Published:Updated:

நாட்டுக்காக... நாடு நாடாக!

நாட்டுக்காக... நாடு நாடாக!

நாட்டுக்காக... நாடு நாடாக!

நாட்டுக்காக... நாடு நாடாக!

நாட்டுக்காக... நாடு நாடாக!

Published:Updated:
நாட்டுக்காக... நாடு நாடாக!

வாள்சண்டை போட்டியில் இந்தியாவின் நம்பர் 1 பிளேயரான பவானிதேவி, சென்னைப் பெண். ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்காக அமெரிக்காவில் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பவரிடம், `ஸ்கைப்'பில் பேசினோம்.

‘‘ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தப்போ, ஒருமுறை கேம்ஸுக்கு பெயர்கொடுக்கப் போனேன். எல்லா கேம்ஸுக்கும் பெயர்பதிவு முடிஞ்சுட, மீதமிருந்த வாள்சண்டை விளையாட்டில் என் பெயரை எழுதினாங்க. அப்படித்தான் இந்த விளையாட்டைக் கத்துக்க ஆரம்பிச்சேன். ரொம்பப் பிடிச்சுப்போக... புதுமையான, த்ரில்லிங்கான இந்த கேமில் அடுத்தடுத்த லெவல்களுக்கு சீக்கிரமே முன்னேறினேன்.

நாட்டுக்காக... நாடு நாடாக!

சென்னையில டென்த் படிச்சுட்டு, கேரளாவுல இருக்கிற கவர்ன்மென்ட் ஸ்போர்ட்ஸ் சென்டர்ல ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ முடிச்சுட்டு, பி.பி.ஏ-வும் முடிச்சேன். போன வருஷம் எம்.பி.ஏ-ல சேர்ந்தேன். நிறையப் போட்டிகள் இருந்ததால, படிப்பை டிஸ்கன்டின்யூ பண்ணிட்டேன். ஒலிம்பிக் போட்டி முடிஞ்சதும், மறுபடியும் ரீஜாயின் பண்ணணும்’’ எனும் பவானி, தன்னுடைய முதல் இன்டர்நேஷனல் போட்டியில் கலந்துகொண்டது, 14 வயதில்.

‘‘துருக்கியில நடந்த அந்தப் போட்டியில, நான் மைதானத்துக்கு மூணு நிமிஷம் லேட்டா போனதால, கலந்துக்க முடியாமப் போச்சு. பெரிய விலை கொடுத்து கத்துக்கிட்ட பாடம் அது எனக்கு! என்னோட முதல் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில ஜூனியர் கேட்டகரியில வெள்ளியும், இன்டிவிஜுவல் பிரிவில் வெண்கலமும் வென்றது மறக்க முடியாத அனுபவம். கடந்த அக்டோபர்ல பெல்ஜியத்துல நடந்த ‘பிளமிஷ் ஓபன்’ வாள்சண்டை போட்டியில போதிய பண உதவி இல்லாததால கலந்துக்க முடியாத நிலை. கடைசி நேரத்துல தமிழக முதலமைச்சர் மூணு லட்சம் பணம் கொடுத்து உதவினதால, அந்தப் போட்டியில கலந்துகிட்டு வெண்கலம் வென்றேன்’’ எனும் பவானி, எப்பி (Epee), சேபர் (Sabre), ஃபாயில் (Foil) என மூன்று பிரிவுகள் இருக்கும் வாள்சண்டை விளையாட்டில், சேபர் இண்டிவிஜுவல் பிரிவில் விளையாடிவருகிறார். போட்டிகளுக்காக நாடு நாடாகப் பயணிக்க வேண்டியிருப்பதால், செலவைத் தவிர்க்க இவர் தாய்நாடு திரும்புவதே இல்லை. ஒரு நாட்டில் போட்டி முடித்துவிட்டு, அங்கிருந்தே அடுத்த போட்டி நடக்கும் நாட்டுக்குக் கிளம்பிவிடுகிறார்.

‘‘ஒவ்வொரு போட்டிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் போக, ஃப்ளைட் செலவே குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஆகும். தவிர விசா, போட்டி என்ட்ரி ஃபீஸ்னு ஏகப்பட்ட செலவு. இதனாலயே சென்னைக்கு, என் வீட்டுக்கு வர்றது ரொம்பக் குறைவு. அதுக்கு ஆகிற ஒரு லட்சத்தை, வேற நாட்டுல நடக்கிற போட்டிக்கான பயணச் செலவுக்கு வெச்சுக்குவேன். ரொம்பக் கஷ்டப்பட்டு, தமிழக அரசோட நிதி உதவி பெற்றுதான் இப்போ அமெரிக்காவில் பயிற்சி எடுத்துட்டு இருக்கேன். என்னை உலகம் முழுக்கத் தனியா அனுப்புற என் வீட்டுக்கு எவ்ளோ தேங்க்ஸ் சொல்றதுனு தெரியல. பயணங்களில் தனிமைதான் என் நிரந்தரத் துணை’’ எனும் பவானி, தான் அமெரிக்காவில் பயிற்சி பெற்றுவரும் அனுபவம் பற்றிச் சொல்லும்போது...

‘‘வாள்சண்டையில உலக சாம்பியன் பட்டம் வாங்கின எட்வர்ட் கார்ஃபேன்டிகிட்ட, அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரத்துல பயிற்சி எடுத்துட்டு இருக்கேன். தன்னோட மாணவர்கள் பலரை ஒலிம்பிக்கில் கோல்டு வாங்கவெச்ச இவர்கிட்ட நான் வந்து சேர்றதுக்கான வாய்ப்பு கிடைச்சதுல ஒரு சுவாரஸ்யமான ஃப்ளாஷ்பேக் இருக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாட்டுக்காக... நாடு நாடாக!

ஒவ்வொரு இன்டர்நேஷனல் வாள்சண்டை போட்டி தொடங்கும் முன்பும், வாள்சண்டை பிரபலமாகாத நாடுகள்ல இருக்கிற பிளேயர்ஸை வரவழைச்சு, கேம்ப் நடத்துவாங்க. அப்படி நானும் 2013-ம் ஆண்டு இத்தாலியில நடந்த கேம்ப்பில் இந்தியா சார்பா கலந்துக்கிட்டேன். அங்க எனக்குப் பயிற்சி கொடுத்த இத்தாலி கோச் ஆல்பர்டோ கால்டோர்டி, ‘நீ நல்லா விளையாடுறே... எதாச்சும் உதவி தேவைன்னா கேளு’ன்னு சொன்னாரு. ‘வர்ற ஏப்ரல் மாசம் சீனாவுல நடக்கவிருக்கிற ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் நான் தேர்வாக, எனக்குப் பயிற்சி வேணும்’னு நான் அவர்கிட்ட கேட்க, அவர் என்னை எட்வர்ட் சார்கிட்ட அனுப்பிவெச்சார்’’ எனும் பவானி, கடந்த ஆறு மாதங்களாக அமெரிக்கவாசத்தில் இருக்கிறார்.

‘‘இந்தியாவில் வாள்சண்டை தோன்றி பல வருஷங்கள் ஆனாலும், இன்னும் வரவேற்பு கிடைக்கல. புனேயில இருக்கிற இண்டியன் ஆர்மி சென்டர்ல, வெளிநாட்டுப் பயிற்சியாளர்களைக் கொண்டு வாள்சண்டை பயிற்சி கொடுக்கப்படுது. ஆனா, அது ஆர்மி ஆண்களுக்கு மட்டும்தான். மேலும், இந்தியாவின் முக்கியமான கேம்ஸ் லிஸ்ட்ல இருந்து வாள்சண்டை போட்டியை எடுத்துட்டதால, இதன் பழைய அடிப்படை நுணுக்கங்கள் மட்டும்தான் இந்தியாவில் வாள்சண்டை பிளேயர்ஸுக்கு கற்றுக்கொடுக்கப்படுது. அதனால்தான் நாம இதில் பின்தங்கியிருக்கோம். ஒலிம்பிக்ல உலக நாடுகளின் பிளேயர்ஸோட போட்டிபோட, அடிப்படை நுணுக்கங்கள் தாண்டியும் நிறைய கிரிட்டிக்கலான யுக்திகளைக் கத்துக்கறது அவசியமாகுது. அதுக்காகதான் இப்படி நாடு நாடா நான் பயிற்சிக்கு ஓடிட்டு இருக்கேன்’’ எனும் பவானி,

‘‘இதுவரை ஒலிம்பிக்கில் வாள்சண்டை பிரிவுக்கு, இந்தியர்கள் யாருமே தகுதிபெற்றது இல்லை. ஆகஸ்ட் மாசம் பிரேசிலில் நடக்கவிருக்கிற ஒலிம்பிக் போட்டியில, இந்தியாவுக்கு தங்கம் வாங்கி பெருமை சேர்க்கணும். என்னோட ஒரே, முதல் குறிக்கோள் அதுமட்டும்தான் இப்போ!’’

- ஸ்கைப்பில் விடைபெறுகிறார், பவானி!

கு.ஆனந்தராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism