Published:Updated:

பிஞ்சுக் குழந்தைகள்... பாலியல் வன்முறைகள்!

பிஞ்சுக் குழந்தைகள்... பாலியல் வன்முறைகள்!
பிரீமியம் ஸ்டோரி
பிஞ்சுக் குழந்தைகள்... பாலியல் வன்முறைகள்!

விழிப்பு உணர்வு

பிஞ்சுக் குழந்தைகள்... பாலியல் வன்முறைகள்!

விழிப்பு உணர்வு

Published:Updated:
பிஞ்சுக் குழந்தைகள்... பாலியல் வன்முறைகள்!
பிரீமியம் ஸ்டோரி
பிஞ்சுக் குழந்தைகள்... பாலியல் வன்முறைகள்!

‘‘நம் கண்ணுக்குத் தெரியாமல் நம் வீட்டில், தெருவில் நடந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றி பலரும் அறியாமல் இருக்கிறோம். வன்முறை பெருகுவதற்கும், குற்றவாளிகள் துணிவதற்கும் அந்த அறியாமைதான் காரணம்’’ - வார்த்தைக்கு வார்த்தை கவனிக்கவைத்துப் பேசுகிறார், சென்னையில் உள்ள ‘துளிர்’ (`Tulir' - Centre for the Prevention and Healing of Child Sexua  Abuse) தன்னார்வ நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் மற்றும் நிறுவனர் வித்யா ரெட்டி.

பிஞ்சுக் குழந்தைகள்... பாலியல் வன்முறைகள்!

‘‘குழந்தைகளை பாலியல் பொருளாகப் பார்க்கும் மனநோய்... எங்கோ, யாருக்கோ இருப்பது என நினைக்க வேண்டாம். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளில் 50 சதவிகிதம் பேர், அவர்களது உற்றார், உறவினர்களாலேயே சீரழிக்கப்பட்டதாகக் கூறுகிறது, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தால் 2007-ல் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம்.

எங்கள் மையத்தில் கவுன்சலிங் பெற்று வரும் பெண் அவர். தன் 16 வயதில் அவர் வீட்டின் குடும்ப நண்பரால் தொடர்ந்து 6 மாதம் சீரழிக்கப்பட்டார். ஆனால், வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. காரணம் என்னவென்றால், ‘படிப்பே ஏற மாட்டேங்குது, இவளை மார்க் வாங்க வைக்கிறதுக்குள்ள நாங்க படுறபாடு...’ என்று அவள் அப்பாவும், அம்மாவும், அந்த நண்பரின் முன்னிலையில் இவரைத் திட்டியபடியே இருந்திருக்கிறார்கள். அந்தச் சூழலில் பெற்றோருக்கும் பெண்ணுக்கும் இருந்த இடைவெளியைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணை சீரழித்துவிட்டான். பெற்றோரிடம் சொன்னால் தன்னை நம்ப மாட்டார்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிஞ்சுக் குழந்தைகள்... பாலியல் வன்முறைகள்!

என்று பயந்த அந்தப் பெண் குழந்தை மவுனமாக இருந்துவிட்டாள்.

பொதுவாக, முன் பின் தெரியாதவர்களோடு குழந்தைகள் இயல்பாகப் பழகுவதில்லை. வீடு, பள்ளி ஆகிய இடங்களில் தங்களுக்குப் பழக்கமாகிறவர்களிடமே பழகுகிறார்கள். அந்த வட்டத்துக்குள்தான் பெரும்பாலான தவறுகள் நடக்கின்றன. அப்படி ஏதாவது நிகழ்ந்தால் அதைப் பெற்றோரிடம் வந்து சொல்லக்கூடிய ஒரு சூழல் குழந்தைகளுக்கு அமைய வேண்டியது அவசியம். ‘இதைச் சொன்னா அம்மா நம்மளைத் திட்டுவாங்களா?’ என்ற குழப்பம் அவர்கள் மனதில் நேராத அளவுக்கு, அம்மாக்கள் குழந்தைகளின் நம்பிக்கையான அன்புக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். மேலும், குழந்தை தன் உலக நிகழ்வுகளைப் பகிரவரும்போது, ‘எப்ப பாத்தாலும் தொணதொணன்னு...’ என்று வாயடக்கினால், பின்னர் எதைப்பற்றியும் அவர்கள் உங்களுடன் பகிராமல் தங்களைப் பூட்டிக்கொள்ளலாம்... பாலியல் தொந்தரவுகள் உட்பட.  

குழந்தை தனக்குத் தெரிந்த வார்த்தைகளில் தான் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்களைச் சொல்லவரும்போது, சில பெற்றோர், ‘அப்படி எல்லாம் இருக்காது, இது வேற என்னமோ சொல்லுது’ என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்கிறார்கள். உண்மையில், குழந்தைகளால் பாலியல் தொந்தரவுகளைக் கற்பனையில் யூகித்துப் புகார் செய்ய முடியாது என்பதை உணருங்கள். இவை ஆசிரியர்களுக்குமான கோரிக்கைகளே. பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவது ஆண் குழந்தைகளும்தான் என்பதையும் கவனத்தில் கொள்க’’ என்ற வித்யா, பாலியல் தீண்டலால் குழந்தைகள் எந்தளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்பதையும் சொன்னார்...

பிஞ்சுக் குழந்தைகள்... பாலியல் வன்முறைகள்!

‘‘பாலியல் சீண்டலுக்கு உண்டாகும் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையை உணர்வார்கள்.  சில குழந்தைகள், பருவமடைந்த பின்னர் அந்தச் சம்பவங்களை நினைத்துப் பார்க்கும்போது மிகுந்த அவமானம் அடைவதோடு, சிலருக்கு  மனச்சிதைவும் ஏற்படும்'' என்றவர் தொடர்ந்தார்...

``2007-ல் யுனிசெஃப் மற்றும் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இணைந்து நடத்திய ஆய்வில், இரண்டில் ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறது என்பது தெரியவந்தது. 2014-ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சுமார் 1,200 பதிவாகியுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளைப் பொறுத்தவரை, அவர்களை அநாவசியமாக காவல் நிலையம் அழைத்துச் செல்லக்கூடாது, ஓரிருமுறை நீதிமன்றத்துக்கு வந்தால் போதும், குற்றவாளியை நேரில் சந்திக்கத் தேவையில்லை என தற்போது நீதிமன்றங்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பலவகையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட குழந்தையிடம், அவர்கள் மனதைக் காயப்படுத்தும் வார்த்தைகளைக் கண்டிப்பாகப் பேசக்கூடாது. அவர்களை அன்போடும், நுணுக்கமான கவனத்தோடும் அணைத்தெடுக்க வேண்டும்’’

- அக்கறையுடன் முடித்தார், வித்யா ரெட்டி.

கட்டுரை மற்றும் படம்: ச.சந்திரமௌலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism