஏற்படும். உங்களுக்கே உங்களுக்கான ‘மீ டைம்’ உருவாக்கிக்கொள்ளுங்கள். பாட்டுக் கேட்பது, வரைவது, எழுது வது என்று அந்த நேரத்தில் உங் களுக்குப் பிடித்த வேலைகளை மட்டும் செய்யுங்கள். அது சலிப்பை அகற்றி மனதை மலர்த்தும். அந்தப் புத்துணர்வுடன் செயல்படும்போது ஆளுமை, தலைமைப் பண்பு எல்லாம் அதிகரிக்கும்.

மனதிருப்தி முக்கியம்!

பெண்களின் பெரிய குறை, தாங்கள் செய்யும் வேலைக்கான அங்கீகாரம், பாராட்டு யாராலும் தரப்படு வதில்லை என்பதுதான். உங்களின் ஒவ்வொரு செயல்பாட்டையும் நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். தொடர்ந்து வேலைகளை மனதிருப் தியுடனும், ஆர்வத்துடனும், தன்னம்பிக்கையுடனும் மேற்கொள் ளுங்கள். அப்போது வெளிப்படும் உங்களின் ஆளுமை மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தும்.

சு.சூர்யா கோமதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism