உலகம் கவனிக்கும் இரண்டு பெண் ஆளுமைகளின் அறிமுகம், இங்கே...

‘சின்னப் பெண்’ணின் விஸ்வரூபம்!

‘டைம்ஸ் பெர்சன் ஆஃப் த இயர்’ – உலகம் உன்னிப்பாக கவனிக்கும் ஓர் அங்கீகாரம் இது. 2015-ம் ஆண்டு அந்த கௌரவத்தைப் பெற்றவர், ஒரு பெண். ஜெர்மனியின் சான்ஸ்லர் (நாட்டின் அதிபர்) ஏஞ்சலா மெர்க்கெல். ஐரோப்பா முழுவதும் பொருளாதார மந்தநிலை இருந்தபோது, ஜெர்மனியைக் காப்பாற்றியவர் என போற்றப்படுபவர். புகழ்பெற்ற ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் பட்டியலிலும் 2015-ம் ஆண்டு இரண்டாவது இடம் பிடித்தார் மெர்க்கெல். இதுவரை எந்தப் பெண்ணுக்கும் கிடைக்காத அங்கீகாரம் இது.

ஏஞ்சலா பிறந்தது, ஜெர்மனியில் ஒரு சாதாரண குடும்பத்தில். கெமிஸ்ட்ரி ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்றவர், பின்னாளில் தீவிர அரசியலில் இறங்கினார். 1989-ம் ஆண்டில் ஜெர்மனியின் ‘ஜனநாயக

இயக்க’த்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பெண்கள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் துறை அமைச்சர் என படிப்படியாக வளர்ந்து, ஜெர்மனியின் முதல் பெண் வேந்தராக முன்னேறினார்.

‘தஸ் மாட்ச்சென்’ - ஏஞ்சலா மெர்க்கெல், முதன் முதலில் அமைச்சராகி அவைக்குள் நுழைந்தபோது, சக அமைச்சர்கள் அவரை இப்படித்தான் அழைத்தார்களாம். ஜெர்மன் மொழியில் அதற்கு ‘சின்னப் பெண்’ என்று அர்த்தம். இன்று அவர்தான் உலகின் சக்திவாய்ந்த ‘நம்பர் 1’ பெண்மணி!

ஸ்திரமான தலைமை, துணிச்சலான நடவடிக்கை, மிகச்சரியான முடிவுகளை எடுக்கும் திறன் என ஏஞ்சலாவை, மார்கரெட் தாட்சரோடு ஒப்பிடுகிறார்கள் ஜெர்மானியர்கள்.

‘தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சரி, சமூகத்துக்கும் சரி... பயம் ஒரு நல்ல துணை கிடையாது’ என்பார் மெர்க்கெல். ஒவ்வொரு பெண்ணும் மனதில் எழுத வேண்டிய வரி!

கலை மூலம் அரசியல் பேசும் பெண்!

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற தனுஷ், அடுத்து ஹாலிவுட்டில் நடிக்கவிருக்கிறார். ‘த ஃபகிர்’ என்ற அந்தப் படத்தின் பெரிய ஆச்சர்யம், தனுஷ் அல்ல. அதன் இயக்குநர் மார்ஜனா சத்ரபி என்ற பெண்.

ஈரானில் பிறந்த சத்ரபியின் பெற்றோர், மார்க்சிஸ்ட் ஆதரவாளர்கள். 1979-ல் ஈரானில் ஆட்சிக்கு வந்த அடிப்படைவாதிகளால் கைது, கொலை என்று சத்ரபியின் நண்பர்கள் சிதைக்கப்பட, அந்தச் சூழலில் சத்ரபியின் நிஜ ஹீரோவாக இருந்தார் அவருடைய மாமா அனூப். அரசியல் குற்றவாளியான அவர் நாட்டைவிட்டு வெளியே வாழ்ந்துவந்தார். ஒருநாள் அனூஷ் கைது செய்யப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டபோது, அதற்கு முன் அவர் ஒரே ஒருவரை மட்டும் சந்திக்கலாம் என சொல்லப்பட, அவர் பார்க்க விரும்பியது சத்ரபியை. அப்போது டீன் ஏஜில் இருந்த சத்ரபியை, அனூஷின் மரணம் வெகுவாக பாதித்தது.

சத்ரபியின் பெற்றோர் அவரை படிப்பதற்காக ஆஸ்திரியா அனுப்பினார்கள். அப்போது முதல் ஐரோப்பாவிலேயே செட்டில் ஆகிவிட்டார் சத்ரபி. அடிப்படையில் அவர் ஒரு கிராஃபிக்ஸ் நாவல் கலைஞர். 2003-ம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘பெர்ஸ்போலீஸ்’ என்ற கிராஃபிக்ஸ் சுயசரிதை உலகின் கவனம் ஈர்த்தது. ஈரான் புரட்சியின்போதும், அதன் பின்னான ஈரான் பற்றியும் தனது நாவலில் நேரடி அனுபவங்களோடு படைத்திருந்தார் சத்ரபி. அந்த நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அதே பெயரில் படமாகி, கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘ஸ்பெஷல் ஜூரி’ விருதும் பெற, சத்ரபி உலகப் பிரபலமானார். தொடர்ந்து சத்ரபி இயக்கிய ‘கேங் ஆஃப் ஜோட்டாஸ்’, ‘த வாய்ஸ்’ ஆகிய படங்கள் அவர் திறமைக்கு சாட்சியாக விளங்க, இப்போது ‘த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற நகைச்சுவை நாவலைத் தழுவி ‘த ஃபகிர்’ படத்தை இயக்குகிறார்.

தன் கலை மூலம், தான் பேச விரும்பும் அரசியலை பேசும் உன்னத வரலாற்றுக் கலைஞர்களின் வரிசையில், கம்பீர பெண் ஆளுமையாக இடம்பிடித்திருக்கிறார் சத்ரபி!

கார்க்கிபவா